Latest Updates
-
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா?
பெண்கள் ஜிம்முக்கு செல்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!
ஜிம்களுக்கு சென்று உடற்பயிற்சி செய்வது ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் நற்பயன்கள் தருவதாகும். ஆனால், இருபாலருக்கும் ஏற்ற சில உடற்பயிற்சிகள் உள்ளன. பேண்கள் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதால் அவர்களுடைய உடல் எடை வெகுவாக குறைந்து விடும். ஏரோபிக்ஸ், பளு தூக்குதல், கார்டியோ மற்றும் உடலை நீட்டி வளைத்து செய்யும் ஸ்ட்ரெச்சிங் போன்றவை பெண்களுக்கு மிகவும் ஏற்ற உடற்பயிற்சிகளாகும். இந்த உடற்பயிற்சிகள் பெண்களுக்கு வலிமையையும், வளைந்து கொடுக்கும் தன்மையையும் கொடுக்கின்றன. மேலும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இவை உதவுகின்றன.
இந்நாட்களில் மிகவும் முக்கியமாக செய்ய வேண்டிய விஷயங்களாக ஜிம் உடற்பயிற்சிகள் உள்ளன. எளிதாக செய்யக்கூடிய பயிற்சிகள் பலவும் இருப்பதால் பெண்கள் அதிக அளவில் உடலை வருத்தவும் தேவையில்லை. முந்தைய தலைமுறைகளில் பெண்கள் அனுபவித்த பல உடல் ரீதியான வலிகளை போக்க இந்த உடற்பயிற்சிகள் உதவுகின்றன. உடல் வலிகள் போனாலும், மன அழுத்தத்திலிருந்து பெண்கள் இன்னும் மீளவில்லை.
உடல் மற்றும் மனதனளவிலான ஆரோக்கியத்தைப் பராமரிக்க விரும்புபவர்கள் ஜிம்களில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஜிம் உடற்பயிற்சிகள் பெண்களுக்கு ஏன் உதவுகின்றன என்ற கேள்விக்கு பல பதில்கள் உள்ளன. அந்த பதில்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

'பிட்' ஆன உடல்
ஜிம்களில் உடற்பயிற்சி செய்வதால் உடல் ஃபிட் ஆகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். தொப்பை, இதயக் கோளாறுகள் மற்றும் நீரிழிவு போன்ற பிரச்னைகள் வருவதைத் தவிர்க்க விரும்பும் பெண்கள் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம். உடற்பயிற்சிகள் செய்வதால், நமது உடலின் சக்தி அளவுகள் அதிகரிக்கின்றன. உடற்பயிற்சிகள் செய்வதால் செல்கள் மற்றும் தசைகளில் ஏற்பட்ட சேதங்கள் சரி செய்யப்படுகின்றன மற்றும் உடல் உறுப்புகள் மீண்டும் பலம் பெறுகின்றன. உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருக்கும் பெண்கள் தங்கள் குடும்பத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப்பார்கள். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்புவர்கள் உடற்பயிற்சியின் பலனை எளிதில் உணர்ந்திருப்பார்கள். இந்த வகையில் நாள் தோறும் உடற்பயிற்சி செய்யும் பெண்கள் மிகவும் புத்துணர்வுடன், உற்சாகத்துடனும் இருப்பார்கள்.

எடை குறைப்பு
ஜிம் உடற்பயிற்சிகளால் பெண்களின் உடல் எடை குறையும். பெரும்பாலான பெண்கள் தங்களுடைய தேகத்தை மெலிதாக வைத்துக் கொள்வதன் மூலம் கவர்ச்சியாக இருக்க முனைகிறார்கள். இந்த நோக்கத்தை அடைய ஜிம்மிங் மிகவும் உறுதுணையாக இருக்கும். இந்த உடற்பயிற்சிகள் உடலின் எடையைக் குறைப்பதுடன், சதைகளின் அளவையும் அதிகப்படுத்துகின்றன. வயிறு, தொடை மற்றும் கைகள் ஆகிய இடங்களில் உள்ள சதைகளை குறைக்க ஜிம் உடற்பயிற்சிகள் மிகவும் ஏற்றவையாகும்.

நன்றாக சாப்பிடலாம்
நீங்கள் சாப்பிடுவதை ஆரோக்கியமாக வைத்திருக்க ஜிம்மிங் உதவுகிறது. இதன் மூலம் சாப்பிடும் உணவின் அளவு குறைக்கப்பட்டு, நீங்கள் பகுதி பகுதியாக சாப்பிட தொடங்குவீர்கள். மேலும், கொழுப்புச்சத்து மிகுந்த உணவுகளாக இருக்கும் பாலாடை மற்றும் பிற உணவுகளை சாப்பிடவும் நீங்கள் தயங்க வேண்டியதில்லை. ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்யும் போது நீங்கள் சாப்பிட்ட கொழுப்புகளில் பெருமளவு கரைக்கப்பட்டு விடுகிறது. உங்கள் உணவில் ஒரு ஒழுங்குமுறையை கொண்டு வரவும், உங்கள் வாழ்வில் தொடர்ந்து நல்ல பழக்கங்களை உருவாக்கவும் ஜிம்மிங் உதவுகிறது.

உடல் வலிமை
பெண்களின் பாதுகாப்பு பெருமளவு குறைந்து வரும் இந்த காலத்தில் அவர்களுடைய உடல் வலிமையாக இருக்க வேண்டியதும் அவசியமாகும். எனவே, வெளியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் மற்றும் கற்பழிப்புகள் போன்றவற்றை எதிர்த்து தாக்குதல் தொடுக்க அவர்கள் உடற்பயிற்சிகள் செய்து உடலை வலிமையாக வைத்திருக்க வேண்டும். பளு தூக்குதல் போன்ற உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் பெண்களின் உடல் வலிமையடைகிறது. பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவே உதவும் சில பிரத்யோகமான உடற்பயிற்சிகள் உள்ளன.

இதுவல்லவோ வாழ்க்கை
ஜிம்மிங் என்பது ஒரு வகையான உடல் ரீதியான பயிற்சி தான். இந்த உடற்பயிற்சிகள் மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோன்களை குறைக்கவும் மற்றும எண்டோர்பின்களை அதிகரிக்கவும் செய்கின்றன. என்டோர்பின் என்பது உடலை புத்துணர்வாக வைக்க உதவும் ஹார்மோனாகும். ஊடற்பயிற்சி செய்வதால் மன அழுத்தமும் குறைகிறது. நீங்கள் உடற்பயிற்சிகள் செய்த பின்னர் நீங்கள் ஓய்வாக இருப்பதையும், மகிழ்ச்சியுடன் 'இதுவல்லவோ வாழ்க்கை' என்று மகிழ்ச்சியுடன் இருப்பதையும் உணருவீர்கள்.

ஆரோக்கியமான இதயம்
இதயத்தின் வேலை செய்யும் திறனை ஜிம் பயிற்சிகள் வெகுவாக மேம்படுத்துகின்றன. இதயத் துடிப்பை உயர்த்தும் கார்டியோ என்ற சிறப்பு உடற்பயிற்சிகளும் மற்றும் உடலின் உறுப்புகளை சிறப்புற பணி செய்ய வைக்கும் உடற்பயிற்சிகளும் ஜிம்களில் கற்றுத் தரப்படுகின்றன. நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் உடலிற்குள் சென்று வரும் ஒட்டுமொத்த ஆக்ஸிஜன் சுழற்சி செயல்பாடுகள் மேம்படுத்தப்பட்டு, உடலின் அமைப்பு உறுதிப்படுத்தப்படுகிற. ஆரோக்கியமான இதயம் ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும்.



Click it and Unblock the Notifications
