For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க ஆயுளை அதிகரிக்கணுமா? அப்ப இனிமேல் காலையில காபிக்கு பதிலா இத குடிங்க...

|

காலையில் எழுந்ததும் ஒரு கப் காபியுடன் தான் அன்றைய தினத்தை பலர் ஆரம்பிப்பார்கள். காபி உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பானம் என்றாலும், அதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களும் உள்ளது. காபியை ஒருவர் சரியான அளவில் குடித்து வந்தால், அதனால் நன்மைகளைப் பெறலாம். ஆனால் அதே காபியை அதிகமாக குடித்தால், அது தூக்கமின்மை, பதட்டம், அமைதியின்மை, வயிற்று உப்புசம், குமட்டல், வாந்தி, வேகமாக இதயம் செயல்படுவது, வேகமாக சுவாசிப்பது மற்றும் பல பக்க விளைவுகளை உண்டாக்கும்.

முக்கியமாக காபியை ஒருவர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லதல்ல. அதற்கு மாறாக வேறுசில ஆரோக்கியமான மற்றும் சுவையான பானங்களைக் குடிக்கலாம். இதனால் உடல் புத்துணர்ச்சி பெறுவதோடு, உடலுறுப்புக்களின் செயல்பாடுகளும் சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

MOST READ: திடீர் மாரடைப்பை உண்டாக்கும் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பது எப்படி?

அதோடு ஒருவர் காலையில் ஆரோக்கியமான பானங்களைக் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், அவரது வாழ்நாளை நீட்டிக்கலாம். இப்போது காலையில் காபிக்கு பதிலாக குடிக்க வேண்டிய சில ஆரோக்கியமான மற்றும் சுவையான பானங்களைக் காண்போம்.

MOST READ: இந்த ஜூஸை தினமும் குடிப்பதால் உடம்புல எவ்வளவு பெரிய மாற்றம் ஏற்படும் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டீ

டீ

காலையில் காபிக்கு பதிலாக வேண்டுமானால் டீ அருந்துங்கள். டீ என்று வரும் போது, அதில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் க்ரீன் டீ, மட்சா டீ, மசாலா டீ போன்றவை மிகச்சிறப்பானவை. டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பி வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளன. உதாரணமாக, மட்சா டீயை எடுத்துக் கொண்டால், அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது கல்லீரலுக்கு பாதுகாப்பளிக்கும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் பல உள்ளுறுப்புக்களுக்கு நன்மை அளிக்கக்கூடியது.

இளநீர்

இளநீர்

இயற்கை நமக்கு தந்த ஒரு வரப்பிரசாதமாக இளநீரை கூறலாம். உலகிலேயே மிகவும் சுத்தமான பானம் என்றால் இதைக் கூறலாம். இது மிகவும் இனிமையான சுவையுடன் இருப்பதோடு, இதில் பயோஆக்டிவ் நொதிகளும் உள்ளன. அதோடு இதில் எலக்ட்ரோலைட்டுகள் முழுமையாக நிறைந்துள்ளதால், எனர்ஜி பானங்களுக்கு ஒரு சிறந்த மாற்று பானமாக இருக்கும்.

மஞ்சள் பால்

மஞ்சள் பால்

அதிகாலையில் காப்ஃபைன் இல்லாத பானங்களை அருந்துவது தான் நல்லது. இந்த மாதிரியான பானங்கள் தான் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். அதிலும் காலையில் இஞ்சி, ஏலக்காய், மஞ்சள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்த பாலை அருந்துவது மிகவும் நல்லது. இந்த பானத்தில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டவை. ஆகவே இதை ஒருவர் காலையில் எழுந்ததும் குடிக்கும் போது, உடல் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் இருப்பதோடு, உடல் நன்கு ஆரோக்கியமாக இருப்பதையும் உணர முடியும்.

எலுமிச்சை நீர்

எலுமிச்சை நீர்

உங்களுக்கு காலையில் எழுந்ததும் மிகவும் எளிமையாக தயாரிக்கக்கூடிய வகையிலான ஒரு பானம் வேண்டுமானால், அது எலுமிச்சை நீர் தான். இதில் ஏராளமான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. அதோடு இதில் கலோரி மற்றும் காப்ஃபைன் போன்றவை இல்லை. ஆகவே இது ஒரு நாளை ஆரம்பிப்பதற்கான சிறப்பான பானமாக இருக்கும். வைட்டமின் சி சத்து உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு மிகவும் அத்தியாவசியமானது மற்றும் இது சூரியனிடமிருந்து சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது. அதோடு முக்கியமாக கொலாஜன் உற்பத்திக்கு முக்கியமானது. எனவே வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து தேன் சேர்த்து கலந்து குடியுங்கள்.

மோர்

மோர்

காலையில் எழுந்ததும் காபிக்கு பதிலாக ஒரு டம்ளர் மோர் குடிப்பது மிகவும் நல்லது. இதனால் இரைப்பை குடல் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும். நீங்கள் அஜீரண கோளாறு, வாய்வுத் தொல்லை மற்றும் பிற செரிமான பிரச்சனைகளால் அவஸ்தைப்பட்டு வந்தால், தினமும் காலையில் ஒரு டம்ளர் மோரை வெறும் வயிற்றில் குடியுங்கள். அதோடு மோரை தினமும் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், உடல் நீர்ச்சத்துடன் இருப்பதோடு, குளிர்ச்சியாகவும் இருக்கும். முக்கியமாக மோரில் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான கால்சியம் அதிகமாக உள்ளது.

புரோபயோடிக் பானங்கள்

புரோபயோடிக் பானங்கள்

தற்போது கடைகளில் புரோபயோடிக் பானங்கள் நிறைய விற்கப்படுகின்றன. இந்த பானங்களில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. ஒருவர் செரிமான பிரச்சனைகளை சந்திப்பதற்கு முக்கிய காரணம், அவரது குடலில் நல்ல பாக்டீரியாக்கள் போதுமான அளவு இல்லாதது தான். எனவே செரிமான பிரச்சனைகளை சந்தித்தால், எடுத்தவுடனேயே மருந்து மாத்திரைகளை நாடாமல், புரோபயோடிக் பானங்களை அருந்துங்கள். இவை செரிமான ஆரோக்கியத்தை சீராக ஒரு சிறந்த வழி. மேலும் இந்த பானங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு கூடுதல் நன்மைகளை வழங்கும் மற்றும் குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும். காலையில் குடிப்பதற்கு ஏற்ற ஒரு சிறந்த புரோபயோடிக் பானம் என்றால் கொம்புச்சாவைக் கூறலாம்.

பீட்ரூட் கிரேப்ஃபுரூட் க்ரீன் ஜூஸ்

பீட்ரூட் கிரேப்ஃபுரூட் க்ரீன் ஜூஸ்

இந்த பானம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் நல்லதல்ல, இது சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவும். இந்த பானத்தை காலையில் காபிக்கு பதிலாக குடிப்பது மிகவும் நல்லது. இது உடலுக்கு ஸ்டாமினாவை வழங்குகூதோடு, குடலியக்கத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவி புரியும். ஏனெனில் இந்த பானத்தில் நார்ச்சத்தானது ஏராளமாக உள்ளது. அதிலும் இந்த பானத்துடன் சிறிது மிளகுத் தூள் சேர்த்துக் கொண்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாவதோடு, இரத்த ஓட்டமும் அதிகரிக்கும். இந்த ஜூஸ் செய்வதற்கு சிறிய பீட்ரூட்டை நறுக்கி ஜூஸரில் போட்டு, அதன் பின் 1 கிரேப்ஃபுரூட்டின் சதைப் பகுதி, ஒரு கையளவு பசலைக்கீரை, சிறிது இஞ்சி போன்றவற்றை அடுத்தடுத்து சேர்த்து ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது பிங்க் இமாலயன் உப்பு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Healthy and Delicious Beverages That Are Better Than Coffee in the Morning

There are many delicious and healthy options available to replace coffee from our diet. Here we listed some healthy beverages that are better than coffee in the morning. Read on to know more...