Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்..
உங்க உடலில் இந்த வினோத அறிகுறிகள் இந்த உங்க உடலில் தண்ணீர் கொஞ்சம் கூட இல்லனு அர்த்தமாம்...!
நமது உடலில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி நீரால் ஆனது. நாம் வியர்வை மற்றும் சிறுநீர் கழிப்பதால் நிறைய திரவத்தை இழக்கிறோம். அன்றாட செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்று இழப்பு ஏற்படுவதால், இழந்த நீரை உடலில் நிரப்புவதற்கு சமமான முக்கியமான தேவை உள்ளது.
உடலில் நீரின் அளவு குறைவாக இருக்கும்போது, அது சிலஅறிகுறிகளைக் கொடுக்கத் தொடங்குகிறது. ஆனால் இவையும் புறக்கணிக்கப்படும் போது, நீரிழப்பு ஆரோக்கிய சிக்கல்களுக்கும் வழிவகுக்கும்.

நம் உடலில் தண்ணீர் குறைவாக இருக்கும்போது, எலக்ட்ரோலைட்டுகள், சோடியம், பொட்டாசியம் மற்றும் சில உடல் ஊட்டச்சத்துக்களும் குறைவாக இருக்கும். சில சமயங்களில் நுரையீரல் அல்லது சிறுநீர்ப்பையைப் பாதிக்கும் தொற்றுகள் போன்ற சிறிய நோய்கள் கூட வயதானவர்களுக்கு நீரிழப்புக்கு வழிவகுக்கும்.
நீரிழப்பு என்றால் என்ன?
உடலில் இருந்து வெளியேறும் நீரின் அளவு, உட்கொள்ளும் அளவை விட அதிகமாக இருக்கும்போது நீரிழப்பு ஏற்படுகிறது. நீரிழப்பு என்பது உங்கள் உடல் தண்ணீரை இழக்கிறது என்று அர்த்தமல், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளை நீங்கள் இழக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் உடலில் நீரின் அளவு குறைவாக இருப்பதன் அறிகுறிகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
தலைச்சுற்றல்
நீரிழப்பு அடிக்கடி குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் உணர்வுகளுக்கு வழிவகுக்கிறது. ஆய்வுகளின் படி, நீரிழப்பு உள்ளவர்கள் பெரும்பாலும் இரத்த அழுத்தம் அல்லது குறைந்த இரத்த அளவைக் குறைப்பார்கள். இது நிகழும்போது, இரத்தம் உங்கள் மூளையை அடைய வேண்டிய வழியில் வராமல் போகலாம். இது தலைச்சுற்றல் அல்லது மயக்கம் போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.
தலைவலி
உங்கள் உடலில் திரவ உட்கொள்ளல் குறையும் போது தசைகளில் நீட்சி ஏற்படலாம், இதன் விளைவாக தலைவலி ஏற்படலாம்.
எடை அதிகரிப்பு
நீரிழப்பு விஷயத்தில் இது பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் ஒரு அறிகுறியாகும். ஆனால், நீரிழப்பு முக்கியமான ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டை ஏற்படுத்துகிறது மற்றும் இதனால் நாம் அதிக பசியை உணரலாம். இந்த தீராத பசியை கட்டுப்படுத்த சர்க்கரை கலந்த காரமான உணவை ஒருவர் சாப்பிடும்போது, அது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
சரும வறட்சி
இது நீரிழப்புக்கான மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். உங்கள் சருமத்தில் வறட்சியோ அல்லது விரிசல்களோ இருந்தால் உங்கள் உடலில் தேவையை விட குறைவான அளவிலான நீர் உள்ளது என்று அர்த்தம்.
சோர்வு
ஒருவர் வழக்கத்தை விட அதிகமாகவும் எளிதாகவும் சோர்வாக உணரலாம். குறுகிய தூக்க சுழற்சிகள் பெரும்பாலும் நீரிழப்பால் ஏற்படலாம்.
குடல் சிக்கல்கள் மற்றும் பிடிப்புகள்
தசைப்பிடிப்பு ஏற்படும் போது தண்ணீர் உட்கொள்ளலை அதிகரிக்க அறிவுறுத்தப்படுகிறது. நீரிழப்பு தசைகளில் நீட்சியை ஏற்படுத்துகிறது, இது தசைப்பிடிப்புக்கு வழிவகுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

