Latest Updates
-
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1 கப் பச்சரிசியும், வெல்லமும் இருந்தா இந்த செட்டிநாடு கந்தர் அப்பத்தை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
அடிக்கடி சளி, இருமல் பிடிச்சு பாடாய்படுத்துதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 விதமான உணவுகளை தினமும் சாப்பிடுங்க.. -
டைனோசர்கள் உருவாவதற்கு முன்பே பூமியில் உருவான நதி எது தெரியுமா? இப்பவும் இதில் தண்ணீர் இருக்காம்
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்..
Ketu-Sun Conjunction In Leo 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் தற்போது சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நுழைந்து பயணித்து வருகிறார். இந்த சிம்ம ராசியில் ஏற்கனவே நிழல் கிரகமாக கருதப்படும் கேது பயணித்து வருகிறார். இதனால் சிம்ம ராசியில் கேது மற்றும் சூரியனின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இந்த சேர்க்கையானது செப்டம்பர் 18 ஆம் தேதி வரை நீடித்திருக்கும்.

சூரியனும், கேதுவும் சிம்ம ராசியில் ஒன்றிணைந்ததால், கிரகண யோகம் உருவாகியுள்ளது. ஜோதிடத்தின் படி, கேதுவின் நிழல் சூரியனின் மீது விழும் போது, ஒருவரது நம்பிக்கை குறைய தொடங்கும், பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், வேலையில் இலக்கை அடைய முடியாமல் போகலாம். மொத்தத்தில் வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது கேது-சூரிய சேர்க்கையால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் கேது-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் உயர் அதிகாரிகள் அல்லது உடன் வேலை செய்வோருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லவிட்டால் வேலையில் பல பிரச்சனைகளை சந்தித்து, வேலையை இழக்கவும் நேரிடும். மேலும் இக்காலத்தில் அவசரப்பட்டோ அல்லது கோபத்திலோ எந்த ஒரு பெரிய முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அதோடு பெரிய முதலீடுகளை செய்யும் முன் நன்கு ஆராய வேண்டும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பண இழப்பை சந்திக்க நேரிடும்.
கும்பம்
கும்ப ராசியின் 7 ஆவது வீட்டில் கேது-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். ஈகோ பிரச்சனைகள் வணிக கூட்டாளருடன் பதற்றத்தை அதிகரிக்கும். வியாபாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பண பிரச்சனைகளையும் அதிகம் சந்திக்கும் வாய்ப்புள்ளதால் செலவுகளைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டில் கேது சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வராமல் சிரமப்படுத்தும். எதிர்பாராத செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். இதன் முலம் பட்ஜெட் சீர்குலையும். சில சமயங்களில் கடன் வாங்கி வாழ்க்கையை ஓட்ட வேண்டிய சூழல் ஏற்படலாம். எனவே பண விஷயங்களில் கவனமாக இருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications