Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
காலை உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்!!!
நீங்கள் காலையில் எப்பொழுதாவது தெருவை கவனித்திருக்கிறீர்களா? அங்கு சிலர் நடப்பதையும், ஏதாவதொரு வாகனங்களில் செல்வதையும் பார்க்கலாம். சிலர் அவர்களுடைய உடற்பயிற்சியகதிற்கு செல்லும் உடையிலும், சில கிரிக்கட் மற்றும் கால்பந்து வீரர்கள் அவர்களது உடையில் விளையாடவும், சிலர் வெளியில் காலை நடை பயிற்சிக்கும் சென்று கொண்டிருப்பனர். இந்த நிகழ்ச்சிகள் எப்பொழுதும் சாதரணமாக காலையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று. இதனால் தான் அதிக அளவு மக்கள் காலையில் உடற்பயிற்சி செய்ய விரும்புகின்றனர்.
மக்கள் காலையில் தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சி ஆனது ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இது தான் அவர்கள் காலையில் முதலில் செய்யும் வேலை. காலையில் தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. பழைய காலத்தில் மக்கள் சூரிய உதயத்திற்கு முன்னால் எழுவதை வழக்கமாக கொண்டிருந்தனர், அதோடு மட்டுமில்லாமல் உடற்பயிற்சி அல்லது சவாலான வேலைகளையும் செய்தனர். காலை உடற்பயிற்சிகளில் ஒன்றான யோகாவை பற்றி வேதங்களிலும் புராணங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.

காலை உடற்பயிற்சியில் நிறைய நன்மைகள் உள்ளது. அவற்றில் சில இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
புத்துணர்ச்சியுடன் இருத்தல்
ஒரு முக்கிய நன்மை காலை உடற்பயிற்சியால் என்னவென்றால், அது நம்மை புத்துணர்ச்சியுடன் வைதிருத்திருகிறது. இந்த உடற்பயிற்சியை நடை, நடனம், யோகா, உடற்பயிற்சியகம் அனைத்தின் மூலமும் செய்யலாம். இது தேவையான உடல் வளர்ச்சியை ஏற்படுத்தி, நமது உடலை நாள் முழுவதும் ஆரோக்கியத்துடனும் வைத்திருகிறது. காலை பயிற்சி என்பது உங்கள் ஹார்மோன்களை தூண்டி, உங்களை விழிப்பாகவும், புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. உங்களுக்கு அலுப்பு மற்றும் தூக்க உணர்ச்சியை போக்கி புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. காலை பயிற்சி உங்கள் தோலையும், முகத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
கட்டுப்பாடு
காலை உடற்பயிற்சியின் நன்மை என்பது உடலை ஒரு கட்டுப்பட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது. காலை உடற்பயிற்சிக்கு ஏற்றவாறு நமது உடல் சரியாகிக் கொள்ளும். இதை தினமும் பழக்கப்படுத்திக் கொண்டால், நீங்கள் எதாவது ஒரு நாள் பயிற்சி செய்யாமல் விட்டாலும், நீங்கள் எப்பொழுதும் எழும் காலை நேரத்தில் உங்களுக்கு விழிப்பு ஏற்பட்டு விடும். இது என்னென்றால் மூளை அந்த பழக்கத்திற்கு பழகிவிடும். காலையில் செய்யும் உடற் பயிற்சியும் இரவில் நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது.
உணவு பழக்கவழக்கங்கள்
எந்தெந்த மக்கள் காலை உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனரோ அவர்கள் நல்ல உணவு பழக்கவழக்கங்களையும் பின்பற்றுகின்றனர். சீரான உணவு உட்கொள்ளும் முறை என்பது காலை உடற்பயிற்சியின் மூலம் ஏற்படும் நன்மைகளில் ஒன்று. காலை உடற்பயிற்சி மற்றும் நல்ல உணவு பழக்கவழக்கம் என்பது ஒரு நல்ல ஆரோக்கியமான விஷயங்களில் ஒன்று. செரிமானம் மற்றும் நல்ல உடல் செயல்பாட்டை ஏற்படுத்துகிறது. காலை உடற்பயிற்சி என்பது நன்மைகளை ஏற்படுத்துகிறது, என்னென்றால் இது செரிமான கோளாறை சரிசெய்ய உதவுகிறது.
முன் குறிப்பீடு செய்தல்
நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிட்டால் அதனை முன் குறிப்பீடு செய்ய வேண்டும். நீங்கள் வேற நேரத்தில் உடற்பயிற்சி செய்வதை விட காலை நேரத்தில்அதுவும் முன் குறிப்பீடு செய்து, செய்யும் உடற்பயிற்சி அதிக நன்மைகளை ஏற்படுத்துகிறது. அனைவரும் சுறுசுறுப்பான வேலை அட்டவனையை கொண்டுள்ளனர். எனவே உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது மிகவும் கடினம். காலை பொழுதே அனைவருக்கும் உடற் பயிற்சி செய்ய மிகவும் ஏதுவான நேரம். காலையில் கவன சிதைவு மற்றும் பிறவளிபடுத்துகை போன்ற பிரச்சனைகள் இருக்காது. ஒருவருக்கு உடற் பயிற்சி செய்ய மிகவும் அமைதியான நேரம்.
நல்ல முடிவுகள்
காலை உடற்பயிற்சி என்பது பொதுவாக காலை உணவிற்கு முன்னால் செய்யப்படுவது. வெறுவயிற்றில் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது மற்றும் இது காலை உணவிற்கு பிறகும், மத்திய உணவிற்கு பிறகும் செய்வதை விட மிகவும் ஏற்றது. காலை காற்று மிகவும் புத்துணர்ச்சி ஊட்ட கூடியது. இதில் ஆக்சிஜன் மற்ற நேரத்தை விட அதிகமாக உள்ளது. காலை காற்றில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது. சூரியகதிரும் ஒரு நாளில் இருக்கும் மற்ற நேரத்தை விட காலையில் மிகவும் வைட்டமின் சத்துக்களை தருகிறது. இதை போல் பல காரணத்தால் காலை பயிற்சி என்பது பாதுகாப்பானது மற்றும் சிறந்தது ஆகும். இவைகள் தான் காலை நேரத்தில் பயிற்சிகளால் ஏற்படும் நன்மைகள் ஆகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
