For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனிமேல் கேரட், உருளைக்கிழங்கு தோலை தூக்கி எறியாதீங்க... எதுக்குன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க...

நீங்கள் காய்கறிகள் மற்றும் இதர உண்ணும் உணவுப் பொருட்களின் முழு சத்தையும் பெற நினைத்தால், தோலை நீக்காமல் அப்படியே சமைத்து சாப்பிடுங்கள்.

|

நாம் சமைக்கும் போது பயன்படுத்தும் காய்கறிகளின் சத்து பெரும்பாலும் நாம் தூக்கி எறியும் தோல்களில் தான் உள்ளது என்பது தெரியுமா? பொதுவாக சமையலின் போது விதைகள், தோல், தண்டுப் பகுதிகள் போன்றவற்றை நீக்கிவிடுவோம். ஆனால் அப்படி தூக்கி எறியும் பொருட்களைக் கொண்டே பிரமாதமான ரெசிபியைத் தயாரிக்கலாம் என்பது தெரியுமா?

Wastes That Can Be Re-Used To Make Delicious Meals

சொல்லப்போனால், காய்கறிகளின் சதைப்பகுதியை விட, அதன் தோல் மற்றும் விதைகள் சுவையானதாகவும், ஊட்டச்சத்து அதிகம் நிறைந்ததாகவும் இருக்கும். அது தெரியாமல், நாம் பல காய்கறிகளின் தோல்களை நீக்கி விடுகிறோம். இன்னும் சிலர் காய்கறிகளின் தோல்களில் உள்ள சத்துக்களைப் பற்றி அறிந்தும், மிகவும் அழுக்காக உள்ளது என்று தோலை நீக்கிவிடுவார்கள். இப்படி தெரிந்தே செய்பவர்களை ஒன்றும் சொல்ல முடியாது.

MOST READ: நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவரா? கண் பிரச்சனை வராமலிருக்க இத படிங்க...

எனவே நீங்கள் காய்கறிகள் மற்றும் இதர உண்ணும் உணவுப் பொருட்களின் முழு சத்தையும் பெற நினைத்தால், தோலை நீக்காமல் அப்படியே சமைத்து சாப்பிடுங்கள். இக்கட்டுரையில் இதுவரை சமைக்கும் போது நாம் தூக்கி எறியும் சில உணவுப் பொருட்களை வேறு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று சில யோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உருளைக்கிழங்கு தோல்

உருளைக்கிழங்கு தோல்

காய்கறிகளின் ராஜா தான் உருளைக்கிழங்கு. ஏனெனில் இது பெரும்பாலும் அனைத்து காய்கறிகளுடனும் சேர்த்து சமைப்பதற்கு ஏற்றவாறு இருக்கும். மேலும் உருளைக்கிழங்கு கொண்டு குழம்பு மட்டுமின்றி, சிப்ஸ், ப்ரைஸ் என பலவாறு சமைத்து சாப்பிட ஏற்றது. ஆனால் பலரும் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு தான் சமையலில் பயன்படுத்துவார்கள். ஒருசிலர் தான் தோலுடன் சமைப்பார்கள்.

நீங்கள் இதுவரை உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிடுவீர்களானால், உடனே அப்பழக்கத்தைக் கைவிடுங்கள். ஒருவேளை தோலை நீக்கினால், அந்த தோலைக் கொண்டு அற்புதமான ஒரு ரெசிபியை சமைத்து சுவைத்துப் பாருங்கள். அது என்னவெனில், உருளைக்கிழங்கின் தோலை பேக்கிங் ட்ரேயில் போட்டு, அதன் மேல் சிறிது உப்பு, மசாலாப் பொருட்களைத் தூவி, மொறுமொறுவென்று வரும் வரை பேக்கிங் செய்யுங்கள். நிச்சயம் இது சுவையான ஒரு ஸ்நாக்ஸாக இருக்கும்.

MOST READ: ஆர்த்ரிடிஸ் வலியால் அவஸ்தைப்படுறீங்களா? அப்ப இத தினமும் நைட் தடவுங்க..

தோல் டீ

தோல் டீ

தோல் டீ குறித்து கேள்விப்பட்டதுண்டா? எலுமிச்சை தோல் டீ, வாழைப்பழ தோல் டீ, ஆரஞ்சு தோல் டீ என பல பழங்களின் தோல்களைக் கொண்டு சுவையான டீயைத் தயாரிக்கலாம். முக்கியமாக இந்த பழங்களின் தோல்களில் ஏராளமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இந்த டீ வகைகளைத் தயாரிப்பதற்கு, சிறிது நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து, அதில் ஏதேனும் ஒரு பழத்தின் தோலைப் போட்டு நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், இறக்கி வடிகட்டி தேன் கலந்து பருகவும். குறிப்பாக இந்த மாதிரியான டீ வகைகளைக் குடித்தால், சளி, இருமல் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகள் ஏதும் வராது.

கேரட் தோல்

கேரட் தோல்

உருளைக்கிழங்கிற்கு அடுத்தப்படியாக பலரும் தூக்கி எறியும் ஒரு தோல் தான் கேரட் தோல். சொல்லப்போனால், கேரட்டின் தசைப் பகுதியை விட, அதன் தோல்களில் தான் பீட்டா-கரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இனிமேல் கேரட்டை தோல் நீக்காமல் சாப்பிடுங்கள் அல்லது சமையலில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை தோலை நீக்கினால், அதை பொடியாக நறுக்கி சாலட், சூப், குழம்புகள், ஜூஸ்கள் மற்றும் ஸ்மூத்திகள் போன்றவற்றுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

MOST READ: இரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...

தர்பூசணி தோல்

தர்பூசணி தோல்

நீர்ச்சத்து அதிகம் நிறைந்த மற்றும் கண்களைக் கவரும் படியான நிறத்தைக் கொண்ட பழம் தான் தர்பூசணி. இப்பழத்தின் தசைப் பகுதியை விரும்பி சாப்பிடும் நாம், அதன் வெள்ளை நிற பகுதியை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் இந்த வெள்ளை நிறப் பகுதியைக் கொண்டு சுவையான ஊறுகாய் தயாரிக்கலாம் என்பது தெரியுமா? அதற்கு தர்பூசணியின் வெள்ளை நிறப் பகுதியை சிறு துண்டுகளாக வெட்டி, அத்துடன் உப்பு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் மசாலாப் பொருட்களைச் சேர்ந்து கலந்து நன்கு ஊற வைக்க வேண்டும். சொல்லப்போனால் தர்பூசணியின் வெள்ளை நிறப் பகுதியில் தான் ஏராளமான அளவில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது.

சிட்ரஸ் பழ தோல்கள்

சிட்ரஸ் பழ தோல்கள்

சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றின் சாற்றினை சுவைத்து, அவற்றின் தோலை அனைவருமே தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த தோல்களைக் கொண்டு மிட்டாய், ஊறுகாய், சாலட் ட்ரஸ்ஸிங் என பலவாறு தயாரிக்கலாம் என்பது தெரியுமா? அதிலும் இந்த பழங்களின் தோல்களைக் கொண்டு டீ தயாரித்துக் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

காளான் தண்டு

காளான் தண்டு

எத்தனை பேர் காளானை தண்டுடன் சமைக்கிறார்கள்? நிச்சயம் சிலர் தான் காளானை சமையலில் தண்டுடன் சேர்த்துக் கொள்வார்கள். நீங்கள் அப்படி அவற்றின் தண்டை தூக்கி எறிபவர்களானால், உடனே அப்பழக்கத்தைக் கைவிடுங்கள். இல்லாவிட்டால், அந்த தண்டக் கொண்டு சுவையான சூப் தயாரித்துக் குடியுங்கள். ஏனெனில் அவற்றின் தண்டுகளில் நாம் நினைத்திராத பல சத்துக்கள் உள்ளது.

பாஸ்தா நீர்

பாஸ்தா நீர்

பாஸ்தா, மக்ரோனி போன்றவற்றை சமைக்கும் போது, முதலில் அவற்றை நீரில் போட்டு நன்கு வேக வைத்து, வடிகட்டி எடுத்துக் கொள்வோம். எஞ்சிய நீரை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த நீரைத் தூக்கி எறியாமல், அவற்றைக் கொண்டு சூப், குழம்பு, காய்கறி கிரேவி, சாஸ் என பலவற்றில் பயன்படுத்தலாம். இதனால் அனைத்து சமையலும் நல்ல ஒரு சுவையுடனும், மணத்துடனும் இருக்கும்.

ப்ராக்கோலி தண்டு

ப்ராக்கோலி தண்டு

காளான் தண்டைப் போன்றே, ப்ராக்கோலியின் தண்டையும் சிலர் நீக்கிவிடுவர். ப்ராக்கோலியின் தண்டிலும் சில முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே இனிமேல் ப்ராக்கோலியை சமைக்கும் போது, அதன் தண்டை தனியாக எடுத்து, எண்ணெயில் போட்டு வதக்கி, அத்துடன் சிறிது உப்பு மற்றும் மசாலாப் பொருட்களை சேர்த்து நன்கு வதக்கி, ஸ்நாக்ஸாக சாப்பிடுங்கள். இது நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

ஆப்பிள் தோல்

ஆப்பிள் தோல்

ஆப்பிளை பலர் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுகிறார்கள். ஆனால் ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொண்டால், அதன் தோலில் தான் பெக்டின் என்னும் முக்கியமான நார்ச்சத்து உள்ளது. இந்த நார்ச்சத்து தான் உடலில் மகிமைகளையே செய்கிறது. எனவே இனிமேல் ஆப்பிளை தோலுடன் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Wastes That Can Be Re-Used To Make Delicious Meals

There are some discarded parts of fruits and vegetables than are very nutritious. Here are some ways in which they can be consumed in dishes and meals.
Desktop Bottom Promotion