For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாய் துர்நாற்ற பிரச்சனைக்கு 'முற்றுப்புள்ளி' வைக்கணுமா? அப்ப இத செய்யுங்க...

மௌத் வாஷ்கள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை திறம்பட அழிக்கக்கூடியவை. வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்தால் வாய் துர்நாற்றப் பிரச்சனையே இருக்காது.

|

வாய் ஆரோக்கியம் ஒருவருக்கு மிகவும் இன்றியமையாதது. வாய் ஆரோக்கியமாக இருந்தால் தான், உடல் ஆரோக்கியமாக இருக்கும். வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் இரண்டு முறை பற்களைத் துலக்குவது, நாக்கை சுத்தம் செய்வது, பல்லிடுக்குகளில் உள்ள உணவுத் துகள்களை அகற்றுவது போன்ற விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். தற்போது வாயை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு பல்வேறு மௌத் வாஷ்கள் விற்கப்படுகின்றன. ஆனால் கடைகளில் விற்கப்படும் மௌத் வாஷ்களில் கெமிக்கல்கள் நிறைந்திருப்பதால், அவற்றை அதிகம் பயன்படுத்தினால் வாயின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும்.

Homemade Mouthwash Recipes To Improve Oral And Dental Health

அதுவே இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட மௌத் வாஷ்களால் வாயை சுத்தம் செய்தால், எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் வாய் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருக்கும். மௌத் வாஷ்கள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை திறம்பட அழிக்கக்கூடியவை. வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்தால் வாய் துர்நாற்றப் பிரச்சனையே இருக்காது. இப்போது வாய் துர்நாற்ற பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் நேச்சுரல் மௌத் வாஷ்களை எப்படி தயாரிப்பது என்பதைக் காண்போம்.

MOST READ: இந்த 'ஒரு இலை' வயிற்றுக் கொழுப்பை இருமடங்கு வேகத்தில் கரைக்குமாம் - அதை எப்படி சாப்பிடுவது?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மௌத் வாஷ்களைப் பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்:

மௌத் வாஷ்களைப் பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்:

* பிரஷ் மற்றும் பிளாஷ் செய்வதை விட சிறந்தது

* சொத்தைப் பற்கள் குறையும்

* பற்கள் மற்றும் ஈறுகள் வலுவடையும்

* வாய் துர்நாற்றமின்றி புத்துணர்ச்சியுடன் இருக்கும்

* பற்களில் மஞ்சள் கறைகள் படிவது தடுக்கப்படும்

* வாய்ப் புண்கள் சரியாக உதவும்

இப்போது வீட்டிலேயே எப்படி சில நேச்சுரல் மௌத் வாஷ்களைத் தயாரித்து பயன்படுத்துவது என்பதைக் காண்போம்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

தேவையான பொருட்கள்:

* பேக்கிங் சோடா அல்லது சோடியம் பை கார்பனேட் - ½ டீஸ்பூன்

* வெதுவெதுப்பான நீர் - ½ டம்ளர்

பயன்படுத்தும் முறை:

* முதலில் ½ டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பற்களைத் துலக்கிய பின் அல்லது துலக்குவதன் முன்பு தயாரித்து வைத்துள்ள நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

* இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை வாயைக் கொப்பளிக்கலாம்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேவையான பொருட்கள்:

* சுத்தமான தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி 10-15 நிமிடம் கொப்பளிக்க வேண்டும்.

* பின் அந்த எண்ணெயை துப்ப வேண்டும். முக்கியமாக இச்செயலை தினமும் காலையில் பற்களைத் துலக்குவதற்கு முன் செய்ய வேண்டும். இதனால் வாய் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

உப்பு

உப்பு

தேவையான பொருட்கள்:

* கல் உப்பு - 1/2 டீஸ்பூன்

* வெதுவெதுப்பான நீர் - 1/2 டம்ளர்

பயன்படுத்தும் முறை:

* முதலில் அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில், 1/2 டீஸ்பூன் கல் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த நீரை வாயில் ஊற்றி சிறிது நேரம் கொப்பளித்து, பின் துப்ப வேண்டும்.

* இப்படி தினமும் ஒவ்வொரு வேளை உணவு உண்ட பின்னரும் செய்ய வேண்டும்.

கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜூஸ்

தேவையான பொருட்கள்:

* கற்றாழை ஜூஸ் - அரை கப்

* நீர் - அரை கப்

* பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* முதலில் அரை கப் நீரில், பேக்கிங் சோடா மற்றும் அரை கப் கற்றாழை ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* தினமும் பற்களைத் துலக்கிய பின் அந்த கலவையால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

* இப்படி தினமும் 3-4 முறை செய்து வர, வாயில் உள்ள கிருமிகள் அழிந்து, வாய் துர்நாற்றம் நீங்கும்.

புதினா எண்ணெய்

புதினா எண்ணெய்

தேவையான பொருட்கள்:

* புதினா எண்ணெய் - 2-3 துளிகள்

* தண்ணீர் - ஒரு கப்

பயன்படுத்தும் முறை:

* ஒரு கப் நீரில் 2-3 துளிகள் புதினா எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்நீரைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

* இப்படி ஒரு நாளைக்கு ஒவ்வொரு வேளை உணவு உண்ட பின்னரும் வாயைக் கொப்பளிக்கலாம்.

பட்டை எண்ணெய்

பட்டை எண்ணெய்

தேவையான பொருட்கள்:

* பட்டை எண்ணெய் - 2-3 துளிகள்

* தண்ணீர் - ஒரு கப்

பயன்படுத்தும் முறை:

* முதலில் ஒரு கப் நீரில் 2-3 துளிகள் பட்டை எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

* இப்படி ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வாயைக் கொப்பளிக்கலாம்.

டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ ஆயில்

தேவையான பொருட்கள்:

* டீ-ட்ரீ ஆயில் - 1-2 துளிகள்

* தண்ணீர் - 1/2 கப்

பயன்படுத்தும் முறை:

* முதலில் ஒரு கப் நீரில் 1-2 துளிகள் நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

* இப்படி ஒவ்வொரு வேளை உணவு உண்ட பின்னரும் வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் அகலும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade Mouthwash Recipes To Improve Oral And Dental Health

There are different types of mouthwash available in the market, but you can also make them at your home using natural products. Take a look.
Desktop Bottom Promotion