Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் சுக்கிரன்: சகல நன்மைகளையும் பெறப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
பூமியில் மனிதர்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள இடங்கள் - இங்க போனா உயிரோட திரும்பி வரவே முடியாதாம் -
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை
சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் கோலாப்பூரி பச்சை பயறு குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
Kolhapuri Green Gram Masala Recipe in Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரிக்கு ஒரு வித்தியாசமான கிரேவியை செய்ய ஆசைப்படுறீங்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் பச்சை பயறு இருந்தால், சுவையான கோலாப்பூரி மசாலாவை செய்து கொடுங்கள். இந்த கிரேவி சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி தோசை, புரோட்டா மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.

இந்த பச்சை பயறு கோலாப்பூரி மசாலா வழக்கமான குருமா போல இருக்காது, இதன் செய்முறையே கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும். இந்த மசாலா நார்த் இந்தியாவில் மிகவும் பிரபலமானதாகும். நம்மூரிலும் பல ரெஸ்டாரண்ட் மற்றும் தாபாக்களில் இது பிரபலமான உணவாகும். ஒருமுறை இந்த சைடிஷை செய்து விட்டால் அதன்பிறகு அடிக்கடி இதைத்தான் செய்வார்கள்.
உங்களுக்கு பச்சை பயிறை வைத்து கோலாப்பூரி மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு கோலாப்பூரி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
குக்கரில் வேகவைக்க:
- 1 கப் முழுப் பச்சைப்பயறு
- 2 கப் தண்ணீர்
- 1 டீஸ்பூன் நெய்
மசாலா செய்ய:
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 1 துண்டு பட்டை
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 2 ஏலக்காய்
- 1/2 டீஸ்பூன் முழு மிளகு
- 2 கிராம்பு
அரைப்பதற்கு:
- 4 பல் பூண்டு
- 1 இன்ச் இஞ்சித் துண்டு
- 2 பச்சை மிளகாய்
- 1/2 கப் கொத்தமல்லி இலைகள்
- தேவையான அளவு தண்ணீர்
வதக்க:
- 1½ ஸ்பூன் கடலை எண்ணெய்
- 2 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 3 தக்காளி (நறுக்கியது)
- 1 பிரிஞ்சி இலை
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- 1 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- 1 டீஸ்பூன் சன்னா மசாலா
- 1 டீஸ்பூன் கரம் மசாலா
தாளிக்க:
- 2 டீஸ்பூன் நெய்
- 5 பல் பூண்டு (மெல்லியதாக நறுக்கியது)
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள்
செய்முறை:
- முழுப் பச்சைப்பயறை நன்கு கழுவி, 6 முதல் 8 மணிநேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
- சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு ஆகியவற்றை ஒரு மெல்லிய பருத்தித் துணியில் போட்டு முடிச்சாகக் கட்டிக்கொள்ளவும்.
- ஊறவைத்த பச்சைப்பயறு, தண்ணீர் மற்றும் நெய் ஆகியவற்றுடன் இந்த மசாலா முடிச்சையும் குக்கரில் சேர்க்கவும். குக்கரை மூடி, சுமார் 8 விசில் வரும் வரை அல்லது பயறு நன்கு மென்மையாகும் வரை வேகவைக்கவும்.
- பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு வாணலியில் கடலை எண்ணெயைச் சூடாக்கவும். அதில் பிரிஞ்சி இலையைச் சேர்த்துச் சில நொடிகள் வதக்கவும்.
- பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும்
வரை வதக்கவும்.
️
- அதன்பின் தக்காளி சேர்த்து, அவை நன்கு குழைந்து மென்மையாகும் வரை
சமைக்கவும்.
- பின்னர் அரைத்து வைத்துள்ள விழுது, காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், சன்னா மசாலா மற்றும் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- வெந்த பருப்பிலிருந்து மசாலாப் பொருட்கள் அடங்கிய முடிச்சை எடுத்துவிடவும். வதக்கிய மசாலாவை பருப்புடன் சேர்த்து, தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிப் பதத்தை சரிசெய்து, 10-15 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
- ஒரு சிறிய வாணலியில் நெய் ஊற்றிச் சூடாக்கவும். நறுக்கிய பூண்டுப் பற்களைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அடுப்பை அணைத்துவிட்டு, சீரகம், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். ஒருமுறை கிளறிவிட்டு, உடனடியாகத் தாளித்த கலவையை பருப்பின் மீது ஊற்றி கிளறினால் சுவையான கோலாப்பூரி பச்சை பயறு மசாலா ரெடி!



Click it and Unblock the Notifications