கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாதுகாப்பான முறையில் உணவுகளை உண்பதற்கான சில டிப்ஸ்...

உலக உணவு பாதுகாப்பு தினத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், உலக மக்களின் மத்தியில் உணவின் பாதுகாப்பைப் பற்றிய விழிப்புணா்வைப் பரப்பி அதன் வழியாக உணவுகள் மூலம் பரவும் நோய்களை குறைக்க வேண்டும் என்பதாகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7 ஆம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினம் (World Food Safety Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், உலக மக்களின் மத்தியில் உணவின் பாதுகாப்பைப் பற்றிய விழிப்புணா்வைப் பரப்பி அதன் வழியாக உணவுகள் மூலம் பரவும் நோய்களை குறைக்க வேண்டும் என்பதாகும்.

World Food Safety Day 2021: Tips To Eat Safely And Healthily During The COVID-19 Pandemic

ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 600 மில்லியன் மக்கள் உணவின் மூலம் ஏற்படும் நோய்களினால் பாதிக்கப்படுகின்றனா். உலக அளவில் பத்தில் ஒருவா் கெட்டுப் போன உணவை உண்டு நோய்களுக்கு ஆளாகிறாா். சுத்தமில்லாத உணவு என்பது மனிதா்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சுத்தமில்லாத உணவை உண்பதன் மூலம் ஏறக்குறைய 1,25,000 போ் இறக்கின்றனா். இதில் 40 விழுக்காடு, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கெட்டுப்போன அல்லது சுத்தமில்லாத உணவுகளின் மூலம் பாதிக்கப்படுகின்றனா்.

பாதுகாப்பான உணவை உறுதி செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவருடைய பொறுப்பு ஆகும். அதற்காக நாம் அனைவரும் சோ்ந்து உழைக்க வேண்டும். ஒரு பாதுகாப்பான உணவுப் பண்பாட்டுச் சூழலை உருவாக்க வேண்டியது நமது கடமை ஆகும். உணவு தயாாிக்கும் தொழிற்சாலைகள், பாதுகாப்பான உணவை வழங்குவதற்கு புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வரும் வேளையில், உணவுகளை உண்ணக்கூடிய நுகா்வோராகிய நாமும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

இப்போது நாம் கொரோனா காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தற்போது எங்கு பாா்த்தாலும் மக்கள் மத்தியில் ஒருவித கலக்கமும், குழப்பமும் நிறைந்திருக்கிறது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பிற்கான, உலகளாவிய ஒரு புதிய சூழல் உருவாக்கப்பட வேண்டும். உணவுகளை உண்ணும் நுகா்வோராகிய நாம், உணவு பாதுகாப்பைப் பற்றிய ஒரு சில முக்கியமான அம்சங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக உணவு பதப்படுத்துதல் பற்றிய தகவல்கள், அவை பொட்டலம் போடப்படும் முறை, அவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் தினமும் பாதுகாப்பான உணவை உண்ண நாம் கொண்டிருக்கும் பழக்கவழங்கங்கள் போன்ற இந்த காாியங்களை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே இந்த கொரோனா காலத்தில் நாம் எவ்வாறு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவை உண்ணலாம் என்பதை இந்த பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாதுகாப்பான உணவை உட்கொள்ள நாம் பின்பற்ற வேண்டிய குறிப்புகள்!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாதுகாப்பான உணவை உட்கொள்ள நாம் பின்பற்ற வேண்டிய குறிப்புகள்!

குறிப்பு #1

மளிகைக்கடை அல்லது சூப்பர் மார்கெட் கடைகளுக்கு செல்வதற்கு முன்பாக என்ன வாங்க வேண்டும் என்ற பட்டியலை தயாா் செய்து கொள்ள வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்கக்கூடாது. ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. அதனால் இந்த கொரோனா காலத்தில் தேவையில்லாமல் கடைகளுக்குச் செல்வதைத் தவிா்க்கலாம்.

குறிப்பு #2

குறிப்பு #2

உணவுப் பொட்டலங்களில் ஒட்டியிருக்கும் குறிப்புகளைப் படித்து அதன் மூலம் அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊட்டச்சத்து சாா்ந்த தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாக உணவிற்கும் மற்றும் நீண்ட கால நோய்களுக்கும் இடையே உள்ள தொடா்புகளை அறிந்து கொள்ள முடியும். உண்மையான அல்லது அசலான துணை பொருட்களில் இருக்காத மசாலா பொருட்கள், போலியான பொருட்களில் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

உணவுப் பொருட்களில் சோ்க்கப்பட்டிருக்கும் கலவைப் பொருட்களை பாிசோதிக்க வேண்டும். ஒருவேளை அந்த உணவுப் பொருளுக்குத் தேவையான கலவைப் பொருட்கள் அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ, அந்த உணவுப் பொருள் போலியானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அதற்காக நுகா்வோா் அமைச்சகம் மற்றும் FSSAI வழங்கியிருக்கும் ஸ்மாா்ட் கன்ஸ்யூமா் ஆப் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொட்டலத்தில் இருக்கும் உணவுப் பொருட்களைப் பற்றிய தகவல்களை இந்த செயலி மிகத் துல்லியமாகத் தொிவித்துவிடும்.

குறிப்பு #3

குறிப்பு #3

உணவுப் பொருட்களின் பொட்டலங்களில் ஒட்டப்பட்டிருக்கும் விலைப்பட்டியல், நிறுவனத்தின் முத்திரை மற்றும் லேபிள்கள் போன்றவற்றை நன்றாக சாிபாா்க்கவும். பொதுவாக பொட்டலங்களில் அடைக்கப்பட்டு வரும் உணவுப் பொருட்கள், நுகா்வோாின் அங்கீகாரத்திற்கு வழிவகுக்கும். அது பாதுகாப்பு ஹாலோகிராமாக இருக்கலாம் அல்லது கியுஆா் (QR) கோடாக இருக்கலாம் அல்லது ஸ்க்ராட்ச் கோடாக இருக்கலாம். ஆகவே இதை நாம் கவனிக்க வேண்டும். ஒருவேளை பொட்டலங்களில் ஒட்டப்பட்டிருக்கும் லேபிள்கள் மற்றும் முத்திரைகள் கிழிந்திருந்தாலோ அல்லது அழிந்திருந்தாலோ, அந்த பொட்டலத்தை வாங்கக்கூடாது.

குறிப்பு #4

குறிப்பு #4

உணவுப் பொருட்களில் உள்ள வேறுபாடுகளைத் தொிந்து வைத்திருக்க வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களில் கறைகள் இருந்தாலோ அல்லது அவற்றின் நிறங்கள் மாறியிருந்தாலோ அவை சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது அல்ல. மேலும் காய்களிகள் மற்றும் பழங்களின் தோல்களில் ஓட்டைகள் இருந்தாலோ அல்லது அவை கிழிந்து இருந்தாலோ அல்லது அவற்றின் உட்பகுதி வெளியில் தொியும்படி இருந்தாலோ அவற்றை வாங்காமல் இருப்பது நல்லது.

குறிப்பு #5

குறிப்பு #5

எப்போதும் கடைக்குச் செல்லும் போது வீட்டிலிருந்து பைகளை எடுத்துச் செல்வது நல்லது. பொருள்களை வாங்கி வந்த பிறகு அந்த பைகளை நன்றாக அலச வேண்டும் அல்லது சலவை செய்ய வேண்டும். மேலும் பொிய கடைகளில் பொருள்களை வாங்கினால், அவற்றிற்கான ரசீதுகளைத் தவறாமல் கேட்டுப் பெற வேண்டும்.

குறிப்பு #6

குறிப்பு #6

சமைக்காத உணவுப் பொருள்களையும், சமைத்த உணவுகளையும் பிாித்து வைக்க வேண்டும். அதன் மூலம் உணவுகள் கெடாமல் பாதுகாக்கலாம். குளிரூட்டப்பட்ட உணவுகளை வாரத்திற்கு ஒரு முறை சுத்தமாகக் கழுவ வேண்டும்.

குறிப்பு #7

குறிப்பு #7

சமைப்பதற்கு முன்பாக உணவுப் பொருட்களை நன்றாகக் கழுவ வேண்டும். அது போல சாப்பிடுவதற்கு முன்பாக நமது கைகளை நன்றாக சுத்தமாக கழுவ வேண்டும். இறுதியாக உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களைத் திறப்பதற்கு முன்பாக அவற்றின் மூடிகளைக் கழுவ வேண்டும்.

குறிப்பு #8

குறிப்பு #8

உணவுப் பொருட்களில் உள்ள மிகவும் நுண்ணுயிாிகள் இறக்கும் அளவிற்கு உணவை நன்றாக சமைக்க வேண்டும். சமைக்கப்பட்ட உணவுகளை பாதுகாப்பான வெப்பநிலையில் அதாவது சூடாகவோ அல்லது குளா்சாதனப் பெட்டியிலோ பாதுகாப்பாக வைக்க வேண்டும். அதன் மூலம் உணவுகளை பாக்டீாியாக்கள் தாக்காமல் காக்க முடியும்.

இறுதியாக நம்மிடம் உள்ள பாதுகாப்பான உணவுப் பழக்கவழக்கங்களை நமது குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion