Latest Updates
-
அட்டகாசமான கொத்தமல்லி மாங்காய் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
முகம் எப்பவும் எண்ணெய் வழிந்து அசிங்கமாக இருக்கா? அப்ப இந்த நேச்சுரல் கிளென்சரை யூஸ் பண்ணுங்க! -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டிலேயே எந்த தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் தெரியுமா? -
கோடைகாலத்தில் எடையை புயல் வேகத்தில் குறைக்க உதவும் சிறந்த 10 உணவுகள் -
வீட்டில் எப்பவும் செல்வமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கணுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வையுங்க! -
தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப டாக்டர் ஸ்வேதா சொல்ற இந்த விதைகளை தினமும் 1 ஸ்பூன் சாப்பிடுங்க! -
தமிழ்நாட்டில் இந்த கிராமத்திற்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லையாம் - இங்க அப்படி என்ன இருக்கு தெரியுமா? -
ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க! -
வாஸ்து படி உங்கள் பாத்ரூமில் ஒரு கிண்ணம் உப்பை வைப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
தயிர் Vs. மோர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது?
கோவைக்காயை அடிக்கடி சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Kovakkai Benefits In Tamil: கொரோனா வந்த பின் மக்கள் ஆரோக்கியமான உணவுகளை அதிகம் தேர்ந்தெடுத்து உட்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக காய்கறிகளை மக்கள் தங்களின் உணவில் அதிகம் சேர்க்க தொடங்கிவிட்டார்கள்.
ஏனெனில் காய்கறிகளில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. முக்கியமாக காய்கறிகளில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் இல்லை.

காய்கறிகளில் பல வகைகள் உள்ளன. அதில் சமீப காலமாக மக்களால் அதிகம் விரும்பி உட்கொள்ளப்பட்டு வரும் ஒரு காய் தான் கோவைக்காய்/கோவக்காய். தர்பூசணி போன்ற தோற்றத்தைக் கொண்ட கோவைக்காய் வேகமாக வளரக்கூடியது. இதைக் கொண்டு பல சுவையான ரெசிபிக்களை செய்து சாப்பிடலாம்.
உங்களுக்கும் கோவைக்காய் ரொம்ப பிடிக்குமா? ஆனால் அந்த கோவைக்காயை அடிக்கடி சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? கீழே அடிக்கடி கோவைக்காயை சாப்பிட்டால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. சர்க்கரை நோய்க்கு நல்லது
ஆயுர்வேத மருத்துவத்தில் கோவைக்காய் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் கோவைக்காயை மட்டுமின்றி, அதன் தண்டுகள், இலைகள் போன்றவற்றையும் சமைத்தோ, சூப்பில் சேர்த்தோ சாப்பிடலாம். அதுவும் கோவைக்காயின் இலைகளை பச்சையாக தொடர்ந்து சில வாரங்கள் உட்கொண்டு வந்தால், உயர் இரத்த சர்க்கரை அளவு சட்டென்று கட்டுப்பாட்டில் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2. உடல் பருமன் தடுக்கப்படும்
கோவைக்காயில் உடல் பருமனை தடுக்கும் பண்புகள் இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் இதில் உள்ள பண்புகளானது முன்-அடிபோசைட்டுகளை கொழுப்பு செல்களாக மாற்றுவதைத் தடுக்கிறது. மேலும் கோவைக்காயானது உடலின் மெட்டபாலிச விகிதத்தை அதிகரித்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
3. உடல் சோர்வு நீங்கும்
கோவைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. எனவே இரும்புச்சத்து குறைபாடு அல்லது இரத்த சோகை உள்ளவர்கள் கோவைக்காயை அடிக்கடி உட்கொண்டு வந்தால், அது இரும்புச்சத்து குறைபாட்டைப் போக்கும். உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், உடல் மிகவும் சோர்வுடன் இருக்கும். கோவைக்காயை சாப்பிட்டால், உடல் ஆற்றலுடனும், ஃபிட்டாகவும் இருக்கும்.
4. நரம்பு மண்டல பிரச்சனைகள் சரியாகும்
தர்பூசணியைப் போன்றே கோவைக்காயில் நீரில் கரையக்கூடிய வைட்டமின்களான பி2 உள்ளது. இந்த வைட்டமின் உடலின் ஆற்றலைப் பராமரிக்கும் முக்கிய பணியை செய்கிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நரம்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது.
5. செரிமானம் மேம்படும்
கோவைக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. நார்ச்சத்தானது செரிடிமான மண்டலத்தின் செயல்பாட்டை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே உங்களுக்கு ஏற்கனவே செரிமான பிரச்சனைகள் இருந்தால், கோவைக்காயை அடிக்கடி சாப்பிடுங்கள். இதனால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்பட்டு, அஜீரண கோளாறு, மலச்சிக்கல், வாயு தொல்லை போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
6. சிறுநீரக கற்கள் கரையும்
சிறுநீரக கற்கள் என்பவை கால்சியம் மற்றும் பிற கனிமச்சத்துக்களின் படிக வடிவங்கள் ஆகும். இவை சிறுநீர் பாதையில் படிகின்றன. உடலில் உப்பு அளவுக்கு அதிகமாக இருந்தால், அது சிறுநீரக கற்களை ஏற்படுத்தும். கோவைக்காயில் உள்ள கால்சியம் ஆரோக்கியமானது மற்றும் இது பிற பசலைக்கீரை போன்ற பிற காய்கறிகளுடன் சேர்த்து உட்கொள்ளும் போது சிறுநீரக கற்களை வெளியேற்றுகிறது.
7. அலர்ஜிகளுக்கு எதிராக பாதுகாப்பளிக்கும்
கோவைக்காயில் சபோனின், அல்கலாய்டுகள், ஸ்டெராய்டுகள், ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் கிளைகோசைடுகள் போன்றவை அதிகமாக உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனாபிலாக்டிக் நிலைமைகள் மற்றும் பிற அலர்ஜிகளிலிருந்து உடலுக்கு பாதுகாப்பை அளிக்கின்றன.
8. புற்றுநோய் தடுக்கப்படும்
கோவைக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அதிகப்படியான பீட்டா-கரோட்டீன் புற்றுநோயைத் தடுக்க உதவுகின்றன. இந்த சத்துக்கள் அனைத்தும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். எனவே புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால், கோவைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.
9. இதயத்திற்கு நல்லது
கோவைக்காயில் பொட்டாசியம் வளமான அளவில் உள்ளன. இந்த கனிமச்சத்து இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது மற்றும் இதய நோய்களின் அபாயத்தைத் தடுக்கிறது.
10. பல நோய்களை சரிசெய்யும்
கோவைக்காய் பல நோய்களை குணப்படுத்துவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. முக்கியமாக கோவைக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது. மேலும் இது காய்ச்சல், ஆஸ்துமா, மஞ்சள் காமாலை, தொழுநோய் மற்றும் குடல் பிரச்சனையை சரிசெய்ய பயன்படுகிறது. கோவைக்காயின் முழு பலனைப் பெற நினைத்தால், அதை அடிக்கடி உட்கொண்டு வர வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











