Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
உடலின் மூலை முடுக்குகுளில் உள்ள நச்சுக்களை வெளியேற்றணுமா? இந்த பழங்களை அதிகமா சாப்பிடுங்க போதும்..
Best Fruits For Detox: நாம் உண்ணும் உணவுகள் மற்றும் பழக்கங்களால் நமது உடலினுள் ஏராளமான நச்சுக்கள் சேர்கின்றன. இப்படி உடலினுள் சேரும் நச்சுக்கள் அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். நமது உடல் நாம் நினைப்பதை விட புத்திசாலி. இதற்கு எப்படி தன்னைத் தானே சுத்தம் செய்வது என்றும், குணப்படுத்துவது என்றும், சமநிலையில் வைத்துக் கொள்வது என்றும் தெரியும்.
ஆனால் சில சமயங்களில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், மன அழுத்தம், மாசுபாடு ஆகியவற்றினால் உடலினுள் சேரும் நச்சுக்கள் அதிகரிக்கும். இந்த நச்சுக்களை வெளியேற்றும் பணியை செய்யும் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில், நச்சுக்கள் அதிகம் சேரும் போது, அவை உடலின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க வேண்டுமானால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் உணவுகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.

அதுவும் இயற்கை நமக்கு அளித்த பழங்களை உட்கொள்ளும் போது, உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதோடு, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் ஆரோக்கியமும் மேம்படும். இப்போது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் அந்த பழங்கள் எவையென்பதைக் காண்போம்.
நாவல்பழம்
நாவல்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது மற்றும் இவை சிறுநீரகங்களில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. ஆய்வு ஒன்றில், நாவல் பழச்சாறு உயர் சர்க்கரை அளவு மற்றும் வீக்கம் காரணமாக சிறுநீரக திசுக்கள் சேதமடைவதைத் தடுக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. மேலும் நாவல் பழம் கல்லீரலில் நச்சுக்களால் ஏற்படும் சுமையைக் குறைக்க உதவுகிறது. எனவே நாவல் பழ சீசன் வந்தால், அதை மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்கள்.
மாதுளை
மாதுளம் பழம் மிகவும் சுவையான மற்றும் அனைத்து பருவங்களிலும் கிடைக்கக்கூடிய பழம். இந்த பழம் சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை நீக்குவதில் சிறந்தது. மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம். குறிப்பாக புனிகலஜின் அதிகம் உள்ளது. இது வீக்கத்தைக் குறைக்கவும், சிறுநீரக கல் உருவாவதையும் தடுக்க உதவுகின்றன. எனவே சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்கள் குறையவும், அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தினமும் ஒரு பௌல் மாதுளையை உட்கொள்ளுங்கள்.
பப்பாளி
ஆண்டு முழுவதும் விலைக் குறைவில் கிடைக்கும் ஒரு பழம் தான் பப்பாளி. இந்த பப்பாளி ஏராளமான சத்துக்களை தன்னுள் கொண்டது. முக்கியமாக பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் நொதி உள்ளது. இது கல்லீரலின் வளர்சிதை மாற்ற சுமையை எளிதாக்குகிறது. மேலும் பப்பாளியில் ப்ளேவோனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளன. இவை இரண்டும் கொழுப்பு கல்லீரல் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. ஆயுர்வேதத்திலும் கல்லீரல் பிரச்சனைக்கு பப்பாளி பரிந்துரைக்கப்படுகின்றன.
கிரான்பெர்ரிகள்
கிரான்பெர்ரி பழங்களில் புரோஆந்தோசயனிடின்கள் உள்ளன. அவை சிறுநீரக அமைப்பில் பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொள்வதைத் தடுப்பது மட்டுமின்றி, சிறுநீரக செயல்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதுவும் கிரான்பெர்ரி பழங்களை அடிக்கடி வாங்கி சாப்பிட்டால், நாள்பட்ட சிறுநீரக நோய் மேம்படுவதைத் தடுக்கலாம். அதற்கு கிரான்பெர்ரி பழங்களை கொண்டு ஜூஸ் தயாரித்து, சர்க்கரை சேர்க்காமல் காலை வேளையில் குடித்து வாருங்கள்.
சாத்துக்குடி
உடல்நலம் சரியில்லாத வேளைகளில் சாப்பிடும் ஒரு பழம் தான் சாத்துக்குடி. இதில் லிமோனாய்டுகள் உள்ளன. இது கல்லீரல் நொதிகளை தூண்டிவிட்டு, நச்சுக்களை நீக்க உதவுகிறது. இப்படிப்பட்ட சாத்துக்குடியை தினசரி உணவில் சேர்த்து வந்தால், அது செரிமான பிரச்சனைகளை தடுப்பதோடு, வயிற்று உப்புசத்தையும் தடுக்கிறது. அதுவும் இந்த சாத்துக்குடியைக் கொண்டு ஜூஸ் தயாரிக்கும் போது, அதில் உப்பு அல்லது சர்க்கரை என்று எதுவும் சேர்க்காமல் குடிக்க வேண்டும். இதன் மூலம் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு, கல்லீரல் செல்களும் புத்துயிர் பெறுகின்றன.
தர்பூசணி
தர்பூசணி ஒரு கோடைக்கால பழம் மட்டுமின்றி, நீர்பெருக்கியாகவும் செயல்படுகிறது. ஒருவர் அதிகமாக சிறுநீர் கழித்தால், உடலில் இருந்து நச்சுக்கள் திறம்பட வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாக இருக்கும். மேலும் இந்த பழத்தில் சிட்ருலின் உள்ளது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடலில் அம்மோனியாவைக் குறைத்து, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை ஆதரிக்கிறது. எனவே இந்த பழத்தையும் அடிக்கடி வாங்கி சாப்பிட மறவாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications