Latest Updates
-
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம் -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த மணமணக்கும் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
எலுமிச்சை நீர் Vs தேன் கலந்த நீர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தாய் கிழவி இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் - என்ன செய்திருக்கார் பாருங்க?
மதுவினால் உண்டாகும் தலைபாரத்தை குறைக்கும் 9 எளிய வழிகள்!!!
மது அருந்துவது என்பது ஒரு இயல்பாகவே பல பேர் மத்தியில் ஆகிவிட்டது. அதனால் கிடைக்கும் ஆனந்தத்தை பற்றி பலர் சொல்வதை நாம் கேள்வி பட்டிருப்போம், ஏன் கண் கூடாக பார்க்கவும் செய்திருப்போம். ஆனால் அதற்கு பின் வரும் அவஸ்தையை மது அருந்தாத பல பேருக்கு தெரியாது. அது தான் மது அருந்திய பின் ஏற்படும் தலைபாரம் (Hangover).
நீங்கள் எப்போதாவது குடிப்பவரா, அல்லது குடித்து பார்க்க ஆசைப்பட்டு குடிக்கிறீர்களா அல்லது அன்றாடம் மது அருந்தும் கூடத்துக்கு போய் குடிப்பவரா? எதுவாக இருந்தாலும் சரி. குடிப்பதனால் உங்களுக்கு குடியின் பின் விளைவான தலைபாரம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
இந்த தலைபாரமானது மிகவும் கடுமையாக இருந்தால், ஒரு நாள் வேலை முழுவதும் பாதிக்கப்பட்டு விடும். உடம்பு எந்தளவுக்கு மதுவை எடுக்க ஒத்துக்கொள்கிறதோ, அதன் படி இந்த தலைபாரமானது ஒரு நாளைக்கு அதிகமாகவும் கூட நீடிக்கலாம். இத்தகைய தலைபாரத்திற்கு பல வகையான மருந்துகளை உபயோகிப்பதற்கு பதில், அதை சீக்கிரமே சரி செய்யும் பாட்டி வைத்தியங்களை கையாளலாம். அதில் சிலவற்றை இப்போது பார்ப்போமா!!!

காபி
தலைபாரத்தை நீக்க உலகப் புகழ் பெற்ற மற்றொரு வழி ஒரு கப் காபி அருந்துவது. ஒரே நேரத்தில் அதிகமாக பருகுவதை விட, நாள் முழுவதும் குறைந்த அளவில் சிறிது இடைவேளை விட்டு குடிப்பது நல்லது. காப்ஃபைன், இரத்த அழுத்தத்தை கூட்டுவதால், உடலானது மதுவை வேகமாக வளர்சிதை மாற்றம் செய்ய உதவி செய்யும். மேலும் மந்த நிலையையும் தலை வலியையும் கூட இது நீக்கும்.

ஆரஞ்சு சாறு, முட்டை மற்றும் அன்றாட உணவுகள்
பொதுவாக ஆரஞ்சு பழ பானம் தலைபாரத்தை நீக்க உதவும் பாட்டி வைத்தியமாகும். உடல் வறட்சியை நீக்குதலுக்கு பெரிதும் உதவி புரியும், இந்த பானத்தில் உள்ள வைட்டமின் சி குமட்டலையும் நீக்கும். இதனுடன் அவித்த முட்டையையும், லேசாக வாட்டிய பிரட்டையும் சேர்த்து உண்ணலாம்.

அமில நீக்கிகள் (Antacids)
மாத்திரை வடிவில் உள்ள அமில நீக்கிகளை சுலபமாக தண்ணீரில் கலந்து பருகலாம். இது தலைபாரத்தால் ஏற்பட்டுள்ள உடல் அயர்ச்சியை நீக்கும். பல அமில நீக்கிகளிலும் சோடியம்-பை-கார்போனேட் கலந்திருப்பதால், மதுவினால் ஏற்பட்டுள்ள அதிகப்படியான அசிடிட்டியை குறைக்க இது உதவும்.

செயற்கை முறையில் உடல் வறட்சியை நீக்குதல்
செயற்கை முறையில் உடல்நீர் வறட்சியை நீக்கும் மூலங்கள், பொதுவாக குழந்தைகள் நோய்வாய்ப்பட்டுள்ள நேரத்தில் பயன்படுத்தப்படும். அதிக அளவு எலெக்ட்ரோலைட்ஸ் உள்ள குளுக்கோஸை தண்ணீரில் கலந்து பொறுமையாக நாள் முழுவதும் குடித்தால் தலைபாரம் நீங்கும்.

வலி நீக்கி மாத்திரைகள்
எல்லோருடைய வீட்டிலும் பொதுவாக வைத்திருக்கும் மருந்துகளில் வலி நீக்கி மருந்தும் கண்டிப்பாக இருக்கும். இதனை தலைபாரத்தால் ஏற்பட்டுள்ள அயர்ச்சியையும், உடல் வழியையும் போக்க பயன்படுத்திக் கொள்ளலாம். மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த பின் ஆஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் இதை அதிக அளவில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

லேசான உடற்பயிற்சிகள்
இங்கே உடற்பயிற்சி என்று நாம் கூறுவது உடலை வருத்தும் அளவிற்கு கடினமான உடற்பயிற்சி அல்ல. த்ரெட் மில்லில் ஓடுவது, சிறிதளவு புஷ்-அப் எடுப்பது போன்ற லேசான உடற்பயிர்ச்சிகளே. உடற்பயிர்ச்சியினால் ஏற்படும் வியர்வைக்கு பின், குறைந்த அளவு சர்க்கரை உள்ள ஊட்டச்சத்து பானத்தை பருகினால் தலைபாரம் நீங்கும்.

வைட்டமின் பானங்கள்
இப்போதெல்லாம் பல வகையான வைட்டமின் பானங்கள் அனைத்து சிறப்பு அங்காடிகளிலும் கிடைக்கிறது. குளிர்சாதனப் பெட்டியில் எப்போதுமே இந்த பானங்களில் சிலவற்றை வைத்திருப்பது நல்லது. இந்த பானங்களில் தண்ணீரில் கரைகின்ற வைட்டமின்களான வைட்டமின் பி மற்றுன் சி அடங்கியிருப்பதால், அவை தலைபாரத்தை நீக்கும். இந்த பானங்களில் சர்க்கரையின் அளவு குறைந்த அளவில் இருக்கிறதா என்பதை மட்டும் சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வைட்டமின் பானத்துடன் தண்ணீர் கலந்து பருகினால், அது உடல் வறட்சியை நீக்குதலுக்கும் துணை புரியும்.

இஞ்சி டீ
இஞ்சி டீ தலைபாரத்தால் ஏற்படும் தலைவலியை நீக்கும். தலை குடைச்சலை குறைத்து, தலைபாரத்தை நீக்குவதை தவிர, அருந்திய மதுவினால் வயிற்றில் செரிமான பிரச்சனை ஏற்படுவதையும் தடுக்கும்.

வாழைப்பழம்
வாழைப்பழம் தலைபாரத்தை நீக்கும் என்று சொல்வதை விட, தலைபாரம் வருவதை தவிர்க்கும் என்று சொல்வதே சரி. எனவே மதுபான கூடத்திற்கு செல்வதற்கு முன், வாழைப்பழங்கள் உட்கொள்வது நல்லது. அதில் உள்ள பொட்டாசியத்திற்கும், கார்போஹைட்ரேட்டுக்கும் உடல் வறட்சி ஏற்படுவதை தடுக்கும் சக்தி உள்ளது.



Click it and Unblock the Notifications