Latest Updates
-
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்! -
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் வரை டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 5 ராசிக்காரங்க மற்றவர்களை விட வாழ்க்கையில் ஈஸியாக ஜெயிக்கும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்க ராசி என்ன? -
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்!
மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டிப்ஸ்...

மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க....
1. குளிர்ந்த தண்ணீர் குடிக்க வேண்டாம்...
கோடை காலத்தில் வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும், ஃப்ரிட்ஜில் இருந்து குளிர்ந்த தண்ணீரை எடுத்து குடிப்போம். ஆனால் மழைக் காலத்தில் அந்த பழக்கத்தை தொடர வேண்டாம். சில சமயம் அதை குடிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் அப்படி குடிக்க வேண்டாம். இல்லையென்றால் "வேலியில் போகிற ஓணானை எடுத்து பனியனுக்குள்ள விட்டது" போல வராத நோயை வர வைத்துக் கொண்டது போல ஆகிவிடும்.
2. உணவில் கட்டுப்பாடு வேண்டும்...
மழைக்காலத்தில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் அதிகம் வர வாய்ப்பு இருக்கிறது. மேலும் மழைக்காலத்தில் தெரு ஓரத்தில் நிறைய நீர் தேங்கியிருப்பதால் கொசுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் போன்றவை அதிகம் இருக்கும். ஆனால் உங்களுக்கு தெருவில் போடப்படும் கடையில் இருக்கும் திண்பண்டங்களைப் பார்த்தாலே நாவானது ஊறும். அதற்காக அதையெல்லாம் வாங்கி சாப்பிட வேண்டாம். மேலும் தெரு ஓரத்தில் விற்கப்படும் உணவுகள் சுகாதாரமற்றது. மக்கிய காய்கறிகள், நாள்பட்ட தயிர், சுத்தமில்லாத தண்ணீர் அனைத்துமே உடலுக்கு தீங்கை விளைவிக்கக்கூடியது. ஆகவே அனைத்தையுமே பார்த்து வாங்க வேண்டும்.
3. சுகாதாரம் தேவை...
மழைக்காலத்தில் நிறைய தொற்று நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதிலும் அந்த நேரத்தில் மழையால் பாதமானது ஈரமாக இருக்கும். ஆகவே அடிக்கடி கால் விரல்களில் உள்ள நகங்களை சுத்தம் செய்ய வேண்டும். மழை நீர் கூந்தலை அதிகம் பாதிக்கும், ஆகவே வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும், மறக்காமல் கூந்தலை நீரில் அலசி, காய வைக்க வேண்டும். மேலும் காலணியை வெயில் அடிக்கும் போது, வெயிலில் வைத்து காய வைத்தால், காலணியில் இருக்கும் பாக்டீரியா மற்றும் மற்ற கிருமிகள் இருந்தால் அழிந்து விடும். மேலும் சுத்தமான உடைகளையே தினமும் உடுத்த வேண்டும். இதனால் உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம்.
4. வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவும்...
குளிக்கும் போது ஷவரில் குளித்தால் இருமல் அல்லது காய்ச்சல் போன்றவை வரக்கூடும். ஆகவே குளிக்கும் போது வெதுவெதுப்பான சுடு நீரில் குளித்தால் எந்த ஒரு நோயும் வராது. மேலும் சுடு தண்ணீர் உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும். ஆகவே சுடு தண்ணீரில் குளித்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
எனவே மேலே சொன்ன அனைத்து டிப்ஸையும் நினைவில் கொண்டு, இதன் படி நடந்தால் மழைக் காலத்தை சந்தோஷமாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
