Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்
சொரியாசிஸ் பிரச்சனை உங்கள பாடாய் படுத்துதா? வீட்டிலேயே அதை சரிசெய்யும் வழிகள் இதோ!
சொரியாசிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கடுமையான அரிப்புடன், சருமம் தடித்தும், சிவந்தும், செதில் செதிலாக காணப்படும். அதோடு இப்பிரச்சனையானது ஒருவரின் வாழ்க்கைத் தரத்தையே பாதிக்கும்.
சொரியாசிஸ் என்னும் தடிப்பு தோல் அழற்சி என்பது ஒரு தன்னுடல் தாக்க நிலையாகும். இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் சரும செல்களை அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்வதால் ஏற்படுவதாகும். சொரியாசிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கடுமையான அரிப்புடன், சருமம் தடித்தும், சிவந்தும், செதில் செதிலாக காணப்படும். அதோடு இப்பிரச்சனையானது ஒருவரின் வாழ்க்கைத் தரத்தையே பாதிக்கும். முக்கியமாக இது ஒருவரை பலவீனப்படுத்தக்கூடிய நிலையும் கூட.

டல்லாஸில் உள்ள பேலர் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள சொரியாஸிஸ் ஆராய்ச்சி பிரிவின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சொரியாசிஸ் என்னும் தோல் அழற்சியானது ஒரு குறிப்பிடத்தக்க நோயாக கருதப்பட வேண்டிய அவசியம் உள்ளது. கடந்த காலங்களில், சொரியாஸிஸ் என்னும் சரும அழற்சியானது ஒரு அழகைக் கெடுக்கும் விஷயமாகத் தான் கருதப்பட்டது. ஆனால் இந்நிலையைப் பற்றி மேலும் ஆராயும் போது தான், இது மிகவும் சிக்கலான நோய் என்பது தெரிய வந்தது.
உலகில் பலர் இந்த சொரியாசிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு என்று பிரத்யேகமாக க்ரீம்களும் விற்கப்படுகின்றன. ஆனால் சொரியாசிஸ் பிரச்சனைக்கு ஒருசில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அதைக் கொண்டே சொரியாசிஸ் பிரச்சனையை சமாளிக்க முடியும்.

கற்றாழை
சொரியாசிஸ் பிரச்சனைக்கு ஒரு சிறந்த இயற்கை நிவாரணப் பொருள் தான் கற்றாழை. கற்றாழை ஜெல்லை சொரியாசிஸ் பிரச்சனை உள்ள இடத்தில் தடவி வந்தால், சருமத்தில் உள்ள தடிப்பு மற்றும் அரிப்புக்கள் குறையும். அதற்கு நற்பதமான கற்றாழை இலையை எடுத்து, அதில் உள்ள ஜெல்லை ஸ்பூன் கொண்டு எடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவ வேண்டும். ஒருவேளை உங்கள் வீட்டில் கற்றாழை செடி இல்லாவிட்டால், கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜெல்லை வாங்கி பயன்படுத்தலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் சருமத்தில் ஏற்படும் அரிப்புக்களில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும். குறிப்பாக சொரியாசிஸ் பிரச்சனையால் ஏற்படும் அரிப்புக்களைத் தடுக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சரிசம அளவில் கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் பஞ்சுருண்டைப் பயன்படுத்தி தடவ வேண்டும். ஒருவேளை சருமத்தில் அரிப்புக்களால் காயங்கள் அல்லது வெடிப்புக்கள் ஏற்பட்டிருந்தால், இந்த வழியைத் தவிர்க்க வேண்டும்.

மிளகாய்
மிளகாயில் கேப்சைசின் என்னும் பொருள் உள்ளது. இது தான் மிளகாய்க்கு சுவையையும், காரத்தையும் வழங்குகிறது. இதை நீங்கள் பயன்படுத்தும் அழற்சிக்கான க்ரீம்களில் சேர்த்து பயன்படுத்தினால், வலிக்கு காரணமான நரம்பு முனைகளைத் தடுக்கும். மேலும் இது வீக்கம், சிவத்தல் போன்றவற்றையும் குறைக்க உதவும். ஆனால் கவனமாக இருங்கள். ஏனெனில் சென்சிடிவ் சருமத்தினருக்கு இது எரிச்சலை உண்டாக்கும். ஆகவே இதை பயன்படுத்தும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.

எப்சம் உப்பு
எப்சம் உப்பு சொரியாசிஸ் பிரச்சனையால் ஏற்படும் அரிப்புக்களைக் குறைக்க உதவி புரியும். அதற்கு வெதுவெதுப்பான நீரில் சிறிது எப்சம் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரில் 15 நிமிடம் பாதிக்கப்பட்ட பகுதியை ஊற வைக்க வேண்டும். அதன் பின் அப்பகுதியில் மறவாமல் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால், அது வறட்சியை உண்டாக்கும்.

டீ-ட்ரீ ஆயில்
டீ-ட்ரீ ஆயிலில் ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளன. இது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய வல்லது. உங்கள் தலையில் சொரியாசிஸ் இருந்தால், அதை சரிசெய்ய ஷாம்புவுடன் சிறிது டீ-ட்ரீ ஆயிலை சேர்த்து கலந்து தலைக்கு பயன்படுத்துங்கள். உடலில் சொரியாசிஸ் பிரச்சனை இருந்தால், குளிக்கும் நீரில் சிறிது டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து குளியுங்கள். ஆனால் அதற்கு முன் இந்த எண்ணெயை உங்கள் உடலில் சோதனை செய்து பார்க்க வேண்டும். ஏனெனில் சிலருக்கு இந்த எண்ணெய் ஆகாது.

மஞ்சள்
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள், தங்களின் அன்றாட உணவில் மஞ்சளை தவறாமல் சேர்ப்பதோடு, தினமும் காலையில் ஒரு இன்ச் மஞ்சளை சாப்பிடுவதும் மிகவும் நல்லது.



Click it and Unblock the Notifications