Latest Updates
-
சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் கோலாப்பூரி பச்சை பயறு குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் சுக்கிரன்: சகல நன்மைகளையும் பெறப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
பூமியில் மனிதர்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள இடங்கள் - இங்க போனா உயிரோட திரும்பி வரவே முடியாதாம் -
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா?
தினமும் காலையில் 2 கிராம்பை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
Cloves Health Benefits In Tamil: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எலுமிச்சை நீரை குடிப்பது, வெந்தயத்தை ஊற வைத்து நீருடன் உட்கொள்வது போன்ற பல்வேறு பழக்கங்கள் மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் பிரபலமான ஒரு பழக்கம் தான் கிராம்பை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுவது.
நம் வீட்டு சமையலறையில் எத்தனையோ மருத்துவ குணம் வாய்ந்த பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் கிராம்பு. இந்த கிராம்பு சுவாசத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுக்கூடியது. இது தவிர கிராம்பில் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்த தாவர கலவைகள் உள்ளன.

அதுவும் கிராம்பில் யூஜெனோல் உள்ளது. இந்த யூஜெனோல் சக்தி வந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு பண்புகள், பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள் மற்றும் வலி நிவாரண பண்புகளுக்கு பெயர் பெற்றது. இந்த கிராம்பை தினசரி சமையலில் சேர்ப்பதை விட, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மென்று வரும் போது ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இப்போது தினமும் காலையில் 2 கிராம்பை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.
1. வாய்வழி ஆரோக்கியம் மேம்படும்
கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளுள் ஒன்று தான் வாய் புத்துணர்ச்சியுடன் துர்நாற்றமின்றி இருக்கும். ஏனெனில் இதில் யூஜெனோல் என்னும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது வாய் துர்நாற்றத்திற்கு காரணமான கிருமிகளை அழித்து, வாய் துர்நாற்றத்தைப் போக்குவதோடு, ஈறு தொற்றுகளையும் போக்கும். என்ன தான் கிராம்பு வாய் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவினாலும், தினசரி பற்களை துலக்குவது, ஃப்ளோசிங் செய்வது போன்றவற்றை தவிர்க்கக்கூடாது.
2. செரிமானம் மேம்படும்
பல நூற்றாண்டுகளாக செரிமான பிரச்சனைகளை போக்க கிராம்பு பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிராம்பில் உள்ள மருத்துவ பண்புகள் செரிமான நொதிகளை தூண்டவும், உண்ட உணவுகளை திறம்பட உடைக்கவும் உதவுகிறது. முக்கியமாக இதில் உள்ள யூஜேனோல் வயிற்றுப் புறணியைப் பாதுகாக்கவும், இரைப்பை புண்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுவதால் விலங்குகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மனித ஆய்வுகள் தேவைப்பட்டாலும், சீரான உணவில் கிராம்பை சேர்ப்பது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
3. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்தது
மசாலா பொருட்களிலேயே வலுவான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்தது என்றால், அது கிராம்பு தான். இது உடலினுள் ஏற்படும் வீக்கம், இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற நாட்பட்ட நோய்களுக்கு பங்களிக்கும் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகின்றன. இப்படி வலுவான யூஜெனோல் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த கிராம்பை தினமும் 1-2 மென்று சாப்பிடும் போது, உடலில் உடனே பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டாலும், தினசரி எடுக்கும் போது நீண்ட கால ஆரோக்கியத்தை ஆதரிக்கும்.
4. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
கிராம்பு இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள ஆதரிப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன. மேலும் சில சிறிய மனித ஆய்வுகள் மற்றும் விலங்கு ஆராய்ச்சிகள், கிராம்பில் உள்ள சேர்மங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, உணவுக்குப் பிந்தைய இரத்த சர்க்கரை அதிகரிப்புகளைக் குறைக்கக்கூடும் என்று குறிப்பிடுகின்றன.
இருப்பினும் சர்க்கரை நோய் மருந்துகளுக்கு மாற்றாக கிராம்பை ஒருபோதும் நினைக்கக்கூடாது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் கிராம்பை எடுக்கும் முன், மருத்துவரிடம் ஒருமுறை கேட்டுக் கொள்வது நல்லது.
5. அழற்சியை எதிர்த்துப் போராட உதவும்
நாள்பட்ட அழற்சியானது ஆர்த்ரிடிஸ், இதய நோய், வளர்சிதை மாற்ற கோளாறுகளுடன் தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ளது. அதுலும் இதில் உள்ள யூஜெனோல் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டுள்ளது. பல ஆய்வுகள் முழு கிராம்புகளுக்குப் பதிலாக செறிவூட்டப்பட்ட கிராம்புச் சாறுகளைப் பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அழற்சி எதிர்ப்பு டயட்டில் கிராம்பைச் சேர்ப்பது மிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடும்.
மொத்தத்தில் தினமும் காலையில் 1-2 கிராம்பை மென்று சாப்பிடுவது புத்துணர்ச்சியான சுவாசம், மேம்பட்ட செரிமானம், ஆன்டி-ஆக்ஸிடன்ட் பாதுகாப்பு, உடலினுள் அழற்சி குறைதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கக்கூடும். இருப்பினும் எப்போதும் கிராம்பை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக நினைக்கக்கூடாது. அதை ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் பகுதியாகவே கருத வேண்டும். முக்கியமாக கிராம்பு அதிக வீரியமிக்கது என்பதால் அளவாக எடுப்பதே சிறந்தது என்பதை மறவாதீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications