Latest Updates
-
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...!
அதிக நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டால், உடலில் ஏற்படும் பிரச்சனைகள்!!!
நாம் ஆரோக்கியமான உடல்நலத்தை பெறுவதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாது நமது உடலை பிட்டாக வைப்பதற்கு அன்றாடம் உடற்பயிற்சியை மேற்கொள்ளவேண்டும். வழக்கமான உடற்பயிற்சியின் மூலமாக நமக்கு ஏற்படும் நோய்களிடம் இருந்து விடுபடலாம். அதனால், அளவான உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து நமது உடலை ஆரோக்கியமாக வைக்கலாம்.
வழக்கமாக உடற்பயிற்சி மேற்கொள்ளுவது நமது உடலை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைப்பதற்கு உதவி புரியும். உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலம் நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்து குறைவது மட்டுமல்லாமல் நம்மை நோய்களிடம் இருந்து பாதுகாக்க உதவும். ஆனால், அதிகமான உடற்பயிற்சி மேற்கொள்ளுவது எதிர்மறையான விளைவுகளை தரக்கூடும். உடற்பயிற்சி அதிகமாக செய்வதால் அது நமக்கு இரட்டிப்பு பலனை அளிக்காது. அதிகமான உடற்பயிற்சி நமது உடலை எளிதில் தளர்வடையச் செய்துவிடும். மேலும், நமது உடல் வலிமையை குறைத்து மனஅழுத்தத்தை அதிகரித்து விடும்.
நீங்கள் உங்கள் அன்றாட வாழ்வில் தனித்தன்மை வாய்ந்த உடற்பயிற்சி திட்டத்தை மேற்கொள்ள நினைத்தால், தேர்ச்சியடைந்த உடற்பயிற்சி பயிற்சியாளரை அணுகி உதவி பெறலாம். நீங்கள் இந்த திட்டத்தை மேற்கொள்ளுவதற்கு முன் நமது உடல்நிலை இதற்கு ஒத்துழைக்குமா எனத் தெரிந்து கொள்ளுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதிகமான உடற்பயிற்சி நமது உடலில் சில முன்னெச்சரிக்கை அறிகுறிகளை ஏற்படுத்தும். இது உடல்ரீதியான அல்லது மனரீதியான அறிகுறிகளாக இருக்கலாம்.
உங்கள் உடலில் ஏற்படும் இந்த அறிகுறிகளை கவனமாக கண்டறிய வேண்டும். அதிகமான உடற்பயிற்சியால் ஏற்படும் பொதுவான சில அறிகுறிகளை இப்பொழுது படிக்கலாம். இதன் மூலமாக நமது உடல் நாம் திட்டமிட்டிருக்கும் உடற்பயிற்சியை மேற்கொள்ளவதற்கு ஒத்துழைக்குமா எனத் தெரிந்து கொள்ளலாம்.

சோர்வடையச் செய்யும்
உடற்பயிற்சியின் விளைவாக நீங்கள் புத்துணர்வு அடைவதற்கு பதிலாக சோர்வடைந்தால் அது உங்களது உடலானது நீங்கள் உடற்பயிற்சி அதிகமாக செய்வதை வெளிக்காட்டும் அறிகுறியாக இருக்கும். களைப்பின் காரணமாக நீங்கள் உங்கள் உடற்பயிற்சியை தொடர முடியாவிட்டால், அது நீங்கள் அதிகமாக மேற்கொண்ட உடற்பயிற்சியின் விளைவாக ஏற்பட்ட உடல் சோர்வை எடுத்து காட்டுகின்றது.

களைப்பு
அதிக உடற்பயிற்சியின் விளைவாக தொடக்க நிலைகளில் அதிக களைப்பும் அயர்ச்சியும் ஏற்படக்கூடும். இறுதி நிலைகளில் இதன் விளைவாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் செயல்திறன் குறைந்து உங்கள் உடல் இதனை தொடருவதற்கு ஒத்துழைக்க மறுத்துவிடும்.இவை அனைத்தும் அதிக உடற்பயிற்சி மேற்கொள்ளுவதால் ஏற்படும் பொதுவான அறிகுறிகளாகும்.

ஹார்மோன் சமநிலையின்மை
அதிகமான உடற்பயிற்சி ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரது உடலிலும் ஹார்மோனல் சமநிலையின்மையை ஏற்படுத்தக்கூடும். பெண்களின் ஒழுங்கான மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். அதிக உடற்பயிற்சியின் விளைவாக நமது உடலில் மனஅழுத்த ஹார்மோனான கார்டிசாலின் அளவை அதிகரிக்கச்செய்து ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும்.

தசை வலி
நீங்கள் முதன் முதலில் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது தசை வலி ஏற்படுவது பொதுவான ஒன்றாகும். ஆனால், இந்த வலி எந்த மாற்றமும் அடையாது தொடர்ந்துவந்தால், உங்கள் உடற்பயிற்சியில் சிறிது கவனம் கொள்ள வேண்டும். இது நீங்கள் அதிகமான உடற்பயிற்சி செய்வதை எடுத்து காட்டுகின்றது.

உணர்ச்சிபூர்வமான மனஅழுத்தம்
அதிகமான உடற்பயிற்சி உங்கள் உடலை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மனதையும் பாதிக்ககூடும். நீங்கள் அந்த உடற்பயிற்சியை மேற்கொள்ள முடியாமல் போகும்போது மன ரீதியான இறுக்கமும் மனஅழுத்தம் ஏற்படக்கூடும். இது நீங்கள் அதிகமாக உடற்பயிற்சி மேற்கொள்ளுவதன் விளைவாக ஏற்படும் மனரீதியான அறிகுறிகளில் ஒன்றாகும்.

குணமடைதலில் தாமதம்
பொதுவாக உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தால் குணமடைவதற்கு சிறிது காலம் மட்டுமே போதுமானதாக இருக்கும். ஆனால், உங்கள் உடலில் ஏற்படும் தளர்ச்சியும் அயர்ச்சியும் குணமடைவதற்கு நீண்ட காலம் எடுத்தால், அது நீங்கள் அதிகமான உடற்பயிற்சி மேற்கொள்ளுவதை தெரிவிக்கின்றது.

தூக்கமின்மை
அதிக உடற்பயிற்சி உங்களது சீரான தூக்கத்தை பாதிக்ககூடும். அதிகமான உடற்பயிற்சியால் உங்கள் உடல்வளம் மற்றும் மனவளம் இரண்டுமே பாதிப்படையும். நன்றாக உறங்குவதற்கு பதிலாக சோர்வும் தூக்கமின்மையும் ஏற்படக்கூடும்.

ஆர்வமின்மை
அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியை தொடர்ந்தால், ஆர்மின்மை ஏற்படும். அதிலும் இது உடலளவிலும் சரி, மனதளவிலும் சரி உடற்பயிற்சியை செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும்.

நீர் நீக்கம்
உடற்பயிற்சியின் போது தேவையான தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதிகமான உடற்பயிற்சி செய்தால் அது நமது உடலில் நீர் நீக்கத்தை ஏற்படுத்திவிடும்.

நோயெதிர்ப்பு செயல்பாடு குறைதல்
அதிக உடற்பயிற்சியின் விளைவுகள் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கக்கூடும். இதனால் நமது தொற்றுநோய்களும் வீக்கங்களும் ஏற்படக்கூடும். மேலும், இவை குணமடைய நீண்ட காலம் ஆகும். அதனால் நமது உடலில் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை கவனமாக கண்காணித்து வரவேண்டும்.



Click it and Unblock the Notifications











