Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சூப்பில் அதிகம் சேர்க்கப்படும் வெங்காயத் தாளின் நன்மைகள்!!!
வெங்காயத்தாள் மிகவும் பிரபலமான காய்கறிகளில் ஒன்றாகும் மற்றும் அவைகள் வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு உட்பட பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் மிகுந்த சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. நீண்ட காலமாக வெங்காயத்தாள் சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தகச்சத்து அதிகமாக உள்ளது. அதிக அளவிலான கந்தகச்சத்து பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது. இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் குறைந்த கலோரி இருக்கின்றன.
மேலும் வெங்காயத்தாளில் வைட்டமின் சி, வைட்டமின் பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவைகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே கூட நிறைந்துள்ளன. இது தவிர, இவைகளில் காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் மூலங்களாக உள்ளன. வெங்காயத்தாள் க்யூயர்சிடின் போன்ற ஃபிளேவோனாய்டுகளுக்கு ஒரு வலுவான ஆதாரமாக இருக்கின்றது.
இப்போது வெங்காயத்தாளின் உடல்நல நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம்.

இதயத்திற்கு சிறந்தது
வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது

இரத்த அழுத்தம்
இந்த காய்கறிகளில் உள்ள சல்பர் சேர்மங்கள், இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

கொலஸ்ட்ரால்
வெங்காயத்தாள் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது.

நீரிழிவு நோய்
வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து நீரிழிவு நோய்க்கான சுகாதார நலன்களை வழங்குகிறது. இது இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் குளுக்கோஸ் ஏற்புத்தன்மையை அதிகரிக்கிறது. மேலும் இதில் உள்ள புரோப்பைல் டைசல்பேட்டானது, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

ஜலதோஷம் மற்றும் காய்ச்சல்
வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராட உதவுகிறது.

செரிமானம் அதிகப்படுத்துகிறது
வெங்காயத்தாளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் கூட வழங்குகிறது.

நோய் எதிர்ப்புத் திறன்
இந்த காய்கறிகளிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோயிலிருந்து பாதுகாக்கிறது.

பெருங்குடல் புற்றுநோய்
வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

மூட்டுவலிகள் மற்றும் ஆஸ்துமா
வெங்காயத்தாளில் உள்ள க்யூயர்சிடின், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஹிஸ்டமின் எதிர்ப்பு (திசுநீர் தேக்கி எதிர்ப்பு) போன்ற நன்மைகளை வழங்குகிறது. இது கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா சிகிச்சைக்கு உதவும் வகையில் ஒரு நல்ல காய்கறியாக இருக்கிறது.

வளர்சிதை மாற்றம்
இது வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதிலும் மற்றும் நிறைய அளவில் ஊட்டச்சத்துக்களை வைத்திருக்கும் ஒரு நல்ல உணவாகும்.

கண்கள்
வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது.

சரும சுருக்கங்கள் நீக்குதல்
இந்த வெங்காயத்தாளிலுள்ள அல்லிசின், சரும சுருக்கங்களை நீக்கி, சருமத்தைப் பாதுகாக்கின்றது.



Click it and Unblock the Notifications
