Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
தினமும் காலையில் இந்த விஷயங்கள செஞ்சா போதுமாம்... பானை மாதிரி இருக்க உங்க தொப்பை குறைஞ்சிடுமாம்!
Weight Loss Tips In Tamil: உடல் பருமன் என்பது மக்களிடையே அதிகரித்து வரும் பெரிய கவலையாகும். இது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களை ஏற்படுத்த வழிவகுக்கும். உங்கள் உடல் எடையை அதிகரிப்பதில் உணவும், வாழ்க்கை முறை மாற்றங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆதலால், உடல் எடையை குறைக்க நீங்க திட்டமிட்டால், என்ன சாப்பிடுகிறீர்கள் மற்றும் குடிக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் சாப்பிடுவதைத் தவிர, உடல் பருமனை எதிர்த்துப் போராட சில காலைப் பழக்கங்களும் உங்களுக்கு உதவும்.

எப்படி ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்? என்பது பற்றிய தகவல்களால் இணையம் நிரம்பி வழிகிறது. நாளுக்கு நாள், சமூக ஊடகங்கள் நமக்கு புதிய உதவி குறிப்புகள் மற்றும் தந்திரங்களை வழங்குகின்றன. இந்நிலையில், தினமும் உங்கள் கலோரி உட்கொள்ளலை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம்.
நாம் உண்ணும் உணவைத் தவிர, உடல் பருமனை குறைக்க நம் வாழ்வில் சில பழக்கங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். எடையை அதிகரிப்பது என்பது எளிமையானது, ஆனால் அதைக் குறைப்பது என்பது மிகவும் கடினமானது. சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் உங்கள் இலக்குகளை நீங்கள் தடையின்றி அடையலாம். ஆரோக்கியமான முறையில் உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கான சில காலைப் பழக்கங்களைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
உடல் பருமனை எதிர்த்துப் போராட உதவும் எளிய குறிப்புகள்
நாம் காலைப் பொழுதைத் தொடங்கும் விதம் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது தெரியுமா? ஆம், உடல் பருமனை போக்க நாம் சில வாழ்க்கை முறை மாற்றங்களை, குறிப்பாக காலையில் செய்ய வேண்டும். நீங்கள் முயற்சி செய்யக்கூடிய விஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.
தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும்
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க நமக்கு அறிவுறுத்தப்படுகிறது. இது நம்மை நீரேற்றமாக வைத்துக்கொள்ளவும் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவும். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், வெதுவெதுப்பான நீரை தினமும் காலையில் குடிக்க வேண்டும். ஏனெனில், உடல் பருமனுக்கு முக்கிய காரணம் மெதுவான வளர்சிதை மாற்றமாகும்.
வளர்சிதை மாற்றத்தை கட்டுக்குள் வைத்திருக்க, காலையில் எழுந்தவுடன் குறைந்தது 1-2 கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். ஆயுர்வேதத்தின்படி, எலுமிச்சை மற்றும் தேன் கலந்த தண்ணீரைக் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்காதீர்கள்
ஆரோக்கியமான கட்டுக்கோப்பான உடலை வைத்திருக்க ஒரு நாளைக்கு குறைந்தது 25 முதல் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இலகுரக உடற்பயிற்சிகள் சுறுசுறுப்பைக் கட்டியெழுப்ப உதவுகின்றன மற்றும் நாளின் தொடக்கத்திலேயே சரியான ஆற்றலை பெற உதவுகின்றன. இதனால் நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கலாம்.
பெரும்பாலான மக்கள் இப்போதெல்லாம் ஜிம்மிற்குச் செல்ல விரும்புகிறார்கள். அது உடல் எடையை குறைக்க உண்மையில் மிகவும் உதவியாக இருக்கும். உங்களுக்கு ஜிம்மிற்கு செல்ல நேரமில்லை என்றால், வீட்டிலேயே காலையில் லேசான உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் உங்களைப் பொருத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம்.
சூரிய ஒளியை பெற வேண்டும்
வைட்டமின் டி நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்தது. இது நம் உடலுக்கும் அவசியம். அதிகாலையில் வெளிப்படும் சூரிய கதிர்களில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. இது நம் உடலுக்கும் மனதுக்கும் நேர்மறை ஆற்றலை அளிக்கிறது.
இதனால், தினமும் காலையில் சூரிய ஒளிபடுமாறு திறந்த வெளியில் உடற்பயிற்சி செய்யுங்கள். நீங்கள் உடற்பயிற்சி செய்வதோடு, வைட்டமின் டி-யும் உங்கள் எடையைக் குறைக்க உதவுகிறது.
காலை உணவை ஒருபோதும் தவிர்க்காதீர்கள்
உடல் எடையைக் குறைக்க உதவும் என்று எண்ணி பலர் காலை உணவைத் தவிர்க்கிறார்கள். இது உடலுக்கு தீங்கு விளைவிப்பதோடு, உங்கள் எடையையும் அதிகரிக்கலாம். எந்தவொரு முறையற்ற உணவு முறையும் நம் உடலை பலவீனப்படுத்தும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
சில சமயங்களில், நீடித்த பசி, எடை இழப்புக்கு பதிலாக எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். ஏனெனில் நீண்ட நேரம் பட்டினியாக இருப்பது உங்களை அதிகமாக சாப்பிட வைக்கும். மேலும், பட்டினி கிடப்பதால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம்.
அன்றைய உணவைத் திட்டமிடுங்கள்
ஒவ்வொரு காலையிலும், உங்கள் நாளில் நீங்கள் சாப்பிடும் பொருட்களின் பட்டியலைக் குறிப்பிட வேண்டும். ஒரு நாளில் நீங்கள் என்ன சாப்பிடப் போகிறீர்கள் என்பதில் கவனமாக இருப்பதன் மூலம், குறைந்த கலோரி உணவுகளைத் தேர்ந்தெடுக்கலாம். குறைந்த கலோரி உணவுகள் உங்கள் எடையை குறைக்க உதவுகிறது. முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம், நீங்கள் எதை உட்கொள்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

