For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பருவக்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்!!

By Super
|

பருவக்காலம் தொடங்கினாலே நம்மில் பல பேர் குதூகலம் ஆகி விடுவோம். வெப்பத்தை தணிக்கும் மழை, இதமான வானிலை, அதிக மழை பெய்தால் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை, என்று பல காரணங்கள் பட்டியலில் உள்ளன. ஆனால் இந்த சந்தோஷத்துடன் சில சங்கடங்களையும் சேர்த்தே அனுபவிக்க போகிறோம். பொதுவாக இந்தக் காலத்தில் தான் பல விதமான உடல் நல கோளாறுகள் ஏற்படுகிறது. பருவக்காலத்தின் முதல் மழை நமக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தினாலும், அது நமக்கு வைரல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, அலர்ஜி மற்றும் இதர மழை பிரச்சனைகளையும் ஏற்படுத்தி நம்மை அவதிக்குள்ளாக்கும்.

இந்த காலத்தில் சிறிது ஜாக்கிரதையாக இருந்தால் பாக்டீரியா மற்றும் கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். அதற்கு இங்கே கூறப்பட்டுள்ள சில டிப்ஸ்களை பின்பற்றலாம். இது பருவக்காலத்திலும் ஆரோக்கியத்துடன் இருக்க உதவி புரியும். நோய்களும் அண்டாமல் இருக்கும். இந்த டிப்ஸ்களை பின்பற்றவும் சுலபமாகவே இருக்கும். என்ன நோய் பரப்பும் வைரஸ்ஸை ஒரு கை பார்ப்போமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தண்ணீர்

தண்ணீர்

இந்த பருவக்காலத்தில் வடிகட்டி சுட வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும். அதையும் சுட வைத்த 24 மணி நேரத்திற்குள் குடிக்க வேண்டும். கிருமிகள் தாக்காமல் இருக்க இஞ்சி தேநீர், எலுமிச்சை தேநீர் போன்ற மூலிகை தேநீர்களை குடிக்க வேண்டு்ம். தேநீர் பருகும் பழக்கம் இல்லையென்றால், சூடான காய்கறி சூப் குடிக்கலாம்.

காய்கறிகள்

காய்கறிகள்

எந்த ஒரு பழமோ அல்லது காய்கறியோ உண்ணும் முன் அதிக கவனம் தேவை. முக்கியமாக இலை வகைகள், ஏனென்றால் இவைகளில் தான் அதிக அளவு பூச்சி, புழு மற்றும் தூசிகளை காணலாம். இந்த பாக்டீரியாகளை நீக்க தண்ணீரில் இவைகளை நன்றாக கழுவுங்கள். இதனை உப்பு நீரில் 19 நிமிடம் ஊற வைத்தால் அதல் உள்ள பூச்சிகள் நீங்கும்.

உணவு

உணவு

இந்த காலத்தில் உணவை நன்றாக சமைக்க வேணடும். பச்சையாக உணவை உண்டால், சிக்கலை உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.

பழங்கள்

பழங்கள்

காரம் கலந்த வடை, பஜ்ஜிகளை உண்ணுவதற்கு பதில், சமைத்த உணவு மற்றும் நற்பதமான பழங்கள்

மற்றும் காய்கறிகளை உண்ணலாம்.

செரிமானம்

செரிமானம்

எந்த ஒரு காலமாக இருந்தாலும் சரி செரிமானம் என்பது மிகவும் முக்கியம். முக்கியமாக பருவக்காலத்தில் நம் உடல் உணவை வேகமாக செரிமானம் செய்ய கஷ்டப்படும். அதனால் நன்றாக செரிமானம் ஆக பூண்டு, மிளகு, இஞ்சி, மஞ்சள் மற்றும் மல்லி போன்றவற்றை உணவில் அதிக அளவில் சேர்க்க வேண்டும்.

அசைவம்

அசைவம்

அசைவ பிரியர்கள் சூப் மற்றும் நன்கு வேக வைத்த உணவையே உண்ண வேண்டும்.

பாஸ்ட் புட்

பாஸ்ட் புட்

தெருவோரம் விற்கும் உணவை உண்ணாமல் இருக்க முடியவில்லையா? இருக்க முடியாவிட்டாலும், நாவை கட்டுப்படுத்தி, அதனை தவிர்த்தால் கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

மீதமான உணவு

மீதமான உணவு

கெட்டுப்போன உணவையோ, மிச்சமான உணவையோ உண்ணக் கூடாது.

சுத்தம்

சுத்தம்

காய்கறி வெட்டும் பலகையை உபயோகிக்கும் முன் அதனை சுத்தமாக கழுவ வேண்டும். உணவு பொருட்களை தொடும் போது, உணவை உண்ட பிறகு, கழிவறைக்கு சென்ற பின்னர் கைகளை நன்றாக கழுவுங்கள். சுத்தமாக இருக்கவும்.

பூச்சிக்கொல்லி

பூச்சிக்கொல்லி

கொசுக்கள், பூச்சிகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் மூட்டைப் பூச்சிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துங்கள். சூடம் அல்லது கிராம்பை பயன்படுத்தினால் கொசுத் தொலை சிறிதளவு ஒழியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Health Tips For Monsoon

While the showers of first rain may bring joy, it can also give rise to various health problems like viral fever, leptospirosis, allergies and other rain problems.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more