For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மன அழுத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!!: ஆய்வில் தகவல்

By Mayura Akilan
|

Women
மனஅழுத்தம் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் என்று பல்வேறு நிபுணர்கள் கூறியுள்ளனர். அதே சமயம் சிறிய அளவிலான மன அழுத்தம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர்.

ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தைச் சேர்ந்த நோய் எதிர்ப்புத்துறையும், மனோவியல் மற்றும் நடத்தையியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

சிறிய அளவிலான மனஅழுத்தம் காரணமாக உடலில் நோய் தாக்குவது தடுக்கப்படுகிறதாம். காயங்கள், நோய் தொற்றுகள் ஏற்படாமல் அது தடுக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பணிபுரியும் இடங்களில் ஒரு குறிப்பிட்ட பணியை முடிக்கவேண்டுமே என்று ஏற்படுத்திக்கொள்ளும் சிறிய அளவிலான மனஅழுத்தம் ரத்த அணுக்களிலும், சருமம், மற்றும் திசுக்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இந்த நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் உடலின் ஆரோக்கியமான ஹார்மோன்களை சீராக சுரக்கச் செய்கிறதாம். மூளை செல்களையும் கூட புத்துணர்ச்சியாக்குகிறது என்று ஆய்வாளர்கள தெரிவித்துள்ளனர். பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற ஆய்வின் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர் தாபர் தெரிவித்துள்ளார்.

English summary

Stress can be good for immune system | மன அழுத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!!: ஆய்வில் தகவல்

Stress is bad for you -- you've heard it a thousand times. But it can be good for your immune system, says a study
Story first published: Tuesday, November 6, 2012, 10:51 [IST]
Desktop Bottom Promotion