Latest Updates
-
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்
வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பட்டை நீரை குடித்தால் உடலினுள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
Cinnamon Water Benefits In Tamil: நம் வீட்டு சமையலறையில் மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்கள் ஏராளமாக உள்ளன. அதில் ஒன்று தான் இலவங்கப்பட்டை. இந்த பட்டையானது இலங்கப்பட்டை மரத்தின் பட்டைகளில் இருந்து பெறப்படுகிறது.
பட்டையை பொதுவாக நாம் சமையலில் தாளிக்கும் போது சேர்ப்போம். இது உணவிற்கு நல்ல ப்ளேவரைக் கொடுக்கும் மற்றும் இது இனிப்புச் சுவையைக் கொண்டதும் கூட. இந்த பட்டை அதன் மருத்துவ குணங்களால் ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக ஒருசில பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பட்டையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் சர்க்கரை நோய் எதிர்ப்பு பண்புகள் போன்றவை உள்ளன. இப்படிப்பட்ட பட்டையை கொதிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலினுள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. இப்போது பட்டை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. எடை இழப்புக்கு உதவும்
பட்டை நீர் எடை இழப்புக்கு பெரிதும் உதவக்கூடியது. பட்டை நீரானது உடலில் உள்ள கொழுப்பு செல்களை உடைத்தெரிந்து, நீரின் உதவியுடன் உடலில் இருந்து வெளியேற்றுகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்போர் பட்டை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் மேம்பட்டு, பசியுணர்வு குறைந்து, வேகமாக உடல் எடையைக் குறைக்கலாம்.
2. இரத்த சர்க்கரை சீராகும்
பட்டைக்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறன் உண்டு. ஆய்வு ஒன்றின் படி, பட்டை சப்ளிமெண்டுகளை எடுத்துக் கொண்ட டைப்-2 சர்க்ரை நோயாளிகளின் உடலில் ஹீமோகுளோபின் A1c அளவு மற்றும் சாப்பிடாத போது இரத்த சர்க்கரை அளவுகளானது சீராக இருந்தது தெரிய வந்தது. ஆகவே உயர் இரத்த சர்க்கரை அளவு கொண்டவர்கள் வெறும் வயிற்றில் பட்டை நீரைக் குடித்து வந்தால், இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.
3. கொலஸ்ட்ரால் கட்டுப்படும்
பட்டை உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளைக் குறைக்க உதவுவதோடு, க்ளுக்கோஸ் அளவை நிலையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதன் மூலம் இரத்தக்குழாய்களில் அடைப்புகள் அல்லது சேதம் ஏற்படும் அபாயம் குறைந்து, இதயத்தின் செயல்பாடு சுமூகமாக இருக்கும்.
4. இதய ஆரோக்கியம் மேம்படும்
தற்போது மாரடைப்பால் நிறைய பேர் இறக்கிறார்கள். பட்டையில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பண்புகள் உள்ளன. ஆகவே பட்டை நீரை தொடர்ச்சியாக குடிக்கும் போது, இதய நோயின் அபாயம் குறைகிறது. எனவே உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், பட்டை நீரைக் குடியுங்கள்.
5. நோயெதிர்ப்பு சக்தி வலுபெறும்
பட்டையில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டிரியல் எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. இவை இரண்டும் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவி புரிகின்றன. அப்படிப்பட்ட பட்டையின் நீரை அடிக்கடி வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெற்று, நோய்த்தொற்றுகளின் அபாயம் குறையும்.
6. நச்சுக்கள் வெளியேற்றப்படும்
பட்டையில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை உடலில் உள்ள நச்சுக்களை திறம்பட வெளியேற்றி, ப்ரீ-ராடிக்கல்களால் உடலில் ஏற்படும் சேதத்தை எதிர்த்து நல்ல பாதுகாப்பை வழங்குகின்றன. எனவே உடல் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டுமென்று விரும்பினால், பட்டை நீரைக் குடித்து வாருங்கள்.
7. செரிமானத்திற்கு உதவும்
பட்டை செரிமான மண்டலத்தின் செயல்முறையை மேம்படுத்தி, வயிற்று உப்புசத்தைக் குறைக்கிறது. எனவே நீங்கள் அடிக்கடி செரிமான பிரச்சனைகளை சந்திப்பவராயின், அதைத் தவிர்க்க வேண்டுமானால், பட்டை நீரை அடிக்கடி வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள்.
பட்டை நீரைத் தயாரிப்பது எப்படி?
ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஒரு துண்டு பட்டையை சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி, டீ-க்கு பதிலாக குடிக்க வேண்டும்.
குறிப்பு
பட்டை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, சிலர் தங்களின் உடல் எடையில் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம். ஆனால் இன்னும் சிலர் செரிமான பிரச்சனைகளை சந்திக்கலாம். எனவே நீங்கள் இதுவரை பட்டை நீரைக் குடித்ததில்லை என்றால், அளவாக தயாரித்து, குடித்து பாருங்கள். உங்கள் உடலில் நல்ல மாற்றத்தைக் கண்டால், வாரத்திற்கு 2 முறை குடியுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications