Latest Updates
-
காலசர்ப்ப யோகத்தால் இன்று முதல் ஜூன் 23 வரை இந்த 3 ராசிக்கு கஷ்ட காலமா இருக்கும்.. உஷார்.. -
வெயில் மற்றும் மழையால் வீட்டில் புழுக்கமா? இந்த 4 வாஸ்து செடிகள் இருந்தால் குளிர்ச்சியும் பணவரவும் நிச்சயம்! -
கீரை வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா மிளகூட்டல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
1/2 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி ஒருடைம் செய்யுங்க.. ருசி அல்டிமேட்டா இருக்கும்.. -
சூரியன் மிதுன ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மழைக்காலத்தில் வீட்டில் பணமும் ஆரோக்கியமும் குறையாமல் இருக்கணுமா? இந்த 5 வாஸ்து ரகசியங்களை உடனே பின்பற்றுங்க! -
முக்கியமான 5 ஊட்டச்சத்து குறைபாடுகளின் ஆரம்ப அறிகுறிகளும்.. அவற்றை தடுக்கும் உணவுகளும்.. -
சாணக்கியர் கூறும் வெற்றிக்கான 5 அடிப்படை ரகசியங்கள் - இதை பாலோ பண்றவங்க பெரிய ஆளா வருவார்களாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: ஜூன் கடைசி இந்த 4 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. -
செட்டிநாடு கார குழிப்பணியாரமும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
24 மணிநேரமும் ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!
ஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதால், நாளுக்கு நாள் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து, அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிலும் கோடைக்காலத்தில் என்றால் சொல்லவே வேண்டாம். அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுவோம். அந்த அளவில் வெளியே அனல் பறந்து கொண்டிருக்கிறது.
ஆகவே பலர் தங்கள் வீடுகளில் ஏசிக்களை அமைத்து, வீட்டின் சுற்றுச்சூழலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கின்றனர். அதுமட்டுமின்றி, தற்போது பெரும்பாலான அலுவலகங்களில் ஏசிக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி நாள் முழுவதும் ஏசியில் இருந்தால், நன்கு குளிர்ச்சியாக இருந்தாலும், அதனால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பது தெரியுமா?
சுவாரஸ்யமான வேறு: நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? இத ஃபாலோ பண்ணுங்க...
ஆம், ஏசியினால் நல்ல குளிர்ச்சி கிடைத்தாலும், அதனால் பல பிரச்சனைகளை நாம் சந்திப்போம். இங்கு எப்போதும் ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய ஆரோக்கிய பிரச்சனைகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பார்த்து, ஏசியில் அதிகம் இருப்பதை தவிர்த்து, கொஞ்சம் இயற்கை காற்றினையும் சுவாசித்து வாருங்கள்.

நுரையீரல் பாதிப்பு
ஏசியில் இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் நுரையீரல் பாதிப்பு. ஏனெனில் திடீரென்று வெப்பநிலை மாறுவதால், அது நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

சரும பிரச்சனை
அதிக நேரம் ஏசியில் இருந்தால், அது சருமத்தில் வறட்சியை ஏற்படுத்துவதுடன், சளி சவ்வுகளிலும் வறட்சியை ஏற்படுத்திவிடும்.

சுவாசக் கோளாறு
மற்றொரு பிரச்சனை என்றால், சுத்தமான காற்றினை சுவாசிக்க முடியாமல் போவதுடன், மிகவும் குறைவான காற்று சுழற்சியினால், சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.

அலர்ஜி
ஏசி அறையில் சுற்றும் காற்றில் தூசிகள் மற்றும் பூஞ்சைகள் இருப்பதால், அவை அலர்ஜிகளை ஏற்படுத்தி, தும்மலை அதிகரிக்கும்.

எரிச்சல்
ஏசியினால் சருமத்தில் மட்டுமின்றி, தொண்டையிலும் அரிப்புடன் கூடிய எரிச்சல்கள் ஏற்படக்கூடும்.

சளி
ஒரே அறையில் காற்றானது அடைக்கப்பட்டிருப்பதால், ஒருவருக்கு சளி வந்தால், அது மற்றவரை எளிதில் தொற்றக்கூடும். அதிலும் வைரஸ் தொற்றுகள் ஏசி அறையில் எளிதில் பரவக்கூடும்.

கண் பிரச்சனைகள்
ஏசியினால் விழி வெண்படல அழற்சி மற்றும் கண் இமை அழற்சிகள் ஏற்படக்கூடும். அதிலும் காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பவர்களுக்கும் இத்தகைய அழற்சி ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

வெப்பத்தை தாங்க முடியாது
ஏசியிலேயே அதிக நேரம் இருப்பவர்களால், வெயிலில் சிறிது நேரம் கூட இருக்க முடியாது. அப்படி இருந்தால், சருமத்தில் எரிச்சல் ஏற்படுவதுடன், அதிகமாக வியர்க்கவும் செய்யும். அதுமட்டுமின்றி, வைட்டமின் டி குறைபாடுகள் கூட ஏற்படும் வாய்ப்புள்ளது.

அதிகப்படியான சோர்வு
எப்போதும் சோர்வுடன் இருப்பது போல் உள்ளதா? அப்படியானால், அதற்கு காரணம் ஏசி தான். இப்படி அடிக்கடி சோர்வு மற்றும் கடுமையான தலை வலி வந்தால், அதற்கு முக்கிய காரணம் 24 மணிநேரமும் ஏசியில் இருப்பது தான்.



Click it and Unblock the Notifications