Just In
- 1 hr ago
இன்றைய ராசிப்பலன் (18.01.2021): இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- 24 hrs ago
வார ராசிபலன் (17.01.2021 முதல் 23.01.2021 வரை) – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- 1 day ago
இன்றைய ராசிப்பலன் (17.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…
- 1 day ago
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
Don't Miss
- Movies
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'மாஸ்டர்' படத்தைப் பார்க்க தியேட்டருக்கு போறீங்களா? இத முதல்ல படிங்க...
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் வெளிவரவுள்ளது. அதுவும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. பல மாதங்களுக்கு பின்னர் முதன்முதலாக திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படமாக மாஸ்டர் இருப்பதால், தளபதி ரசிகர்கள் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் காண ஆவலாக உள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் போது, திரையரங்குகளில் முன்னணி நடிகரான விஜய் அவர்களின் திரைப்படம் வெளியாவதால், மக்களுக்கு கொரோனா மீதுள்ள பயம் நீங்கிவிட்டது எனலாம். அதோடு விஜய் ரசிகர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறிதும் பின்பற்றாமல் கூட்டமாக, இப்படத்திற்கான டிக்கெட்டை நேரில் சென்று வாங்க போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்படியே போனால், மாஸ்டர் திரைப்படம் வெளிவந்த சில நாட்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க நிறைய வாய்ப்புள்ளது.
நீங்கள் விஜய் அவர்களின் மாஸ்டர் திரைப்படத்தைக் காண தியேட்டருக்கு செல்ல திட்டமிட்டிருந்தால், ஒருசில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கீழே தியேட்டருக்கு செல்லும் போது அவசியம் பின்பற்ற வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இடைவெளியை பின்பற்றவும்
50% இருக்கைகளுடன் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், படத்தைக் காணச் செல்வோரும், ஒருவருக்கொருவர் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். முக்கியமாக தியேட்டருக்குள் நுழையும் போது, கூட்டமாக செல்லாமல், இடைவெளி விட்டு செல்ல வேண்டும்.

சானிடைசர் பயன்படுத்தவும்
திரைப்படத்தைக் காண தியேட்டர் அல்லது மாலுக்கு செல்லும் போது, உங்களுடன் ஒரு சானிடைசரையும் எடுத்து செல்லுங்கள். தியேட்டரில் எந்த ஒரு இடத்தை தொட்டாலும், உடனேயை சானிடைசரால் கைகளை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

மூக்கு, கண்ணை தொடாதீர்
தியேட்டரில் பலரும் தொட்டு பயன்படுத்தும் பகுதியைத் தொட்டுவிட்டு, மூக்கு, முகம் அல்லது கண்களை சானிடைசர் பயன்படுத்தாமல் தொடாதீர்கள். முடிந்தவரை முகத்தைத் தொடுவதைத் தவிர்த்திடுங்கள்.

மாஸ்க் அணியவும்
முக்கியமாக தியேட்டருக்கு செல்லும் போது, மாஸ்க் அணியாமல் இருக்காதீர்கள். மாஸ்க் தான் வைரஸ் உங்களை எளிதில் நெருங்கவிடாமல் தடுக்கும் ஓர் முக்கியமான பொருள். ஆகவே தவறாமல் மாஸ்க்கை அணிந்திருக்க வேண்டும்.

ஆரோக்கிய சேது ஆப் வைத்திருங்கள்
உங்கள் மொபைல் போனில் ஆரோக்கிய சேது ஆப்பை டவுன்லோடு செய்து லாக்கின் செய்து வைத்திருங்கள். இதனால் உங்கள் அருகில் யாருக்கேனும் கொரோனா இருந்தால், அது உங்களுக்கு தெரிய வரும்.

பாதுகாப்பான உணவு
தியேட்டர்களில் இடைவேளையின் போது வெளியே செல்வதைத் தவிர்க்கவும். ஒருவேளை அதிகம் பசி எடுத்தால், உணவு அல்லது தண்ணீர் வாங்க வேண்டியிருந்தால், நன்கு பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவு மற்றும் பாட்டில் தண்ணீரை வாங்குங்கள்.

அறிகுறி இருந்தால் தவிர்க்கவும்
ஒருவேளை உங்களுக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டாலும், படம் பார்க்க தியேட்டருக்கு செல்லாதீர்கள். சொல்லப்போனால், லேசான அறிகுறிகள் இருந்தால், உடனே கடுமையான இடைவெளியை பின்பற்றுங்கள். இதனால் மற்றவர்களுக்கு தொற்று பரவுவதைத் தடுக்க, நம்மால் முடிந்த சிறு உதவியாக இருக்கும்.