Latest Updates
-
இந்த 4 எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்கள் ராஜவாழ்க்கை வாழ பிறந்தவர்களாம் - உங்க பெயரின் முதல் எழுத்து என்ன? -
கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… காற்று சுத்தமாகும், பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்! -
பணத்தின் வரலாறு: பணம் கண்டுபிடிப்பதற்கு முன் எதை வைத்து மக்கள் பொருட்களை வாங்கினார்கள் தெரியுமா? -
சம்பளம் வந்ததும் மணி பிளாண்ட் வாங்குறீங்களா? பணத்தை அள்ளிக் கொடுக்கும் அந்த ரகசிய திசை இதுதான்! -
May 2026 Monthly Horoscope: மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
நிமோனியாவை குணப்படுத்தும் சில இயற்கை வைத்தியங்கள்!!!
இயற்கை வைத்தியம் என்று சொன்னால், அது வேஸ்ட் என்று பலர் சொல்வார்கள். ஏனெனில் இயற்கை வைத்தியத்தின் மூலம் எதையும் விரைவில் குணப்படுத்த முடியாது என்பதாலேயே தான். ஆனால் இயற்கை வைத்தியத்தை மேற்கொண்டால், நோயானது உடனே குணமாகாவிட்டாலும், நாளடைவில் முற்றிலும் குணமாகிவிடும். அதுமட்டுமின்றி, இயற்கை வைத்தியத்தினால் எந்த ஒரு பக்க விளையும் ஏற்டாது. அதிலும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் போது இயற்கை வைத்தியத்தை மேற்கொண்டால், விரைவில் குணமாகி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
அதென்ன நிமோனியா என்று கேட்கலாம். நிமோனியா என்றால் நுரையீரலில் ஏற்படும் புண்ணாகும். இந்த புண்ணானது வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றினால் ஏற்படக்கூடியது. மேலும் இந்த நிமோனியா இருந்தால், கடுமையான காய்ச்சலுடன், தலை வலி, நெஞ்சு வலி, ஜலதோஷம், மூச்சு விடுவதில் சிரமம், தலை மற்றும் தொண்டை ஜில்லென்று இருக்கும். சிலருக்கு வாந்தி, வயிற்று வலி போன்றவை கூட ஏற்படும். இவற்றை சரியாக குணப்படுத்தாவிட்டால், வாழ்நாள் முழுவதும் இருக்கும்.
நுரையீரல்களில் ஏற்படும் இந்த நோய்க்கு நவீன மருத்துவ சிகிக்சையோடு இயற்கை முறையான சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டால், நோயில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இப்போது இந்த நிமோனியாவை குணப்படுத்துவதற்கான சில இயற்கை வைத்தியங்களைப் பார்ப்போம்.

பூண்டு
நிமோனியாவில் இருந்து விடுபட வேண்டுமானால், உணவில் பூண்டுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் பூண்டில் உள்ள ஆன்டி-பயோடிக், உடலில் உள்ள கிருமிகளை அழித்துவிடும்.

மஞ்சள் தூள்
மஞ்சள் தூளில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதால், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், விரைவில் நிமோனியாவில் இருந்து குணமாகலாம்.

இஞ்சி
பூண்டை போலவே இஞ்சியையும் தினசரி உணவில் சேர்த்து வந்தால், சுவாசக்கோளாறுகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். அதற்கு ஒரு சிறிய துண்டு இஞ்சியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேன் தொட்டு சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், டீ குடிக்கும் போது, அதில் சிறிது இஞ்சி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

துளசி
துளசி ஒரு மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை. இந்த துளசியில் கிருமிகளை அழிக்கும் தன்மை அதிகம் இருப்பதால், துளசி இலையை தினமும் அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், விரைவில் நிமோனியா குணமாகும்.

வைட்டமின் சி உணவுகள்
நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தால், வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். அதிலும் ஸ்ட்ராபெர்ரி, கொய்யாப் பழம் மற்றும் தக்காளியை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தண்ணீர்
நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்கள், தண்ணீரை அதிக அளவில் பருக வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, உடலும் வறட்சியின்றி இருக்கும்.

கேரட் ஜூஸ்
கேரட் கண்களுக்கு மட்டுமின்றி, நுரையீரலுக்கும் நல்லது. எனவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தா, அதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் ஏ, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நிமோனியாவில் இருந்து விடுவிக்கும்.

சிவப்பு மிளகாய்
சிவப்பு மிளகாயில் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை அதிகம் இருக்கிறது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். எனவே இதனை உணவில் சேர்த்து வந்தால், நிமோனியா தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

எள்
நிமோனியா நோயாளிகள் சாப்பிட வேண்டிய முக்கியமான பொருள் தான் எள். ஏனெனில் எள்ளானது, உடலில உள்ள கெட்ட பாக்டீரியாக்களின் அளவைக் குறைக்கும் தன்மை கொண்டது.

தேன்
உட்கொள்ளும் உணவுகளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள், கிருமிகளை அழித்து, வலுவிழந்து இருக்கும் உடலை வலுவானதாக மாற்றும்.

வெந்தயம்
வெந்தயத்திலும் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதற்கு வெந்தயத்தை அதிகம் உணவில் சேர்த்து சாப்பிட்டால், அது நிமோனியாவை தடுக்கும்.

ப்ளாக் டீ
நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்கள், பால் பொருட்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். மாறாக ப்ளாக் டீ குடிப்பது மிகவும் சிறந்தது.

பீட்ரூட்
நிமோனியா நோயாளிகளுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த காய்கறியாகும். ஏனெனில் இதில் உடலுக்கு வேண்டிய ஆற்றலை அதிகம் கொண்டிருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலில் உள்ள கிருமிகளை எதிர்த்துப் போராடி, நிதோனியாவில் இருந்து விடுவிக்கும்.

இறைச்சிகளை தவிர்க்கவும்
இறைச்சிகளை அறவே தவிர்க்க வேண்டும். ஒருவேளை அசைவ உணவு சாப்பிட விரும்பினால், கடல் உணவுகளான சால்மன், டூனா போன்ற மீன்களை உட்கொள்ளலாம்.

சுடுநீர் ஒத்தடம்
நிமோனியா காய்ச்சலை குறைக்க வேண்டுமானால், சுடுநீரில் துணியை நனைத்து நன்கு பிழிந்து, பின் அதனை நெஞ்சுப் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால், நெஞ்சில் உள்ள சளி இளகி, மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தாது.

கடுகு
கடுகை அரைத்து நெஞ்சில் பற்று போட்டாலும், நெஞ்சு சளி வெளியேறும். அப்படி பற்று போடும் போது, சிலருக்கு அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளதால், அலர்ஜி ஏற்பட்டால், அதனை அகற்றிவிட வேண்டும்.



Click it and Unblock the Notifications