Latest Updates
-
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1 கப் பச்சரிசியும், வெல்லமும் இருந்தா இந்த செட்டிநாடு கந்தர் அப்பத்தை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
அடிக்கடி சளி, இருமல் பிடிச்சு பாடாய்படுத்துதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 விதமான உணவுகளை தினமும் சாப்பிடுங்க.. -
டைனோசர்கள் உருவாவதற்கு முன்பே பூமியில் உருவான நதி எது தெரியுமா? இப்பவும் இதில் தண்ணீர் இருக்காம்
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்
Manathakkali Keerai Kadayal Recipe in Tamil: ஆரோக்கியமான உணவுகளில் பட்டியலில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது கீரைகள்தான். அதிலும் மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பது இன்னும் நல்லது. இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இரத்தம் குறைவாக இருப்பவர்கள் அல்லது இரத்த சோகை உள்ளவர்கள் இந்த கீரையை அடிக்கடி சாப்பிடுவது, இப்பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபட உதவும். மேலும் இது வயிறு தொடர்பான பல பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

கீரையை வழக்கம்போல பொரியல் செய்யாமல் ஒருமுறை காரைக்குடி ஸ்டைலில் கடையலை செய்து பாருங்கள். இது சாதத்தில் ஊற்றி சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இது சுவையானது மற்றும் ஆரோக்கியமானதும் கூட. உங்களுக்கு காரைக்குடி ஸ்டைல் மணத்தக்காளி கீரை கடையல் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரைக்குடி மணத்தக்காளி கீரை கடையலின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பருப்பை வேகவைக்க:
- 1/4 கப் துவரம் பருப்பு
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பு
- 3 பச்சை மிளகாய்
- 10 சின்ன வெங்காயம்
- 3 பல் பூண்டு
- 1 தக்காளி
- 1/4 டீஸ்பூன் நல்லெண்ணெய்
- 1 1/4 கப் தண்ணீர்
கடையல் செய்ய:
- 1 கட்டு மணத்தக்காளி கீரை
- 1/3 கப் தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 1/2 டேபிள்ஸ்பூன் நெய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 2 வர மிளகாய்
- 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
செய்முறை:
- முதலில் துவரம் பருப்பு மற்றும் பாசி பருப்பை நன்றாக கழுவிக் கொள்ளவும்.
- அவற்றைச் சூடான நீரில் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு குக்கருக்கு மாற்றவும்.
- அதில் தண்ணீர், மஞ்சள் தூள், சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்கவிடவும்.
- அதனுடன் தக்காளி மற்றும் நல்லெண்ணெய் சேர்க்கவும்.
- குக்கரை மூடி 5 விசில் வரும் வரை வேகவைத்து, பின் 3 நிமிடங்கள் குறைந்த தீயில் வைக்கவும். தானாகவே ஆவி அடங்கும் வரை காத்திருக்கவும்.
- பருப்பை நன்றாகக் கலந்து மசித்துக்கொள்ளவும்.
- மணத்தக்காளி கீரை, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 4 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- நன்றாக மசித்து மீண்டும் கொதிக்கவிடவும். பின்னர் அடுப்பை அணைக்கவும். வேக வைத்த பருப்பை இதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் நெய் ஊற்றி சூடாக்கவும். நெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்துத் தாளிக்கவும்.
- அடுப்பை அணைத்துவிட்டு, தாளிப்பை பருப்புக் கலவையில் சேர்க்கவும். பிறகு மீண்டும் அடுப்பை பற்ற வைத்து 2 நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான காரைக்குடி மணத்தக்காளி கீரை கடையல் ரெடி!



Click it and Unblock the Notifications