Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
உட்கார்ந்து கொண்டே தொப்பையை குறைக்கணுமா? இந்த சின்ன சின்ன விஷயங்களை செய்யுங்க..
Weight Loss Tips In Tamil: தொப்பையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. தொப்பையை குறைக்க எடுக்கும் அனைத்து முயற்சிகளுமே ஒருவருக்கு எதிர்பார்த்த பலனை கட்டாயம் தந்துவிடாது. ஒருவருக்கு தொப்பை வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.
அதில் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை உண்பது போன்றவை முக்கியமான காரணிகளாகும். அதுவும் தற்போது பெரும்பாலானோரின் வேலை உட்கார்ந்தவாறே செய்வதாக இருப்பதால், தொப்பை வருவதற்கான அபாயம் அதிகமாக உள்ளன. ஆனால் உட்கார்ந்திருக்கும் போதே ஒருவர் ஒருசில விஷயங்களை செய்வதன் மூலம், தொப்பையின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

உடலின் மற்ற பகுதிகளில் தேங்கும் கொழுப்பை விட, வயிற்றுப் பகுதியில் தேங்கும் கொழுப்பு என்பது மிகவும் ஆபத்தானது. இந்த பகுதியில் சேரும் கொழுப்புக்கள் உள்ளுறுப்புக்களிலும் தேங்கி, அவற்றின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக உடலில் பல ஆபத்தான நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. இப்போது உட்கார்ந்து கொண்டே எந்த மாதிரியான செயல்களில் ஈடுபட்டால், வயிற்றுப் பகுதியில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரையும் என்பதைக் காண்போம்.
1. சிட்டிங் க்ரஞ்சஸ்
தொப்பையைக் குறைக்க நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே ஒருசில உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தாலே குறைக்கலாம். அதுவும் நாற்காலியின் முனைப் பகுதியில் உட்கார்ந்து, உடலை பின்புறமாக சாய்த்து, கைகள் இரண்டையும் நாற்காலியின் பக்கவாட்டில் வைத்துக் கொண்டு, கால்கள் இரண்டையும் ஒட்டி வைத்துக் கொண்டு கால்களை மேலே தூக்கி உடலுக்கு நேராக நீட்டிக் கொள்ள வேண்டும். பின் இரண்டு முழங்கால்களையும் மடித்து நெஞ்சு பகுதிக்கு அருகில் கொண்டு வந்து, பின் நீட்ட வேண்டும். இப்படி ஒரு செட்டிற்கு 15 முறை என 3 செட் செய்ய வேண்டும். இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தால், தொப்பையில் உள்ள கொழுப்பைக் கரைக்கலாம்.
2. பட்டாம்பூச்சி போஸ்
தரையில் நன்கு சௌகரியமாக உட்கார்ந்தவாறே தொப்பையைக் குறைக்க வேண்டுமானால், யோகாசனத்தில் உள்ள பட்டாம்பூச்சி நிலை அல்லது பத்த கோனாசனாவை செய்யுங்கள். இந்த ஆசனத்திற்கு தரையில் அமர்ந்து கொண்டு, கால்களை நீட்டி விரித்து, பின் பாதங்கள் இரண்டும் ஒன்றையொன்று தொடும் வகையில் மடித்து அமரந்து, கைகளால் பாதங்களை பிடித்துக் கொண்டு, மெதுவாக பட்டாம்பூச்சி போன்று மேலும் கீழும் அசைக்க வேண்டும். இப்படி டிவி பார்க்கும் போது செய்து வந்தால், அடிவயிற்றுக் கொழுப்பைக் கரைக்கலாம்.
3. நேராக அமர்வது
உட்காரும் போது குனிந்து உட்காராமல் நேராக உட்காருங்கள். இப்படி உட்கார்வதனால் முதுகுதண்டுவடம் நேராக இருப்பது மட்டுமின்றி, தொப்பையைக் குறைக்கவும் உதவும். ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஒருவர் நேராக நிமிர்ந்து உட்கார்வதன் மூலம் ஒருநாளைக்கு 350-க்கும் அதிகமான கலோரிகள் எரிக்கப்படுகிறது. எனவே தொப்பையைக் குறைக்க நினைப்பவர்கள் முதலில் இந்த ஒரு விஷயத்தை நினைவில் கொண்டு, பின்பற்றி வர வேண்டும்.
4. நீர் அருந்தவும்
உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், அது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்கும். குறிப்பாக இது வயிற்று உப்புசத்தைத் தூண்டி, மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். உட்கார்ந்து கொண்டே நீரை குடிப்பதன் மூலம், செரிமானம் மற்றும் மெட்டபாலிசம் மேம்படும். வயிற்றுக் கொழுப்பைக் குறைக்க நீர் மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் கொழுப்புக்களை உடைக்க உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். எனவே உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க வேண்டுமானால், நீரை அதிகம் அருந்த வேண்டும். அதுவும் உட்கார்ந்து குடிக்க வேண்டும்.
5. கால்களால் எண்களை எழுதவும்
உங்களால் தினமும் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய சோம்பேறித்தனமாக உள்ளதா? ஒரு நாள் உடற்பயிற்சிக்கு விடுப்பு அளிக்க நினைத்தால், படுக்கையில் இருந்து கொண்டே கால்களை மேலே தூக்கி, உங்கள் கால்களால் காற்றில் எழுத்துக்கள் அல்லது எண்களை கற்பனை செய்து வரையுங்கள். இது தொப்பைக் கொழுப்பைக் குறைக்க உதவும் ஒரு நல்ல பயிற்சியாகும்.
6. சுவாசப்பயிற்சி
ஒருவருக்கு தொப்பை வர மன அழுத்தமும் ஒரு காரணம். ஆய்வின் படி, உடலில் அதிகரிக்கும் கார்டிசோல் அளவுகளானது அதிக மன அழுத்தத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே மன அழுத்தத்தைக் குறைக்க சுவாசப் பயிற்சிகள் அல்லது பிராணயாமம் செய்வதன் மூலம் வயிற்றுக் கொழுப்பைக் குறைக்க உதவலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications