நல்ல ஆரோக்கியத்திற்கு தேவையான இயற்கையான இரத்த தூய்மையாக்கிகள்!!!

By Ashok CR

இரத்தம் என்பது நமது உடலில் உள்ள முக்கியமான மூலப்பொருளாகும். ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜெனை உடலில் உள்ள உறுப்புகளுக்கு எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது இரத்தம். உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் ஒழுங்காக செயல்பட இரத்தத்தை தான் முழுமையாக நம்பியுள்ளது. அதனால் தான் நோய் மற்றும் இதர பிரச்சனைகளால் இரத்தம் பாதிக்கப்பட்டால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது. இயற்கையாக இரத்தத்தை தூய்மைபடுத்தும் உணவை இரத்த தூய்மையாக்கி உணவு என்றும் கூறுகின்றனர். இதனை உண்ணுவதால் உங்கள் உடலின் இரத்த ஓட்டத்தில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் மாசு நீங்கும்.

உடலில் உள்ள ஆபத்தான நச்சுப் பொருட்களை சுத்தம் செய்ய வேண்டுமானால் அதற்கு உணவு தான் சிறந்த மருந்தாக விளங்கும். பழங்கள், காய்கறிகள், மூலிகை செடிகள், மசாலாப் பொருட்கள், இரத்த சுத்தரிப்பான் பானங்கள் மற்றும் தேநீர் போன்றவைகளை பயன்படுத்தி இரத்தத்தை சுத்தப்படுத்தலாம்.

தூய்மை கேடு, உணவில் சேர்க்கப்படும் தீவன உபப் பொருட்கள், பிறர் பிடித்த சிகரெட்டை பிடிப்பது மற்றும் இதர நச்சுத்தன்மையில் இருந்து ஏற்படும் ஆபத்துகளில் இருந்து உங்களை பாதுகாக்க பழங்கள், காய்கறிகள், நட்ஸ், எண்ணெய்கள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றை உண்ணுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் பழங்களில் பெக்டின் அளவு அதிகமாக உள்ளது. பெக்டின் என்பது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் கனமான கனிமங்களுடன் தொடர்பில் உள்ள நார்ச்சத்தாகும். இது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி குடலை சுத்தப்படுத்தும்.

வெண்ணெய் பழம்/அவகேடோ

வெண்ணெய் பழம்/அவகேடோ

வெண்ணெய் பழம் என்பது சுத்தப்படுத்தும் ஒரு உணவாகும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து அடைபட்ட இரத்தக் குழாய்களை தளர்த்தி நச்சுத்தன்மையை நீக்கும். வெண்ணெய் பழத்தில் க்ளுடாதியோன் என்ற ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. இது குறைந்தது 30 வகையான கார்சினோஜென்களை தடுத்து சிந்தெடிக் ரசாயனங்களை தூய்மைப்படுத்த ஈரலுக்கு உதவும்.

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட்டை பயன்படுத்தி சூப்கள் அல்லது குழம்புகளை தயார் செய்து உண்ணுங்கள். பீட்ரூட்டில் தனித்துவுமுள்ள இயற்கையான தாவர கூட்டுக்கள் அடங்கியுள்ளதால், இரத்தத்தை தூய்மையாக்கி ஈரலை சுத்தமாக்க சிறந்த உணவாக விளங்குகிறது.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி

குணப்படுத்தும் ஆற்றல் சிறப்பாக உள்ள உணவுகளில் ஒன்றாக விளங்குகிறது ப்ளூபெர்ரி. இதில் இயற்கை ஆஸ்பிரின் அடங்கியுள்ளதால் அது தசை சிதைவினால் ஏற்படும் பாதிப்பை குறைத்து சிறுநீரக பாதையில் பாக்டீரியாவை தடுக்கும் ஆண்டி-பயாடிக்காகவும் செயல்படுகிறது. அதனால் இது தொற்றுக்களை தடுத்து உதவும்.

முட்டைக்கோசு

முட்டைக்கோசு

முட்டைக்கோசுவில் எண்ணிலடங்கா கேன்சர் எதிர்ப்பு சேர்க்கைகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சேர்க்கைகளும் அடங்கியுள்ளது. உங்கள் எடலில் உள்ள ஈரல், அளவுக்கு அதிகமாக உள்ள ஹார்மோன்களை உடைத்தெறிய இது உதவி புரியும். உங்களின் செரிமான பாதையையும் இது சுத்தப்படுத்த உதவும். அதே போல் சிகரெட் பிடிப்பதால் உங்கள் உடலில் ஏறும் ஆபத்தான நச்சுப் பொருட்களை நீக்கவும் இது உதவும்.

க்ரான்பெர்ரி

க்ரான்பெர்ரி

உங்கள் சிறுநீரக பாதையில் தேங்கியிருக்கும் கேடு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை சுத்தப்படுத்த க்ரான்பெர்ரி பழங்கள் பெரிதும் உதவும். அதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள ஆன்டி-பயாடிக் மற்றும் ஆன்டி-வைரல் பொருட்களே.

பூண்டு

பூண்டு

உங்கள் உடலில், முக்கியமாக இரத்தம் மற்றும் குடலில் உள்ள தீமையான பாக்டீரியா, குடல் ஒட்டுண்ணி மற்றும் கிருமிகளை அளிக்க பூண்டை உண்ணுங்கள். மேலும் அதில் கான்சர் எதிர்ப்பி மற்றும் ஆண்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அவை உங்கள் உடலில் உள்ள தீமையான நச்சுப்பொருட்களை சுத்தப்படுத்த உதவும்.

கிரேப் பழம்

கிரேப் பழம்

சிகப்பு நிற கிரேப் பழத்தை உங்கள் காலை உணவின் போது உட்கொண்டால் கொலஸ்ட்ராலுடன் தொடர்புடைய பெக்டின் ஃபைபர் உங்களை இரத்தத்தை சுத்தப்படுத்த உதவும். உடலில் கனமான கனிமங்களுடனும் பெக்டின் தொடர்பில் உள்ளதால், அவை உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்ற உதவும்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சள் என்பது இந்திய சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு மசாலாப் பொருளாகும். அதிலுள்ள மருத்துவ குணங்கள் உங்கள் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவும் என்பது காலம் காலமாக அறியப்பட்டவை. இயற்கையாகவே நச்சை நீக்கும் கருவியாக அது செயல்படுவதால் உங்கள் இரத்தத்தை சுத்தப்படுத்த இது உதவுகிறது.

தேநீர்

தேநீர்

உடலை தூய்மைபடுத்தும் தேநீர் வடிவத்தில் பல மூலிகைகளை உட்கொள்ளலாம். இது உடலில் உள்ள நச்சுத் தன்மையை வெளியேற்ற உதவும். இரத்தத்தை சுத்தப்படுத்த வீட்டிலேயே தயாரிக்கப்படும் சில தேநீர் வகைகள் உள்ளது - இஞ்சி தேநீர், புதினா தேநீர் மற்றும் சீமைக் காட்டுமுள்ளங்கி தேநீர். இரத்தத்தை சுத்தப்படுத்த எத்தனை முறை வேண்டுமானாலும் கிரீன் டீயை குடிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion