Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
உங்க உடலில் இது அதிகமா இருக்கா? அப்ப மாரடைப்பு வர இருமடங்கு வாய்பிருக்காம்...உடனே இந்த 5 விஷயத்தை பண்ணுங்க!
நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதில், உங்கள் இதய ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களின் இரத்த சர்க்கரை அளவு, உங்கள் இதயத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. இதயத்திற்கும் நீரிழிவு நோய்க்கும் இடையிலான இணைப்பை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் பாதிப்புகள் ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த தாக்கத்தை உடலில் ஏற்படுத்துகின்றன. மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் விதங்களில் சிக்கலான முறையில் இணைக்கப்பட்டுள்ளன. ஆய்வின்படி, நீரிழிவு நோயாளிகள் தங்கள் வாழ்நாளில் ஏதேனும் ஒரு வகையான இதய நோயால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருமடங்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.

நீரிழிவு நோயின் காரணமாக உயர்ந்த இரத்த குளுக்கோஸ் அளவுகள் இதய செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும். காலப்போக்கில், இது மாரடைப்பு அல்லது பக்கவாதத்தை ஏற்படுத்தும். அத்துடன் இதயம் அல்லது மூளைக்கு இரத்த ஓட்டம் நிறுத்தப்படுவதற்கு வழிவகுக்கும்.
உங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் உங்கள் இருதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். ஆதலால், நீரிழிவு நோயாளிகள் இதயத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
இரத்த சர்க்கரை கண்காணிப்பு ஏன் அவசியம்?
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க, குளுக்கோஸ் அளவை தொடர்ந்து கண்காணித்தல் இன்றியமையாதது. தொடர்ச்சியான குளுக்கோஸ் கண்காணிப்பு (CGM) சாதனங்கள் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கலாம். இதில் குளுக்கோஸ் அளவைப் பற்றிய நுண்ணறிவுகளை நீங்கள் பெற்று, முன்னெச்சரிக்கை மருத்துவ உதவியை மேற்கொள்ளலாம்.
ஒரு நாளில் ஒருவரின் குளுக்கோஸ் அளவுகள் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் இருக்கும் நேரத்தைக் குறிக்கிறது. இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அவை இருதய நோய் உருவாக்கும் ஆபத்துக்களை அதிகரிக்கும். மேலும், பக்கவாதத்தையும் ஏற்படுத்தும். ஆதலால், உங்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.
நிபுணர்கள் கூறுவது
இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பலர் இதயம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த சிக்கல்களின் அதிகரிப்பு இளைஞர்களிடம் அதிகம் காணப்படுவது மிகவும் அதிர்ச்சியானது மற்றும் கவலைக்குரியது.
மோசமாக நிர்வகிக்கப்படும் நீரிழிவு உயர் இரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு மற்றும் உயர் ட்ரைகிளிசரைடுகள் போன்ற இருதய நோய் ஆபத்து காரணிகளை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே, குளுக்கோஸ் ஏற்ற இறக்கங்களைத் தவிர்க்க மக்கள் கூடுதல் கவனம் எடுத்து தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம்.
உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஆரோக்கியமான உணவு, சீரான உடற்பயிற்சி மற்றும் தொடர்ச்சியான குளுக்கோஸ் கண்காணிப்பு(CGM) போன்றவை ஒருவர் பின்பற்றக்கூடிய முக்கியமான நடவடிக்கைகள். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை கண்காணிக்க உதவும் எளிய வழிமுறைகளை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
மன அழுத்த மேலாண்மை
நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது, உங்கள் உடல் அழுத்த ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது மற்றும் இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்துகிறது. காலப்போக்கில், இது உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் இதய நோய்களை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.
உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க, இசை, யோகா அல்லது நடனம் போன்ற வேடிக்கையான செயல்களில் ஈடுபட முயற்சி செய்ய வேண்டும். கூடுதலாக, அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவது அல்லது ஒரு நிபுணருடன் பிரச்சனையை பற்றி விவாதிப்பது மன அழுத்தத்தை குறைக்கும்.
ஆரோக்கியமான உணவு
கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கக்கூடிய நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். உதாரணமாக, நிறைவுற்ற கொழுப்புகள் பொதுவாக அவகேடா, சிவப்பு இறைச்சி மற்றும் முழு கொழுப்புள்ள பால் பொருட்கள் போன்ற உணவுகளில் காணப்படுகின்றன.
அதே நேரத்தில் டிரான்ஸ் கொழுப்புகள் பெரும்பாலும் வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பயன்படுத்தப்படும் பகுதி ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்களில் உள்ளன. உங்களுக்கான ஆரோக்கியமான உணவுத் திட்டத்தைக் கண்டறிவது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
மெலிந்த புரதங்கள், முழு தானியங்கள், வண்ணமயமான காய்கறிகள் மற்றும் நட்ஸ்கள் மற்றும் விதைகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
வழக்கமான உடற்பயிற்சி
இதய நோய் அபாயத்தைக் குறைக்க, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு அளவு போன்ற காரணிகளை உடற்பயிற்சியின் மூலம் நிவர்த்தி செய்வது நல்லது. வழக்கமான உடல் செயல்பாடு உங்கள் நீரிழிவு நோயை சிறப்பாக நிர்வகிக்க உதவுகிறது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு, உட்கார்ந்திருக்கும் நேரத்தைக் குறைத்து, ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 150 நிமிடங்களுக்கு மிதமான முதல் தீவிர உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது பரிந்துரைக்கப்படுகிறது. அதாவது விறுவிறுப்பான நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை முயற்சி செய்யலாம்.
புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்
புகைபிடித்தல் உங்கள் இரத்த நாளங்களின் புறணியை சேதப்படுத்தும். இது நீரிழிவு நோயால் ஏற்படும் உங்கள் தமனிகளின் குறுகலை துரிதப்படுத்துகிறது. இது உங்கள் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. உங்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால், இதயத்திற்கு ஆரோக்கிய பாதிப்புகளின் ஆபத்து மேலும் அதிகரிக்கிறது.
உங்கள் நீரிழிவு மருந்தின் விளைவை சீர்குலைத்து, உங்கள் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும் என்பதால், உங்கள் ஆல்கஹால் உட்கொள்ளலையும் குறைக்க வேண்டும். அதிகப்படியான குடிப்பழக்கம் ஒருவரின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம், இதய தசைகளை பலவீனப்படுத்தலாம் மற்றும் சில இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்கவும்
நீங்கள் வீட்டிலேயே கருவிகள் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதைக் கண்காணிக்கலாம். உகந்த குளுக்கோஸ் வரம்பிற்குள் (70 - 180 mg/dl) குறைந்தபட்சம் 17 மணிநேரம் இருக்க முயற்சி செய்வது முக்கியம். இதைச் செய்வதன் மூலம், உங்கள் நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை திறம்பட கட்டுப்படுத்தலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
