Latest Updates
-
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு
கஷ்டப்படாம வெயிட்டை குறைக்கணுமா? அப்ப காலையில் வெறும் வயிற்றில் இந்த எண்ணெயை ஒரு ஸ்பூன் குடிங்க...
Weight loss Tips In Tamil: யாருக்கு தான் நல்ல ஃபிட்டான உடலமைப்புடன் இருக்க ஆசை இருக்காது. நிச்சயம் ஒவ்வொருவருமே நல்ல அழகான உடலமைப்புடன் சிக்கென்று இருக்க வேண்டுமென்றே விரும்புவோம். பழங்காலத்தில் நம் முன்னோர்கள் நல்ல கட்டுடலுடன் இருக்க முக்கிய காரணம் அவர்களின் பழக்கவழக்கங்கள் தான்.
ஆம், பழங்காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல பொருட்களை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தார்கள். அதில் ஒன்று தான் விளக்கெண்ணெயை குடிப்பது.

நிறைய பேர் விளக்கெண்ணெய் தலைமுடியின் வளர்ச்சியை தூண்ட உதவக்கூடிய ஒரு எண்ணெயாக மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த விளக்கெண்ணெயை குடித்தால், உடலினுள் பல அற்புதங்கள் நிகழும்.
குறிப்பாக உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் தினமும் விளக்கெண்ணெயை ஒரு ஸ்பூன் குடித்து வந்தால், கஷ்டப்படாமல் உடல் எடையை மடமடவென்று குறைக்கலாம். ஆய்வுகளில் கூட இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்போது விளக்கெண்ணெய் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பதைக் காண்போம்.
1. மெட்டபாலிசம் மேம்படும்
விளக்கெண்ணெயில் ஏராளமான சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. ஒருவரது செரிமானம் மற்றும் மெட்டபாலிசம் சிறப்பாக இருந்தால், உடல் எடை தானாகவே குறையும்.
2. கொழுப்புக்களை உடைக்கிறது
விளக்கெண்ணெய் உடலில் தேங்கியுள்ள விடாப்பிடியான கொழுப்பு செல்களை உடைத்தெறிய உதவுகிறது மற்றும் இது உடல் எடையைக் குறைக்கும் செயல்முறையை வேகப்படுத்துகிறது.
3. செரிமான மண்டலம் சுத்தமாகிறது
விளக்கெண்ணெய் ஒரு இயற்கை மளமிலக்கியாகும். இதை வெறும் வயிற்றில் குடிக்கும் போது, அது செரிமான மண்டலத்தில் உள்ள நச்சுக்களை எளிதில் வெளியேற்றி, செரிமான மண்டலத்தை சுத்தம் செய்ய உதவி புரிகிறது மற்றும் வயிற்று உப்புசத்தைக் குறைக்கிறது.
4. பசியை கட்டுப்படுத்துகிறது
விளக்கெண்ணெயை தினமும் ஒரு ஸ்பூன் குடிப்பதன் மூலம், அது இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்கிறது. இதன் விளைவாக உணவுகளின் மீதான நாட்டம் குறைவதோடு, அதிகளவு உணவு உண்பது தடுக்கப்படுகிறது. இதன் விளைவாக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
5. நச்சுக்ககளை நீக்குகிறது
விளக்கெண்ணெய் ஒரு நேச்சுரல் சுத்திகரிப்பான். அதாவது, இந்த எண்ணெயை குடித்தால், அது உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள நச்சுக்களை நீக்க உதவி புரிந்து, ஆரோக்கியமான எடை இழப்பை தூண்டுகிறது.
6. மனநிறைவை ஊக்குவிக்கிறது
விளக்கெண்ணெயில் அதிகளவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது மனநிறைவை ஊக்குவிக்கிறது மற்றும் அதிகமாக பசி எடுப்பதைத் தடுக்கிறது. இதன் மூலம் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது தடுக்கப்பட்டு, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
7. ஆற்றலை அளிக்கிறது
விளக்கெண்ணெய் உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்க பெரிதும் உதவி புரிகிறது. எனவே நீங்கள் உடல் எடையைக் குறைக்க டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வரும் போது, விளக்கெண்ணெயை குடித்து வந்தால், உடலில் போதுமான அளவு ஆற்றல் எப்போதும் நிறைந்திருக்கும்.
8. வீக்கத்தைக் குறைக்கிறது
விளக்கெண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. ஆகவே இந்த எண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, அது உடலினுள் உள்ள அழற்சி/வீக்கத்தைக் குறைக்க உதவி புரிந்து, உடல் எடை இழப்பை ஊக்குவிக்கிறது.
9. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது
விளக்கெண்ணெய் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் நிணநீர் வடிகால் செயல்பாட்டை அதிகரிப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இவை இரண்டுமே ஆரோக்கியமான எடை இழப்பிற்கு மிகவும் அத்தியாவசியமானவைகளாகும்.
உடல் எடையைக் குறைக்க விளக்கெண்ணெயை எப்படி மற்றும் எப்போது குடிக்க வேண்டும்?
உடல் பருமனால் அவதிப்பட்டு வருபவர்கள், தங்கள் உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க விரும்பினால், ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெயை தண்ணீர் அல்லது ஜூஸ் உடன் கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
குறிப்பு: முதன்முதலாக விளக்கெண்ணெயை குடிப்பவர்கள் மிகச்சிறிய அளவில் உட்கொள்ள வேண்டும். அதன் பின் மெதுவாக அளவை அதிகரிக்க வேண்டும். ஒருவேளை குமட்டல் அல்லது வாந்தி போன்ற பக்கவிளைவுகளை சந்தித்தால், விளக்கெண்ணெய் குடிப்பதை நிறுத்த வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications