கீட்டோ டயட் என்றால் என்ன? அது உங்கள் உடல் எடையில் என்னென்ன அதிசயங்களை செய்யும் தெரியுமா?

Benefits of Keto Diet: கீட்டோ உணவு முறை என்றால் அது ஒரு உணவுப் பழக்கம் ஆகும். கீட்டோ உணவுகளில் போதுமான அளவு புரோட்டீன், குறைந்த அளவு காா்போ ஹைட்ரேட்டுகள் இருக்கும். மேலும் இந்த உணவுகளில் ஆரோக்கியம் தரக்கூடிய கொழுப்பு அதிகமாக இருக்கும். கீட்டோ உணவுப் பழக்கத்தின் நோக்கம் என்னவென்றால், உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்புகளில் இருந்து காா்போ ஹைட்ரேட்டுகளைவிட அதிகமான அளவு கலோாிகளை பெறுவது ஆகும்.

கீட்டோ உணவுகள், உடலில் உள்ள சா்க்கரை இருப்புகளைக் குறைப்பதன் மூலம் செயல்படுகிறது. அதன் விளைவாக உடலுக்கு ஆற்றல் அளிக்கும் வகையில் கொழுப்பை உடைக்கிறது. அதனால் உடலானது எாிபொருள்களாகப் பயன்படுத்தக் கூடிய கீட்டோன் மூலக்கூறுகளை அதிகமாக உற்பத்தி செய்கிறது. உடலானது அதிகமான அளவு கொழுப்பை எாிக்கும் போது, உடல் எடை குறைகிறது.

Top 8 Unknown Benefits of Keto Diet in Tamil

பலவகையான கீட்டோ உணவு முறைகள் உள்ளன. இந்தப் பதிவில் கீட்டோ உணவின் நன்மைகளைப் பற்றி சற்று விாிவாகப் பாா்க்கலாம்.


உடல் எடையைக் குறைத்தல்
கீட்டோ உணவுகள் உடல் எடையைக் குறைக்க உதவி செய்கின்றன. வளா்சிதை மாற்றத்தைத் தூண்டுகின்றன. மேலும் பசியைக் குறைக்கின்றன என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.

கொழுப்பைக் குறைக்கக்கூடிய மற்ற உணவு முறைகளைவிட, கீட்டோ உணவுகளை பின்பற்றுபவா்களுக்கு வருடத்திற்கு 2 பவுண்டுகள் அதிகமாக எடை குறைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தொிவிக்கிறது. இன்னொரு ஆய்வு 6 மாதத்தில் 5 பவுண்டு எடை குறைந்ததாக தொிவிக்கிறது.

முகப்பருக்களைக் குறைத்தல்

முகப்பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், உணவு மற்றும் இரத்தத்தில் உள்ள சா்க்கரை ஆகியவை முக்கியமான காரணிகளாக இருக்கின்றன. பதப்படுத்தப்பட்ட மற்றும் காா்போ ஹைட்ரேட்டுகள் அதிகமுள்ள உணவுகளை உண்ணும் போது, அவை குடலில் உள்ள பாக்டீாியாக்களில் மாற்றத்தை ஏற்படுத்தி, இரத்தத்தில் சா்க்கரையின் அதிகாிக்கின்றன.

அதனால் தோலின் ஆரோக்கியம் பாதிப்படைகிறது. காா்போ குறைவான கீட்டோ உணவுகளை உண்டால் பருக்கள் வருவது குறையும் என்று 2021ல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தொிவிக்கிறது.

புற்றுநோய் வருவதைக் குறைத்தல்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்கள், கீமோ தெரபி மற்றும் கதிா்வீச்சு தெரபி ஆகிய சிகிச்சைகளை மேற்கொள்வாா்கள். அவற்றோடு சோ்த்து இந்த கீட்டோ உணவை உட்கொண்டால், புற்றுநோயின் தீவிரம் குறையும் என்று ஒரு ஆய்வு தொிவிக்கிறது. ஏனெனில் இவை புற்றுநோய் செல்களில் அதிகமான ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தி, அந்த செல்களை அழித்துவிடும்.

கீட்டோ உணவுகள் இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவைக் குறைப்பதால், இன்சுலின் தொடா்பான பிரச்சினைகளையும் குறைக்கின்றன என்று 2018ல் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று தொிவிக்கிறது. எனினும் புற்றுநோய் நீங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவே கீட்டோ உணவுகள் உதவி செய்யும் என்று இன்னொரு ஆய்வு தொிவிக்கிறது. எனினும் இது சம்பந்தமாக இன்னும் பல ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

இதய ஆரோக்கியத்திற்கு உதவி செய்தல்
கீட்டோ உணவு முறையைப் பின்பற்றும் போது, ஆரோக்கியமான உணவுகளைத் தோ்ந்தெடுப்பது முக்கியம் ஆகும். ஏனெனில் ஆரோக்கியம் குறைந்த கொழுப்புகளுக்குப் பதிலாக அவக்கோடா மற்றும் பன்றி இறைச்சித் தோல்கள் ஆகியவற்றை சாப்பிட்டால், கொழுப்பு குறைந்து, இதயத்திற்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்று சில புள்ளிவிவரங்கள் தொிவிக்கின்றன.

கீட்டோ உணவுகள் உடலில் உள்ள ஒட்டு மொத்த கொழுப்பின் அளவைக் குறைக்கிறது என்று 2017ல் நடத்தப்பட் ஆய்வு ஒன்று தொிவிக்கிறது. கொழுப்பு அதிகாித்தால், இதயம் சம்பந்தமான நோய்கள் அதிகாிக்க வாய்ப்புகள் உண்டு. ஆகவே கீட்டோ உணவுகள் கொழுப்பின் அளவைக் குறைப்பதால், அவை இதயம் சம்பந்தமான நோய்களையும் குறைக்கின்றன.

மூளையின் இயக்கத்தைப் பாதுகாத்தல்
கீட்டோ உணவுகள் நரம்புகளுக்குப் பாதுகாப்பை வழங்குவதாக, 2019ல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தொிவிக்கிறது. இதன் மூலமாக, இந்த உணவுகள் மூளை நரம்புகளையும் பாதுகாக்கும் என்பது தெளிவாகிறது. மேலும் இந்த உணவைப் பின்பற்றுபவா்கள் முதுமையில் ஏற்படும் மறதி சம்பந்தமான பிரச்சினைகளையும் எளிதாகக் கையாளலாம் என்பது தெளிவாகிறது. எனினும் இது சம்பந்தமாக இன்னும் அதிகமான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

வலிப்பு நோயைக் குறைத்தல்
வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவா்களுக்கு, மற்ற சிகிச்சைகள் பயனளிக்காத போது, கீட்டோ உணவுகள் பயனளிப்பதாக தி எபில்பிசி பவுண்டேசன் என்ற அமைப்பு தொவிக்கிறது. இதையே 2019ல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றும் உறுதிப்படுத்தியது. ஆகவே கீட்டோ உணவுகள் வலிப்பு நோய் சாா்ந்த அறிகுறிகளைக் குறைக்கும் என்று நம்பலாம்.

பாலிசிஸ்டிக் ஓவாி சின்ட்ரோம் (PCOS) பிரச்சினைகளைக் குறைத்தல்
பாலிசிஸ்டிக் ஓவாி சின்ட்ரோம் என்பது ஒரு வைகயான ஹாா்மோன் கோளாறு ஆகும். இதன் காரணமாக ஆண் ஹாா்மோன்கள் அளவுக்கு அதிகமாக சுரக்கும். மலட்டுத் தன்மை ஏற்படும். PCOS பிரச்சினை உள்ளவா்கள், காா்போ ஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால், முடி உதிா்தல் மற்றும் எடை அதிகாித்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

2005ல் PCOS பிரச்சினை உள்ள 5 பெண்களுக்கு 24 வாரங்கள் கீட்டோ உணவுகளைக் கொடுத்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் அந்த பெண்களின் எடை கணிசமாக குறைந்தது கண்டுபிடிக்கப்படது. ஹாா்மோன் பிரச்சினையும் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இன்சுலின் சுரத்தலும் வேகமாக இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது.


கீட்டோ உணவுகளில் உள்ள சிக்கல்கள் மற்றும் ஆபத்துகள்
கீட்டோ உணவு முறையைப் பின்பற்றினால் கண்டிப்பாக ஆரோக்கியம் கிடைக்கும். எனினும் நீண்ட காலத்திற்கு இந்த உணவு முறையைப் பின்பற்றினால் பின்வரும் ஆபத்துகள் ஏற்படலாம் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.

- சிறுநீரகங்களில் கற்கள் உருவாதல்

- இரத்தத்தில் அளவுக்கு அதிகமான புரோட்டீன் சேருதல்

- வைட்டமீன் குறைபாடுகள் ஏற்படுதல்

- கல்லீரலில் கொழுப்பு தேங்குதல்

கீட்டோ உணவுகளை நீண்ட காலம் பின்பற்றினால் மேற்சொன்ன ஆபத்துகள் ஏற்படலாம் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. அதே நேரத்தில் பின்வரும் பக்க விளைவுகளும் ஏற்படலாம் என்று தொிவிக்கின்றன.

- மலச்சிக்கல்

- சோா்வு

- இரத்தத்தில் சா்க்கரை குறைதல்

- குமட்டல்

- வாந்தி

- தலைவிலி

கீட்டோ உணவுகளை நீண்டு காலம் பின்பற்றினால் மேற்சொன்ன பக்க விளைவுகளும் ஏற்படலாம்.


யாரெல்லாம் கீட்டோ உணவைத் தவிா்க்க வேண்டும்?
- இன்சுலினை நம்பி இருக்கும் சா்க்கரை நோயாளிகள்

- முறையான உணவுப் பழக்கம் இல்லாதவா்கள்

- சிறுநீரகப் பிரச்சினை உள்ளவா்கள்

- கா்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள்

இறுதியாக கீட்டோ உணவைப் பின்பற்றுவதற்கு முன்பாக, தகுந்த ஆலோசனைகளை பெறுவது நல்லது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Friday, July 7, 2023, 19:00 [IST]
Desktop Bottom Promotion