Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
சாப்பிட்டத்துக்கு அப்புறம் உங்க சர்க்கரை அளவு அதிகமாகுதா? பானை மாதிரி வயிறு வீங்குதா? அப்ப 'இத' குடிங்க!
மதிய வேளையில் அதிகமாக சாப்பிட்டு வீட்டீர்களா? கனமான உணவை சாப்பிட்ட பிறகு வீங்கியதாக உணர்கிறீர்களா? இதற்கு குளிர் மற்றும் சோடா பானங்களை அருந்த நினைக்கிறீர்களா? இது தவறான யோசனை. ஆம், நீங்கள் சாப்பிட்ட பிறகு அருந்த வேண்டிய ஓர் பானம், மூலிகை தேநீர்.
பல்வேறு மருத்துவ குணங்களுக்காக பண்டைய காலம் முதல் இன்று வரை மருத்துவ உலகில் பயன்படுத்தி வரும் ஓர் இயற்கையான பொருள் கிராம்பு. கிராம்பு கொண்டு தயாரிக்கப்படும் தேநீர்தான் இந்த பிரச்சனைக்கான தீர்வு. இது வெறுமனே திடீரென உங்களுக்கு ஏற்படும் அசௌகரியம் மற்றும் வாயு பிரச்சனையை சரிசெய்ய உதவும். கிராம்பு மற்றும் அதன் எண்ணெய் அவற்றின் சக்திவாய்ந்த மருத்துவ நன்மைகளுக்காக அறியப்படுகிறது.

இந்த தேநீர் செரிமானத்தை மேம்படுத்தவும், கவலையை குறைக்கவும் மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. அதிகமாக நீங்கள் உணவு சாப்பிட்ட பிறகு கிராம்பு டீயை ஏன் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணத்தை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
செரிமானத்தை அதிகரிக்கிறது
மதிய உணவு மற்றும் இரவு உணவுக்குப் பிறகு கிராம்பு தேநீர் பருகுவது செரிமான நொதிகளின் சுரப்பை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் உங்கள் செரிமான அமைப்பு நன்றாக செயல்படும். இது அஜீரணம், வீக்கம் மற்றும் வாயுவைக் குறைக்க உதவும்.
அழற்சி எதிர்ப்பு
கிராம்புகளில் யூஜெனால் போன்ற அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் உள்ளன. இது செரிமான மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது அதிகப்படியான உணவு மற்றும் பிற செரிமான பிரச்சனைகளால் ஏற்படும் அசௌகரியத்தை போக்க உதவுகிறது.
சிறந்த இன்சுலின் ஒழுங்குமுறை
பல ஆய்வுகளின்படி, கிராம்புகளை வெறும் வாயில் மெல்லுவது சிறந்த இன்சுலின் மேலாண்மைக்கு உதவும். உண்மையில், கிராம்பு தேநீர் அருந்துவது இரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் தொடர்ச்சியான வெளியீட்டை உறுதிப்படுத்த உதவுகிறது. இதனால், திடீர் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.
உணவு சாப்பிட்ட பிறகு உங்கள் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க, இந்த தேநீரை தினமும் அருந்துங்கள். அதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை செய்ய மறக்காதீர்கள்.
வாய்வழி ஆரோக்கியம்
கிராம்பு டீயை சாப்பிட்ட பிறகு பருகுவது, வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, துவாரங்களை அகற்றவும் உதவும், இது கிராம்புகளின் சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைக்க உதவும்.
ஆக்ஸிஜனேற்ற பண்புகள்
கிராம்புகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலில் ஃப்ரீ ரேடிக்கல்கள் இருப்பதால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது. இந்த தேநீரை பருகுவது உங்கள் உடலுக்கு ஆன்டிஆக்ஸிடன்ட்களின் ஊக்கத்தை அளிக்கிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகிறது மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
கிராம்பு தேநீர் செய்வது எப்படி?
இந்த எளிய தேநீர் தயாரிக்க, 2 கிளாஸ் தண்ணிரை கொதிக்க வைக்க வேண்டும். அதில், ஒரு தேக்கரண்டி முழு கிராம்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், சிறிது தேன் சேர்த்து இந்த டீயை நீங்கள் ருசிக்கலாம். இது உங்கள் சுவை மொட்டுகளுக்கு விருந்தளிப்பதோடு, உடலுக்கு பல அதிசய நன்மைகளையும் வழங்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
