மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

Posted By: Staff
Subscribe to Boldsky

பருவமடைதல் என்பது இறைவனால் பெண்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு இனிமையான நிகழ்வு ஆகும். அதிலும் அது பெண்ணின் உடல் செயல்பாட்டில் ஏற்படுத்தும் அற்புதமான பருவ மாறுதலின் பகுதியாக மாதவிடாய் உள்ளது. சில பெண்கள் மாதவிடாயின் போது வழக்கத்திற்கு மாறாக அதிக இரத்தப்போக்கை அனுபவிக்கக்கூடும். இது மாதவிடாய் மிகைப்பு என்று அழைக்கப்படுகிறது. இதனால் சில நேரங்களில், இந்த மாதிரியான இரத்தப்போக்கு சாதாரணமானதா அல்லது இல்லையா என்று யோசிக்க வைக்கிறது.

இத்தகைய இரத்தப்போக்கு இயல்பானதல்ல என்று எப்போது புரியும் என்று தெரியுமா? இதனை உபயோகிக்கும் பேடுகளை ஒரு நாளைக்கு எத்தனை முறைகள் மாற்றுகின்றோம் என்பதனை கணக்கில் கொள்வதன் மூலம் அறியலாம். ஒருவருக்கு மாதவிடாய் மிகைப்பு (அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு) என்று தெரிய வந்தால், அந்த காலத்தின் போது, கண்டிப்பாக பெரும்பாலும் 1-2 மணிநேரத்திற்கு ஒருமுறை பேடுகளை மாற்றகூடும் அல்லது ஒரு வாரம் முழுவதும் நிறைய இரத்தப்போக்கு இருந்திருக்கக்கூடும் என்பதாகும்.

சரி, இத்தகைய அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று தெரியுமா? அப்படி தெரியாவிட்டால், கீழே தொடர்ந்து படித்து பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹார்மோன் சமநிலையின்மை

ஹார்மோன் சமநிலையின்மை

பருவ வயதிலோ அல்லது மாதவிடாய் நிறுத்தத்திற்கான காலத்திலோ, ஹார்மோனின் சமநிலையின்மையால் ஏற்படுவதே மிகவும் பொதுவான காரணமாக உள்ளது. பருவ வயதில் முதல் முறையாக ஏற்பட்ட மாதவிடாய்க்கு பின்னர் மற்றும் மாதவிடாய் நிறுத்தம் தொடங்குவதற்கு ஒரு சில வருடங்களுக்கு முன்பிருந்தே, ஹார்மோன்களின் அளவு மாறிக்கொண்டே இருப்பதால், கடுமையான இரத்தப்போக்கு ஏற்படுகிறது. இத்தகைய ஹார்மோன் சமநிலையின்மையை பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் அல்லது மற்ற ஹார்மோன் ஏற்றத்தாழ்வு சிகிச்சைகள் மூலம் பெரும்பாலும் சரிச்செய்யப்படுகிறது.

கருப்பையில் ஏற்படும் நார்த்திசுக் கட்டிகள்

கருப்பையில் ஏற்படும் நார்த்திசுக் கட்டிகள்

தயவு செய்து கவனத்தில் கொள்ளுங்கள். இந்த நார்த்திசுக் கட்டிகள் தீங்கற்றதாகவும், பெரும்பாலும் வயதின் அடிப்படையில் காணும் போது அவைகள் 30-40 வயதுகளில் ஏற்படுகிறது. இதற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் இதற்காக எடுத்துக் கொள்ளப்படும் சில நடவடிக்கைகளாவன தசைக்கட்டி நீக்கம், கருப்பை நீக்கம், கருப்பையின் தமனியை அறுவை சிகிச்சை முறையில்லாமல் கதிரியக்க முறையில் சிகிச்சை அளிக்கப்படுதல் மற்றும் கருப்பைக்குரிய பலூன் சிகிச்சை மற்றும் கருப்பை நீக்கம் முதலியன ஆகும். ஆனால் ஒருமுறை மாதவிடாய் நின்றுவிட்டால், இத்தகைய கட்டிகள் சுருங்கி மற்றும் சிகிச்சை இல்லாமல் மறைந்துவிடும்.

கர்ப்பப்பை முகப்பு கட்டிகள்

கர்ப்பப்பை முகப்பு கட்டிகள்

கர்ப்பப்பை முகப்பில் சீதச்சவ்வில் சிறியதான கட்டிகள் அல்லது கருப்பையின் முகப்பிற்குள் நீட்டிக் கொண்டு மேற்பரப்பில் வளரும் கட்டிகளே கர்ப்பப்பை முகப்பு கட்டிகளாகும். இதற்கான காரணமும் இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் பெரும்பாலும் தொற்றுநோய் காரணமாகவும், ஈஸ்ட்ரோஜன் அல்லது கருப்பை இரத்த குழாய்களின் தொடர்புடையதான அடைப்பு அதிகரித்துள்ளதாலும் ஏற்படலாம் என்று கூறுகின்றனர். கர்ப்பப்பை முகப்புக் கட்டிகளால் அவதியுறும் பெரும்பாலான பெண்கள், 20 வயதும் மற்றும் குழந்தைப் பெற்றவர்களாகவும் இருக்கின்றனர். இதற்கு பொதுவாக புறநோய்க்கான சிகிச்சையே அளிக்கப்படுகிறது.

கருப்பையின் உள்ளே ஏற்படும் கட்டிகள்

கருப்பையின் உள்ளே ஏற்படும் கட்டிகள்

கருப்பையின் மேற்பரப்பில் இணையாமல் தனித்து நின்று வளரும் கட்டிகள் புற்றுநோய் கட்டிகள் அல்ல. இதற்கான காரணமும் தெரியவில்லை. இருப்பினும் அதனை பெரும்பாலும் அதிக எஸ்ட்ரோஜன் அளவுகளினாலும் அல்லது கரு சார்ந்த தொடர்புடைய சில வகையான கட்டிகளுடனும் இணைத்துப் பார்க்கின்றனர்.

லூபஸ் நோய்

லூபஸ் நோய்

லூபஸ் என்பது குறிப்பாக உடலின் தோல், மூட்டுகள், குருதி, சிறுநீரகங்கள் மற்றும் உடலின் அணுக்களையே தாக்கி அழிக்கும் நிலையை ஏற்படுத்தும் ஒரு வகையான கடுமையான வீக்கம் ஆகும். லூபஸ் ஒரு மரபியல் காரணங்களால் ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது. மேலும் விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் காரணிகளாலும், நோய்த்தொற்று, நுண்ணுயிர் கொல்லிகள், புற ஊதா கதிர்கள், கடுமையான மன அழுத்தம், ஹார்மோன்கள் மற்றும் மருந்துகளினாலும் லூபஸ் நோயின் அறிகுறிகள் தூண்டப்படுகிறது என்று நம்புகிறர்கள்.

இடுப்பெலும்பு அழற்சி நோய் (PID)

இடுப்பெலும்பு அழற்சி நோய் (PID)

இது கருப்பை, கருமுட்டை குழாய்கள் மற்றும் கருப்பை முகப்பு பாதிப்பு போன்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புக்களில் ஏற்படும் ஒரு வகை தொற்றுநோய் ஆகும். இடுப்பக அழற்சி நோய் பெரும்பாலும் ஒரு பால்வினை தொற்றுநோயால் ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. இதற்கு PRP சிகிச்சையால் பரிந்துரைக்கப்படும் ஆன்டி-பயாடிக் சிகிச்சையே இதற்கான சிகிச்சை ஆகும்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

கர்ப்பப்பை முகப்பு செல்கள் நியதிக்கு மாறாக மற்றும் கட்டுப்பாட்டை மீறி பெருக்கமடைந்து, ஆரோக்கியமான உடல் பாகங்களுக்கு அழிவை ஏற்படுத்துகிறது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கிட்டத்தட்ட 90%-க்கும் மேலான மனித பாபில்லோமா வைரஸால் ஏற்படுகிறது. இதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகளாவன அறுவை சிகிச்சை, ஹீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை ஆகியவைகள் ஆகும்.

கருப்பை புற்றுநோய்

கருப்பை புற்றுநோய்

பெண்கள் பொதுவாக 50 வயதுக்கு மேல், கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முதலில் கருப்பையை நீக்கி, அதனை தொடர்ந்து செய்யப்படும் ஹீமோதெரபி அல்லது கதிர்வீச்சாலும் சரிசெய்யலாம்.

கருத்தடைச் சாதனங்கள்/கருப்பையகக் கருவிகள்

கருத்தடைச் சாதனங்கள்/கருப்பையகக் கருவிகள்

பெண்கள் பயன்படுத்தும் கருத்தடைச் சாதனங்களால் மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. அப்படியெனில் உடனடியாக கருத்தடைச் சாதனங்களை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக மற்ற வேறு பொருத்தமான முறைகளை பயன்படுத்த வேண்டும்.

இரத்தப்போக்கு ஒழுங்கின்மை

இரத்தப்போக்கு ஒழுங்கின்மை

இரத்தப்போக்கு கோளாறுகளினால் பொதுவாக இரத்தம் உறைவதற்கு கஷ்டமாக இருப்பதால், அது அதிக இரத்தப்போக்கை விளைவிக்கலாம். மேலும் தேசிய இதய, நுரையீரல் மற்றும் இரத்த நிறுவனத்தின் கூற்றுப்படி, வோன் வில்லிப்ராண்ட் நோயானது இரத்தப்போக்கு கோளாறினால் ஒழுங்கான இரத்த உறைவு ஏற்படாத காரணத்தினால் உண்டாகிறது என்று கூறப்படுகிறது. இந்த நோய் உள்ளவர்களுக்கு, இரத்தம் உறைதல் நியதிக்கு மாறாக குறைந்த அளவாகவே இருக்கும். இரத்த மெலிவூட்டியை எடுத்துக் கொள்ளும் பெண்கள், கடுமையான அதிக இரத்தப்போக்கை சந்திக்க நேரிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons for Heavy Menstrual Bleeding

Some women may experience unusually heavy bleeding during menstruation. This is known as menorrhagia. Sometimes we often wonder if uterine bleeding is normal or not.
Story first published: Wednesday, August 21, 2013, 18:08 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter