Latest Updates
-
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்..
ஒரு மாசம் வெங்காயத்தை 'இப்படி' சாப்பிட்டா.. தொப்பையும், உடல் எடையும் மடமடன்னு குறையுமாம்... ட்ரை பண்ணுங்க..
Weight Loss Tips In Tamil: உடல் பருமன் பிரச்சனை உலகளவில் ஏராளமானோர் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாகும். இந்த உடல் பருமனைக் குறைக்க பல்வேறு டயட்டுகள் மற்றும் கடுமையான உடற்பயிற்சிகளை மக்கள் மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு உடல் எடையைக் குறைக்க பலரும் விரும்புவதில்லை. மாறாக, எளிய வழியையே தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்களும் அப்படி உடல் பருமன் மற்றும் தொப்பையைக் குறைக்க ஈஸியான வழியைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் நம் வீட்டு சமையலறையில் உள்ள வெங்காயம் அதற்கு பெரிதும் உதவி புரியும். ஆம், வெங்காயமானது உணவிற்கு சுவையை அளிப்பதோடு, உடலினுள்ளும் பல மாயங்களை செய்யக்கூடியவை.

அப்படிப்பட்ட வெங்காயத்தை ஒருவர் தங்களின் தினசரி உணவில் சேர்த்து வந்தால், அதுவும் ஒரு குறிப்பிட்ட வழியில் உட்கொண்டு வந்தால், தேவையில்லாத கொழுப்புக்களைக் கரைத்து, விரைவில் சிக்கென்ற உடலைப் பெறலாம். இப்போது வெங்காயம் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது மற்றும் அதற்கு வெங்காயத்தை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம்.
கலோரி குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம்
வெங்காயம் உடல் எடைடையைக் குறைக்க உதவி புரிவதற்கு முக்கிய காரணம், இதில் கலோரிகள் மிகவும் குறைவு மற்றும் நார்ச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. இதனால் வெங்காயத்தை உட்கொள்ளும் போது, அது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்து, கண்ட உணவுகளின் மீதான ஆர்வத்தைக் குறைக்கிறது. இதன் விளைவாக உடல் எடையைக் குறைக்க உதவி புரிகிறது.
பசியைக் குறைக்கும்
வெங்காயத்தில் உள்ள கலவை பசியுணர்வைக் குறைக்கும் திறனைக் கொண்டது. அதுவும் இதில் க்யூயர்சிடின் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது ஒருவரது பசியுணர்வைக் குறைப்பதோடு, கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுகளின் மீதான ஆர்வத்தையும் குறைக்கிறது.
மெட்டபாலிசம் மேம்படும்
குரோமியம் என்னும் கனிமச்சத்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த குரோமியம் வெங்காயத்தில் கணிசமான அளவில் நிறைந்துள்ளது. மேலும் வெங்காயம் உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ளவும், இரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரித்தும், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
நச்சுக்களை நீக்கும்
வெங்காயத்தில் உள்ள சல்பர் மூலக்கூறுகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் செயல்முறையை மேம்படுத்தி உதவுகின்றன. மேலும் இது கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலில் இருந்து நச்சுக்களையும், அதிகப்படியான கொழுப்புக்களையும் வெளியேற்ற உதவி புரிந்து, எடை இழப்புக்கு உதவுகின்றன.
தொப்பையைக் குறைக்கும்
வயிற்றுப் பகுதியில் தேங்கும் கொழுப்புக்கள் தான் தொப்பையை உண்டாக்குகின்றன. இந்த வகை கொழுப்புக்கள் மிகவும் ஆபத்தானவை. ஏனெனில் இவை ஒருவரது மெட்டபாலிசத்தைப் பாதிப்பதோடு, இரத்த சர்க்கரை அளவையும் பாதிக்கின்றன. ஆனால் இந்த வகை கொழுப்பை வெங்காயம் திறம்பட குறைக்க உதவுகிறது. இதற்கு வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் பொருள் தான் காரணம்.
செரிமானத்தை மேம்படுத்தும்
வெங்காயத்தில் ப்ரீபயோடிக் நார்ச்சத்துக்கள் காணப்படுகிற்னன. இவை குடல் நுண்ணுயிர்களுக்கு மிகவும் நல்லது. இந்த வகை நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்சவும் உதவி புரிகின்றன. ஒருவரது செரிமான மண்டலம் சிறப்பாக செயல்பட்டால், தானாகவே உடல் எடை குறையும்.
எடையைக் குறைக்க வெங்காயத்தை எப்படி உட்கொள்ளலாம்?
* உடல் எடையைக் குறைக்க நினைப்போர், தங்களின் தினசரி சாலட்டுகளில் வெங்காயத்தையும் சேர்த்து, அவற்றை பச்சையாக உட்கொள்ளலாம்.
* இல்லாவிட்டால், சூப் தயாரிக்கும் போது, அத்துடன் வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளலாம்.
* விரைவில் உடல் எடையில் மாற்றத்தைக் காண, வெங்காய டீயைத் தயாரித்துக் குடிக்கலாம். அதற்கு வெங்காயத் துண்டுகளை சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதில் சிறிது தேனை சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
