Latest Updates
-
ராகு-கேது பெயர்ச்சி 2026: துலாம் முதல் மீனம் வரை யாருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும்?- விளக்கும் ஜோதிடர்! -
விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாட்டி இந்த அம்மிணி கொழுக்கட்டையை ட்ரை பண்ணி பாருங்க.. -
Ganesh Chaturthi 2026: விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த 21 இலைகளும்.. அவற்றால் கிடைக்கும் நன்மைகளும்.. -
தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புட்டுபுட்டு வைக்கும் டாக்டர்! -
1 வருடம் கழித்து கன்னி ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த ராசிக்காரங்க தொழிலில் நல்ல வளர்ச்சியை பாக்கப்போறாங்க.. -
ராகி இட்லியும், வெங்காய கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சுவையானதும், சத்தானதும் கூட -
செப்டம்பர் 12, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்! -
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் வரை டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
டைட் ஜீன்ஸ் போடுறீங்களா? கொஞ்சம் கவனிங்க!

இறுக்கமான ஜீன்ஸ்களை தொடர்ச்சியாக அணியும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று ஆய்வு ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
நடுத்தர வயதினர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் அவர்களது ஜீரண செயல்பாடுகள் குறையும் என்றும் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இடுப்பு பகுதி தொடர்ந்து இறுக்கப்படுவதால், அவர்கள் முது கெலும்பும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. ஜீன்ஸ் உடை தொடர்ந்து உடலை இறுக்குவதால் சருமத்தில் காற்று படாமல் உடலில் வியர்வை தேங்கி, கிருமித்தொற்று உருவாகும்.
உடலானது உடையால் இறுக்கப்படுவதால், ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக இறுக்கமான ஜீன்ஸ், பெல்ட் அணிபவர்களுக்கு மெரால்ஜியா பாரஸ்தெற்றிகா' என்ற பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். இருக்கமான உடையினால் சருமத்தில் சுருக்கம், வறட்சி, லேசான காயங்கள் ஏற்படுவதாகவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆண்மலடு அதிகரிக்க காரணம்
இன்றைக்கு பெரும்பாலான ஆண்கள் தந்தையாகும் தகுதியை இழக்கக் காரணம் இதுபோன்ற இறுக்கமான ஜீன்ஸ் உடைகளை அணிவதுதான் என்று கண்டறியப்பட்டுள்ளது. இறுக்கமான ஆடைகள் இனப்பெருக்கத்திறனை பாதிக்கின்றன என்று சுவீடன் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆண்களின் இனப்பெருக்க உறுப்பான விரைப்பைகள் இயற்கையாகவே உடலில் இருந்து வெளியே தொங்குகின்றன. உடல் உஷ்ணத்தில் இருந்து விடுபட்டு குளிர்ச்சியாக இருந்தால் மட்டுமே உயிரணு உற்பத்தி நன்றாக இருக்கும் என்பதால்தான், உடலுக்கு வெளியே அது அமைந்திருக்கிறது.
இறுக்கமான ஜீன்ஸ் போன்றவைகளை அணியும்போது விரைப்பைகள் மீண்டும் உடலோடு நெருக்கப்பட்டு, உஷ்ணபாதிப்புக்கு அவை உள்ளாகின்றன. அதனால் உயிரணு உற்பத்தி குறைந்துபோகிறது. இறுக்கமான ஜீன்சை தொடர்ந்து அணிகிறவர்களின் உயிரணு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். எனவே சிறுவயதில் இருந்தே இறுக்கமான உள்ளாடைகளையோ, ஜீன்ஸ் களையோ அணிவிக்க வேண்டாம் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும். இதன்மூலம் எதிர்காலத்தில் அவர்கள் ஆண்மைக்குறைபாடு கொண்டவர்களாக மாறுவதில் இருந்து பாதுகாக்கலாம் .
நெகிழும் உடைகள்
டைட்டான உடைகளை தவிர்த்து நெகிழ்வுதன்மை கொண்ட துணிகளில் தயாரித்தவைகளை வாங்கவேண்டும். ஸ்ட்ரச்சபிள் ஜீன்ஸ்' என்று சொல்லப்படும் அவை, நெகிழும் தன்மை கொண்டிருப்பதால் உடலை இறுக்காது. தொடர்ச்சியாக ஜீன்ஸ்களை அணிவதை தவிர்க்க வேண்டும் என்று கூறும் நிபுணர்கள் கோடைகாலத்தில், ஜீன்ஸ்கள் அணிவதை தவிர்த்திடுங்கள் என்கின்றனர். எனவே ஜீன்ஸ் அணிபவர்கள் அழகை விட ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் இல்லையெனில் எதிர்கால சந்ததியை உருவாக்கும் சக்தியை இழக்க நேரிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
