Latest Updates
-
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள்
வெறும் கேரட் ஜூஸை குடிக்காம.. இந்த 5 பொருட்களை கலந்து குடிங்க.. இருமடங்கு நன்மைகள் கிடைக்கும்!
Carrot Juice: காய்கறிகளுள் கேரட் மிகவும் சுவையானது மட்டுமின்றி, கண்களுக்கு மிகவும் நல்லது என்பதை அனைவரும் அறிவோம். தினமும் ஒரு கேரட்டை உட்கொண்டு வந்தால், கண்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமமும் பளிச்சென்று அழகாகவும், பொலிவோடும் இருக்கும். முக்கியமாக கேரட்டில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும்.
இதில் உள்ள பீட்டா கரோட்டீன் சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகளும் கூறுகின்றன. மேலும் இதில் கால்சியம், வைட்டமின் கே போன்ற எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் இருப்பதால், இதை தினமும் உட்கொண்டு வரும் போது எலும்புகளும் வலுவாக இருக்கும்.

அதுவும் இந்த கேரட்டை அரைத்து ஜூஸ் எடுத்து, அந்த ஜூஸ் உடன் ஒருசில பொருட்களை கலந்து குடிக்கும் போது, நோயெதிர்ப்பு சக்தி வலுவடைந்து, இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா? இப்போது கேரட் ஜூஸ் உடன் எந்தெந்த பொருட்களை கலந்து குடிக்கலாம் என்பதையும், அவற்றால் கிடைக்கும் நன்மைகளையும் காண்போம்.
1. இஞ்சி ஜூஸ்
கேரட் ஜூஸ் தயாரிக்கும் போது, அத்துடன் சிறிது இஞ்சியை சேர்த்து அரைக்கும் போது, ஜூஸிற்கு ஒரு நல்ல ப்ளேவர் கிடைப்பதோடு, அந்த ஜூஸில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை கிடைக்கும். இதன் விளைவாக செரிமானம் மேம்படும், உடலினுள் உள்ள அழற்சி குறையும் மற்றும் மெட்டபாலிசம் மேம்படும். ஆனால் இப்படி ஜூஸை தயாரித்த பின் உடனே குடித்துவிட வேண்டும்.
2. ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளன. இவை உடலினுள் உள்ள அழற்சியைக் குறைக்கவும், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகின்றன. அதற்கு கேரட் ஜூஸை தயாரித்த பின், அத்துடன் ஆரஞ்சு பழத்தின் சாற்றினை கலந்து குடிக்க வேண்டும். இதன் மூலம் இரட்டிப்பு நன்மைகளைப் பெறலாம்.
3. எலுமிச்சை ஜூஸ்
ஆரஞ்சு பழத்தைப் போன்றே எலுமிச்சையிலும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த எலுமிச்சை கேரட் ஜூஸிற்கு நல்ல நல்ல சுவையைக் கொடுப்பதோடு, ஆரோக்கியத்திலும் நல்ல மாற்றத்தைத் தரும். அதுவும் இவற்றில் உள்ள வைட்டமின் சி என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இது உடலில் கொலாஜன் உற்பத்திக்கு உதவி புரிந்து, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் நோய்த்தொற்றுக்களை எதிர்த்து போராட உதவுகிறது.
4. ஆப்பிள் ஜூஸ்
ஆப்பிள் மற்றும் கேரட் ஜூஸ் மிகச்சிறந்த காம்பினேஷன். இந்த காம்பினேஷனில் ஜூஸை குடிக்கும் போது, அது செரிமானத்திற்கு உதவுவதோடு, உடலை சுத்திகரிக்க உதவுகிறது. ஆப்பிளில் பல வகையான பைட்டோகெமிக்கல்கள் மற்றும் குளோரோஜெனிக் அமிலங்களும் உள்ளன. இவை குறிப்பிட்ட வகையான புற்றுநோய்கள், ஆஸ்துமா, இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது.
5. தேன்
கேரட் ஜூஸ் தயாரித்த பின், அதில் சுவைக்காக சர்க்கரையை சேர்ப்பதற்கு பதிலாக தேனை சேர்த்து கொள்வது நல்லது. தேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இவை ஜூஸிற்கு நல்ல சுவையை தருவதோடு, குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
எனவே நண்பர்களே! இனிமேல் கேரட் ஜூஸ் குடிப்பதாக இருந்தால், வெறும் கேரட் ஜூஸை மட்டும் குடிக்காமல், அவற்றுடன் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களுள் ஏதேனும் ஒன்றை கலந்து குடியுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications