Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள்!!!
குடலிறக்கம் என்பது ஒரு உறுப்பில் உள்ள துவாரத்தின் வழியே அதன் தசைச்சுவரில் ஏற்படும் புடைப்பாகும். இத்தகைய குடலிறக்கம் தொப்புள், அடிவயிறு போன்ற இடங்களில் உள்ள தசைப்பகுதிகளில் ஏற்படக்கூடியது. மேலும் இந்த பிரச்சனை சிறுவர் முதல் பெரியவர் வரை என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இந்த ஹெர்னியா என்னும் குடலியக்கம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன.
மேலும் குடலிறக்கம் வந்தால், வயிற்றில் புடைத்த நிலையில் கட்டி உண்டாவதோடு, கடுமையான வலியையும் சந்திக்க நேரிடும். சில நேரங்களில் இந்த புடைப்பால் குடலானது நகர முடியாமல் மாட்டிக் கொண்டு, குடல் அடைப்பு அல்லது குடலானது அழுகிப் போகும் வாய்ப்பும் உள்ளது. இந்த ஹெர்னியா என்னும் குடலிறக்கத்தில் நிறைய வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அறிகுறிகளைக் கொண்டிருக்கும். இத்தகைய ஹெர்னியா இருந்தால், உடல் எடை அதிகரிப்பது, கல்லீரல் நோய், தொடர்ச்சியான இருமல், மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்.
இப்போது அந்த குடலிறக்கத்தை சரிசெய்யும் சில இயற்கை வைத்தியங்களைப் பார்ப்போம்.

அதிமதுரம்
குடலிறக்கத்திற்கு அதிமதுரம் ஒரு சிறந்த நிவாரணி. அதற்கு ஒரு ஸ்பூன் அதிமதுர பொடியை 1/2 கப் பாலில் போட்டு கலந்து, வாரத்திற்கு ஒரு முறை குடிக்க வேண்டும். இதனால் அது பாதிப்படைந்த பகுதியில் உள்ள புடைப்பை நீக்கிவிடும்.

இஞ்சி
இஞ்சி கூட குடலிறக்கத்தை சரிசெய்யப் பயன்படும். அதிலும் குடலிறக்கத்தால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்த, ஒரு கப் இஞ்சி டீயை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இருப்பினும் இதனை அளவாக குடிப்பது நல்லது. இல்லாவிட்டதது அது வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

சீமைச் சாமந்தி டீ
வெதுவெதுப்பான டீயை, அதிலும் சீமைச்சாமந்தி டீயை அவ்வப்போது குடித்து வந்தால், குடலிறக்கத்தால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இல்லாவிட்டால் ப்ளாக் டீ குடித்தாலும், ஹெர்னியாவை பிரச்சனையை சரிசெய்யலாம்.

மோர்
ஹெர்னியா இருந்தால், ஒரு நாளைக்கு மூன்று முமுறை மோரைக் குடித்து வந்தால், நிச்சயம் குடலியக்கத்தால் ஏற்படும் வலியை தடுக்கலாம். இது டீ பிடிக்காதவர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக விளங்கும்.

தண்ணீர்
ஹெர்னியா பிரச்சனை இருப்பவர்கள், அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருக வேண்டும். இதனால் குடலிறக்கத்தால் ஏற்படும் வலி குறைந்துவிடும்.

பழங்கள்
பழங்களில் அவகேடோ மற்றும் அன்னாசி போன்றவற்றை குடலிறக்கத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் போது சாப்பிட வேண்டும். இதனால் அவை புடைப்பு குறைப்பதோடு, வலியையும் சரிசெய்யும்.

பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகளான ப்ராக்கோலி, முட்டைகோஸ் மற்றும் பாகற்காய் போன்றவற்றை தினமும் உணவில் சேர்க்க வேண்டும். இதனால் அவை தசைகளை வலிமையடையச் செய்து, குடலிறக்கத்தால் உள்ளுறுப்புகள் பாதிக்காதவாறு பாதுகாக்கும்.

பால்
ஹெர்னியா இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாலில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

க்ரீன் டீ
டீயிலேயே க்ரீன் டீ தான் ஹெர்னியாவை குணப்படுத்துவதில் சிறந்தது. ஆகவே தினமும் இரண்டு முறை க்ரீன் டீயை குடிக்க வேண்டும்.

கோதுமை பொருட்கள்
குடலிறக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள், உணவில் கோதுமை பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் குடலியக்கம் சீராக செயல்பட்டு, வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
