Latest Updates
-
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும்
இரத்த சோகை இருப்பதற்கான சில அறிகுறிகள்!!!
உடலில் இரத்தத்தின் அளவானது குறைவாக இருந்தால், அதனை இரத்த சோகை அல்லது அனீமியா என்று சொல்வார்கள். ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், அவற்றை ஒருசில அறிகுறிகளை வைத்தே சரியாக சொல்லலாம். மேலும் இந்த அனீமியாவானது உடலில் ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவை சரியான ஊட்டசசத்துக்கள் இல்லாதது, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவை.
சில நேரங்களில் இரத்த சோகையானது, ஒரு சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கும். அதிலும் இரத்த சோகையானது அடிக்கடி காணப்பட்டால், அது மஞ்சள் காமாலை, புற்றுநோய் அல்லது எய்ட்ஸ் போன்றவற்றின் அறிகுறியாகவும் இருக்கும். எனவே உடலில் இரத்த குறைவாக உள்ளதா, இல்லையா என்பதை சரியாக கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
எனவே இத்தகைய இரத்த சோகையை கண்டுபிடிப்பதற்கு ஒருசில அறிகுறிகள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். சரி, இப்போது உடலில் இரத்த குறைவாக இருந்தால், என்ன அறிகுறிகள் இருக்கும் என்று பார்ப்போமா!!!

நிறமற்ற கண்கள்
உடலில் இரத்தம் இருக்கிறதா இல்லையா என்பதை கண்களை வைத்து தெரிந்து கொள்ளலாம். அதற்கு கண்ணின் கீழ் இமையை கீழே நோக்கி இழுக்கும் போது, அடியில் உள்ள பகுதியானது சிவப்பு நிறத்தில் இல்லாமல், நிறமற்று காணப்பட்டால், இரத்த சோகை என்று தெரிந்து கொள்ளலாம்.

சோர்வு
உடலில் சோர்வானது தொடர்ந்து ஒரு மாதமாக இருந்தால், உடலில் இரத்தத்தின் அளவானது குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

குமட்டல்
ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாதவாறு மயக்கம் அல்லது குமட்டல் போன்றவை ஏற்படும்.

தலை வலி
அனீமியா இருப்பவர்கள் அடிக்கடி சொல்வது தலை வலிக்கிறது என்று தான். ஏனெனில் உடலில் இரத்தமானது குறைவாக இருப்பதால், மூளைக்கு தேவையான இரத்தம் செல்லாமல், தலை வலியை உண்டாக்குகிறது.

வெள்ளையான விரல்கள்
ஒருவர் ஆரோக்கியமாக உள்ளாரா என்பதை விரல்களை அழுத்தும் போது தெரிந்துகொள்ளலாம். எப்படியெனில் அவ்வாறு அழுத்தும் போது, இரத்தமானது விரல் முனைகளுக்கு வரும். ஆனால் இரத்த சோகை உள்ளவர்களின் விரல்களை அழுத்தினால், எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், வெள்ளையாகவே இருக்கும். எனவே இதனை வைத்தும் தெரிந்து கொள்ளலாம்.

மூச்சு திணறல்
இரத்த சோகை இருந்தால், சரியாக சுவாசிக்க முடியாது. ஏனெனில் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் இரத்தமானது குறைவாக இருப்பதால், சிறிது தூரம் நடந்தாலும், அதிகமாக மூச்சு வாங்கும்.

படபடப்பு
எப்போது உடலில் இரத்தத்தின் அளவானது குறைவாக உள்ளதோ, அப்போது மூச்சு திணறல் மற்றும் குறைவான ஆக்ஸிஜன் இதயத்திற்கு கிடைப்பதால், இதயம் எப்போதும் படபடப்புடன் இருக்கும். சொல்லப்போனால், அப்போது இதயத் துடிப்பானது அதிக அளவில் இருக்கும்.

வெளுப்பான சருமம்
இரத்த சோகை இருந்தால், சருமம் ஒரு மஞ்சள் நிறம் கலந்த ஒருவித வெள்ளை நிறத்துடன் காணப்படும். இவ்வாறு இருந்தால், அனீமியா என்று பொருள்.

கூந்தல் உதிர்தல்
இரத்தம் குறைவாக இருந்தால், ஸ்கால்ப்பிற்கு வேண்டிய இரத்த ஓட்டமானது குறைவாக இருப்பதால், ஸ்கால்ப்பிற்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், கூந்தல் உதிர ஆரம்பிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
இரத்தமானது குறைவாக இருப்பதால், உடலுக்கு வேண்டிய சக்தியானது கிடைக்காமல், நோய் எதிர்ப்பு சக்தியானது குறைந்து, அடிக்கடி உடல் நிலையானது சரியில்லாமல் போகும். எனவே இதை வைத்தும் அனீமியா என்று தெரிந்து கொள்ள முடியும்.



Click it and Unblock the Notifications
