Latest Updates
-
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
ஆரோக்கியமான மார்பகத்திற்கு ஏற்ற சிறந்த உணவுகள்!!!
அக்டோபர் மாதம் தான் உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம். தற்போது பெண்களுள் நிறைய பேர் மார்பக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புற்றுநோய் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் சரியான ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது. பெண்களுக்கு ஏற்படும் நோய்களில் மிகவும் கொடியது என்று கூட சொல்லலாம். மேலும் பெண்களுக்கு வரும் நோய்களில் முக்கியமானதும் இதுவே.
ஆகவே அவ்வாறு வரும் நோய்களை வராமல் தடுப்பதற்கு முதலில் எதை நாம் சிந்திப்போமென்றால், எதனால் இந்த நோய் வருகிறது, எப்படி இதனை தடுப்பது, இதை போக்க என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்பன போன்றவை தான். ஆனால் அப்படி சிந்தித்தால் மட்டும் போதாது, அவற்றை பின்பற்றவும் வேண்டும். அதிலும் பெண்கள் முக்கியமாக எப்போதுமே ஆரோக்கியமானவற்றை சாப்பிட்டால் தான், மார்பகம் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் மார்பக புற்றுநோயை தடுக்க சிறந்த மருந்து என்னவென்றால், அது உணவு தான்.
அத்தகைய உணவுகளை சாப்பிட்டு வந்தால், மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பதோடு, உடலும் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்க்கலாமா!!!

மஞ்சள்/ஆரஞ்சு நிறப் பழங்கள் மற்றும் காய்கறிகள்
இந்த வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளான மஞ்சள் குடைமிளகாய், ஆப்ரிக்காட், வாழைப்பழம், ஆரஞ்சு, கேரட் போன்றவற்றில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அதிக அளவில் வைட்டமின் சி மற்றும் ஏ உள்ளது. ஆகவே இவற்றை தினமும் உணவில் சேர்த்து வந்தால், மார்பகம் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

பச்சை காய்கறிகள்
காலிஃப்ளவர் , முட்டைகோஸ், பிராக்கோலி, முளைக்கட்டிய பயிர்கள் போன்றவற்றில் புற்றுநோயை கட்டுப்படுத்தும் பொருள் உள்ளது. மேலும் இவற்றில் ஐஸோதியோசயனைடுகள் இருக்கின்றன. இவை கார்சினோஜென்களை சிதைத்துவிடுகின்றன. முக்கியமாக தைராய்டு இருப்பவர்கள், இந்த வகையான காய்கறிகளை அதிகம் சாப்பிடக்கூடாது.

வைட்டமின் ஈ உணவுகள்
பெண்கள் நிறைய பேருக்கு சரியான மாதவிடாய் இல்லாமல், அடிக்கடி மார்பகத்தில் வியர்த்தல், சிலசமயங்களில் வலி போன்றவை ஏற்படும். ஆகவே இவற்றை சரிசெய்ய வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் பாதாம், வெண்ணெய் பழம் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

ஆளிவிதை மற்றும் ஆளிவிதை எண்ணெய்
இவற்றில் அதிக அளவில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இவற்றை உணவில் சேர்ப்பதால், உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜெனின் அளவை சரியான அளவில் வைக்கும். பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜெனின் அளவு அதிகமாக இருந்தால், மார்பக புற்றுநோய் ஏற்படும். ஆகவே இதனை உணவில் பெண்கள் சேர்த்துக் கொள்வது நல்லது.

மீன் எண்ணெய்
சாதாரணமாக சமையலில் பயன்படுத்தும் எண்ணெயை விட, மீன் எண்ணெயில் அதிகமாக ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதோடு, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. ஆனால் அந்த மீன் எண்ணெயை நீண்ட நாட்கள் வைத்து சமையலில் பயன்படுத்தி சாப்பிட முடியாது. ஆகவே மீன் அல்லது மீன் எண்ணெய் மாத்திரையை வாங்கி சாப்பிட்டு வந்தால், மார்பக புற்றுநோய் வருவதைத் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications
