1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் சுக்கிரன்: சகல நன்மைகளையும் பெறப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்!

Venus Transit In Libra On 02 September 2026: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். மாதம் ஒருமுறை ராசியை மாற்றும் சுக்கிரன், அழகு ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இந்த சுக்கிரன் தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார்.

Venus Transit In Libra On 02 September 2026 These Zodiac Signs Get More Benefits

இந்நிலையில் இந்த சுக்கிரன் செப்டம்பர் 02 ஆம் தேதி தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ராசிக்கு சுக்கிரன் செல்வதால் மிகவும் மங்களகரமான பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும்.

அதுவும் 1 வருடம் கழித்து சுக்கிரன் இந்த ராசிக்கு நுழைந்துள்ளதால், இந்த சுக்கிர பெயர்ச்சியானது சிறப்பானது. குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் தொழில், பயணம், முதலீடு மற்றும் உறவுகள் தொடர்பான விஷயங்களில் நேர்மறையான மாற்றங்களைக் காணலாம். அதுமட்டுமின்றி நிதி நிலை முன்பை விட சிறப்பாகவும் இருக்கும். இப்போது செப்டம்பரில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் பல சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான யோகம் கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மேலும் கடின உழைப்புக்கான பலனும் கிடைக்கும். முக்கியமாக நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருப்பதால், வெற்றிகள் குவியும். மாணவர்கள் தேர்வுகள் மற்றும் போட்டிகளில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள்.

மிதுனம்

மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவு மேம்படும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். இம்மாதத்தில் புதிய நட்பு கிடைக்கும். இந்த நட்பால் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும். மேலும் உங்களின் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும். நிதி பிரச்சனைகள் தீரும் மற்றும் நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும். இம்மாதத்தில் வருமானம் அதிகரிக்கும். பல புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும். போட்டிகளில் வெற்றியைப் பெறுவீர்கள். பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலனைத் தரும். நீதிமன்றம் தொடர்பான வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் தேடி வரும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, August 25, 2026, 11:15 [IST]
q
Desktop Bottom Promotion