Latest Updates
-
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...!
வாழைப்பழத்தை அவசியம் சாப்பிடுவதற்கான சக்தி வாய்ந்த சில காரணங்கள்!!!
வாழைப்பழத்தில் உள்ள பல உடல்நல பயன்கள் மற்றும் அதனை உணவில் சேர்க்க வேண்டிய காரணங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், அதற்கு பிறகு அதனை நீங்கள் பார்க்கும் விதமே மாறிவிடும். ஏனென்றால் வாழைப்பழமானது மன அழுத்தத்தை நீக்க, சுறுசுறுப்பாக்க, ஹேங் ஓவரை போக்க, காலை உடல்நலமின்மையை நீக்க, சிறுநீரக புற்றுநோய், சர்க்கரை நோய், எலும்புத்துளை நோய் மற்றும் கண் தெரியாமை போன்றவற்றில் இருந்து காக்க பெரிதும் உதவுகிறது.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
வாழைப்பழம் என்பது குரங்குகளுக்கு மட்டும் தான் என நீங்கள் நினைத்திருந்தால், மறுபடியும் யோசிக்க வேண்டிய நேரம் இது. இங்கு வாழைப்பழங்கள் சாப்பிடுவதற்கான சக்தி வாய்ந்த சில காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்த பின், நீங்களே தினமும் வாழைப்பழத்தை தவறாமல் வாங்கி சாப்பிட ஆரம்பித்துவிடுவீர்கள்.
வெள்ளை சாதம் சாப்பிடுவதை தவிர்த்தால் கிடைக்கும் நன்மைகள்!!!

மன அழுத்தத்தை நீக்கும்
ட்ரிப்டோஃபன் அதிக அளவுகளில் இருப்பதால் மன அழுத்தத்தை நீக்க வாழைப்பழம் உதவும். ட்ரிப்டோஃபன் செரோடோனினாக (சந்தோஷ மனநிலை மூளை நரம்பியகடத்துகை) மாற்றப்படுவதால் தான் இந்த தாக்கம்.

எனர்ஜி அதிகரிக்கும்
விடாமுயற்சியள்ள உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பாக இரண்டு வாழைப்பழங்களை உண்ணுங்கள். இதனால் உங்களின் ஒவ்வொரு குத்தும் எனர்ஜியுடன் இருக்கும். மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் தாங்கி நிற்கும்.

தசைப்பிடிப்புக்களை தடுக்கும்
உடற்பயிற்சியின் போதும் இரவு நேரம் தூங்கும் போதும் தசை பிடிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்க வாழைப்பழம் உதவும்.

எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும்
சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் கால்சியம் இழப்பை ஈடுகட்டவும் திடமான எலும்புகள் வளரவும் வாழைப்பழம் உதவும்.

மாதவிடாய் காலத்தில் மனநிலை மேம்படும்
வாழைப்பழம் உண்ணுவதால் உங்கள் மனநிலை மேம்பட்டு PMS அறிகுறிகள் குறையும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராகி மன அழுத்தத்தை போக்கும் அமைதியை உண்டாக்கும்.

வெள்ளையணுக்களை உற்பத்தி செய்யும்
வீக்கத்தை குறைத்து, டைப்-2 சர்க்கரை நோயிலிருந்து பாதுகாத்து, உடல் எடை குறைப்பில் உதவி செய்து, நரம்பியல் அமைப்பை திடப்படுத்தி, வெள்ளை இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய வாழைப்பழம் உதவும். அதற்கு காரணம் அதிலுள்ள அளவுக்கு அதிகமான வைட்டமின் பி6.

இரத்த சோகையைத் தடுக்கும்
வாழைப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அது இரத்தத்தை திடமாக்கி இரத்த சோகையை நீக்கும்.

இரத்த அழுத்தம், நெஞ்சு வலி, வாதம்
பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதாலும், உப்பு குறைவாக இருப்பதாலும், இரத்த அழுத்தத்தைடக் குறைக்கவும், நெஞ்சு வலி மற்றும் வாதம் ஆகியவைகளில் இருந்து பாதுகாக்கவும் உதவும் என வாழைப்பழத்தை அதிகாரப்பூர்வமாக FDA அறிவித்துள்ளனர்.

செரிமானத்தை மேம்படுத்தும்
பெக்டின்கள் வளமையாக உள்ளதால், செரிமானத்திற்கு உதவிடும் வாழைப்பழம். நச்சுகள் மற்றும் கனமான அமிலங்களை உடலில் இருந்து மென்மையாக வெளியேற்றும்.

மலச்சிக்கலை தடுக்கும்
மலச்சிக்கலா? வாழைப்பழத்தில் உள்ள அதிகமான நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும்.

வயிற்றுப் போக்கு பிரச்சனை
வயிற்றுப்போக்கா? வாழைப்பழங்கள் உங்கள் செரிமான பாதையை சாந்தப்படுத்தி, வயிற்று போக்கிற்கு பின் நீங்கள் இழந்த எலெக்ட்ரோலைட்டை பெற உதவி புரியும்.

அமில முறிவு பொருள்
வாழைப்பழங்கள் என்பது இயற்கையான அமில முறிவுப் பொருளாகும். இதனால் அமில காயம், நெஞ்செரிச்சல் மற்றும் GERD போன்றவைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

அல்சருக்கு சிறந்தது
வயிற்றில் ஏற்பட்டுள்ள அல்சருக்கு ஆபத்து விளைவிக்காமல் உண்ணக்கூடிய ஒரே பச்சை பழம் வாழைப்பழம். இது ஆபத்தான அமிலங்களில் இருந்து பாதுகாக்க வயிற்றில் ஒரு உட்பூச்சை உருவாக்கி கொள்ளும்.

சிறுநீரக புற்றுநோய்
வாழைப்பழங்கள் உண்ணுவதால் சிறுநீரக புற்றுநோய் ஏற்படமால் பாதுகாக்கும். இதுப்போக கால்சியத்தை உறிஞ்சுவதால் திடமான எலும்புகளை வளர்க்கும்.

குழந்தைகளுக்கு மிகவும் நல்லது
வாழைப்பழம் சுறுசுறுப்பாக மாற்றும். மேலும் விழிப்புடன் வைத்திருக்க உதவுவதால் நன்றாக படிக்கவும் உதவும். அதனால் பரீட்சைக்கு முன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், அதிலுள்ள அதிக அளவிலான பொட்டாசியத்தால் நல்ல பயன் கிட்டும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்
வாழைப்பழத்தில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், இயக்க உறுப்புகள் மற்றும் தீவிர நோய்களில் இருந்து அது உங்களை பாதுகாக்கும்.

காலை சுகவீனத்தை குறைக்கும்
உணவருந்தும் போது வாழைப்பழம் சாப்பிட்டால் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையை சீராக்க உதவும். அதே போல் காலை சுகவீனத்தால் ஏற்படும் குமட்டலையும் குறைக்கும்.

கண்களை பாதுகாக்கும்
வாழைப்பழமானது மாகுலர் திசு செயலிழப்பு ஏற்படாமல் கண்களுக்கு சிறந்த பாதுகாப்பு அளிக்கும்.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் வாழைப்பழம். வாழைப்பழம் சாப்பிட்டால் அளவுக்கு மீறி உட்கொள்வதையும் தவிர்க்கலாம்.

செரிமான நொதிகளை உற்பத்தி செய்யும்
வாழைப்பழங்கள் ப்ரீ-பயோடிக்காக செயல்படுவதால், அது நட்புடைய பாக்டீரியாவை நம் குடலில் வளர்க்க ஊக்குவிக்கும். ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு அவை செரிமான என்சைம்களை உற்பத்தி செய்யவும் உதவும்.

உடல் வெப்பநிலை குறையும்
வாழைப்பழம் சாப்பிட்டால் உடலில் உள்ள வெப்பநிலை குறையும். அதனால் சூடான நாட்களில் அல்லது காய்ச்சல் இருக்கும் போது உடல் குளிர்ச்சியடையும்.

மனநிலை ஊக்குவிக்கி
இயற்கையான மனநிலை ஊக்குவிக்கியாக விளங்கும் ட்ரிப்டோஃபன், சீசனல் அஃபெக்டிவ் டிசார்டரில் (SAD) இருந்து உங்களை காக்கும்.

சிகரெட்டினால் ஏற்படும் தாக்கத்தை தடுக்கும்
புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட வேண்டுமா? வாழைப்பழத்தில் அதிக அளவிலான வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளதால், புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதனால் ஏற்படும் தாக்கத்தில் இருந்து அது விரைவான நிவாரணியை அளிக்கும்.

மருவை நீக்க உதவும்
மருவை நீக்க வாழைப்பழத்தின் உட்புற தோலை அதன் மீது தேய்க்கவும்.

பூச்சிக்கடி எரிச்சலைத் தடுக்கும்
பூச்சிகடியினால் ஏற்பட்டுள்ள எரிச்சலை போக்க வாழைப்பழ தோலை கொண்டு கடிப்பட்ட இடத்தில் தடவலாம்.
இப்போது குரங்குகள் ஏன் சந்தோஷமாக இருக்கிறது என்று புரிகிறதா? ஆகவே வாழைப்பழங்கள் உண்ணுங்கள்!



Click it and Unblock the Notifications











