Latest Updates
-
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்..
Personality Test: ஒருவரது ஆளுமையானது அவர்களது சிந்திக்கும் முறை, பழக்கவழக்கங்கள் மற்றும் மற்றவர்களுடன் பழகும் விதத்தில் வெளிப்படும். மேலும் நம் அனைவருக்குமே நமது பலம் என்ன என்பது முழுமையாக தெரியாது. நீங்கள் உங்களின் பலம் என்னவென்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறர்களா? அப்படியானால் சுவாரஸ்யமான ஆளுமை சோதனைகளை முயற்சித்துப் பாருங்கள். இந்த வகையான ஆளுமை சோதனைகளானது ஆர்வத்தை தூண்டுபவையாக இருக்கும். சில ஆளுமை சோதனைகளானது ஒருவரது தேர்வு செய்யும் போக்கை பொறுத்து இருக்கும்.

அந்த வகையில் ஒருவரது பலம் என்னவென்பதை அறிய உதவும் ஒரு பழ ஆளுமை சோதனை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 4 பழங்கள் உள்ளன. அதில் உங்களுக்கு பிடித்த பழம் என்னவென்பதை தேர்வு செய்து, உங்களின் பழம் என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. பீச்
உங்களுக்கு பீச் பழம் பிடிக்குமானால், உங்களின் மிகப்பெரிய பலம் ஞானம் ஆகும். இதனால் தான் மற்றவர்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது உங்களின் ஆலோசனை பெற விரும்புகிறார்கள். அனைத்து கேள்விகளுக்கும் உடனே பதில் அறிந்து கொள்வதை விட, மற்றவர்கள் யோசிக்காத அளவில் கேள்விகளை எழுப்பும் திறனை கொண்டிருப்பீர்கள். அனுபவங்களின் மூலம் பாடம் கற்றுக் கொண்டு, ஒவ்வொரு சூழ்நிலைகளின் போதும் அமைதியாகவும், தெளிவாகவும் செயல்படுவீர்கள். எப்போது பேச வேண்டும், எப்போது அமைதியாக இருந்து மற்றவர்களை அவர்களாகவே கற்றுக்கொள்ள விட வேண்டும் என்பதை நீங்கள் நன்கு அறிந்தவர்கள்.
2. மாம்பழம்
உங்களுக்கு மாம்பழம் பிடிக்குமானால், உங்களின் மிகப்பெரிய பலம் பணிவு ஆகும். ஒரு பிரச்சனையை தீர்த்துவிட்டு, அதற்கான பாராட்டை எதிர்பாராமல் அமைதியாக இருப்பீர்கள். உங்களால் ஒரு காரியம் நடந்து, மற்றவர்கள் அதற்கான பெருமையைப் பெற்றுக் கொண்டாலும், அதை ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ளமாட்டீர்கள். விமர்சனங்களை எளிதாக ஏற்றுக்கொள்வதுடன், பிறர் வெற்றியையும் பொறாமையின்றி கொண்டாடுவீர்கள். பலர் உங்களின் அமைதியை லட்சியமின்மை என்று நினைக்கலாம். ஆனால் உங்களின் திறமையை நிரூபிக்க பாராட்டையோ, விருதையோ எதிர்பார்க்கமாட்டீர்கள். இருப்பினும் அடுத்தமுறை உங்களை பாராட்டும் போது அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.
3. ப்ளூபெர்ரி
உங்களுக்கு ப்ளூபெர்ரி பழம் பிடிக்குமானால், உங்களின் பலம் தாராள மனப்பான்மை. மற்றவர்கள் உங்களிடம் வந்து தங்களின் தேவையை கேட்கும் முன்பே, அதை உணர்ந்து உதவுவீர்கள். சிறிய விஷயங்களைக் கூட நினைவில் வைத்துக் கொண்டு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பாக உதவி செய்வீர்கள். மற்றவர்களின் பிரச்சனைகளையும், உணர்வுகளையும் சொல்லாமலேயே புரிந்து கொள்வீர்கள். ஆனால் இப்படி எப்போதும் மற்றவர்களுக்காக கொடுத்து கொண்டே இருப்பதால் உங்களை மறந்துவிடுவீர்கள். எனவே யாரேனும் உங்களுக்கு உதவ முன்வந்தால், அதை ஏற்றுக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்.
4. செர்ரிப் பழம்
உங்களுக்கு செர்ரி பழம் பிடிக்குமானால், உங்களின் பலம் உணர்ச்சி நுண்ணறிவு. மற்றவர்களின் மனநிலையை எளிதாக புரிந்துகொண்டு, அவர்கள் சொல்லாமலேயே ஏதோ பிரச்சனை இருப்பதை உணரக்கூடியவர்கள். யாராவது கவலையில் இருக்கும் போது, அவர்களிடம் பொறுமையாக பேசி ஆறுதல் அளிப்பீர்கள். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வது உங்களுக்கு இயல்பாகவே இருப்பதால், உங்களின் மதிப்பை நீங்களே குறைத்து மதிப்பிடலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
