For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க நுரையீரலில் அழுக்கு சேராம இருக்கணுமா? அப்ப தினமும் இத செய்யுங்க போதும்...

|

கொரோனா பரவ ஆரம்பித்த ஆரம்ப காலத்தில் ஊரடங்கு காரணமாக காற்று மாசுபாட்டின் அளவு பெருமளவில் குறைந்திருந்தது. ஆனால் அரசு ஊரடங்கு தளர்வை பிறப்பித்த பின் மெதுவாக காற்று மாசுபாடு மெதுவாக அதிகரிக்க ஆரம்பித்தது. அதிலும் அக்டோபர் மாத இறுதியில் காற்று மாசுபாட்டின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. புகைமூட்டம் காற்றின் தரத்தைக் குறைக்கிறது மற்றும் இதனால் சரியாக சுவாசிப்பதற்கு முடியாமல் பலரும் அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.

இந்த காற்று மாசுபாடு நமது உடலில் பல தீங்கை விளைவிக்கின்றன. குறிப்பாக மாசடைந்த காற்றினை சுவாசிக்கும் போது, நமது நுரையீரல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் நுரையீரலில் எதிர்மறையான தாக்கங்களை உண்டாக்கும் நிலையில், காற்று மாசுபாடும் சேர்ந்திருப்பது, சுவாச பிரச்சனைகளை கொண்டவர்களுக்கு பெரிதும் சவாலான காலமாக உள்ளது.

MOST READ: உங்க விரல் நகத்தில் இப்படி பிறை போன்று இருக்கா? அது எதை குறிக்குதுன்னு தெரியுமா?

மேலும் மாசடைந்த காற்றினை சுவாசிக்கும் போது, நுரையீரலில் அழுக்குகள் அதிகம் சேர்ந்து, அது பல சுவாச பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. ஆகவே இதைத் தவிர்க்க தமிழ் போல்ட் ஸ்கை, காற்று மாசுபாட்டால் நுரையீரலில் சேரும் அழுக்கை வெளியேற்றி நுரையீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில ஆயுர்வேத வழிகளைக் கொடுத்துள்ளது. அதை ஒருவர் தினமும் பின்பற்றினால், நிச்சயம் நுரையீரலை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

MOST READ: இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நல்லெண்ணெய்

நல்லெண்ணெய்

நுரையீரலை சுத்தம் செய்ய நல்லெண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்கு ஒவ்வொரு நாசியிலும் இரண்டு சொட்டு நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும். இந்த செயல்முறை நாசி பாதையை சுத்தம் செய்யும். ஆயுர்வேதத்தில், இந்த செயல்முறை நாஸ்யா என்று அழைக்கப்படுகிறது.

ஆவிப்பிடிப்பது

ஆவிப்பிடிப்பது

நீரை நன்கு கொதிக்க வைத்து, அந்நீரில் சிறிது நற்பதமான புதினா இலைகளை சேர்த்து, அந்நீரில் ஆவி பிடிக்கலாம். இல்லாவிட்டால், வெறும் சுடுநீரில் கூட ஆவி பிடிக்கலாம். இந்த முறையில், நீராவியை உள்ளிழுக்கும் போது, காற்றுப் பாதைகள் திறந்து, நுரையீரலில் இருந்து சளியை வெளியேற்ற உதவுகிறது.

இஞ்சி டீ

இஞ்சி டீ

நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் மிகவும் பயனுள்ள பொருளாக அறியப்படுவது தான் இஞ்சி. இந்த இஞ்சி நுரையீரலையும் வலிமையாக்கும். எனவே தினமும் ஒரு டம்ளர் இஞ்சி டீயைக் குடித்து வந்தால், நுரையீரல் பலப்படுவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.

மஞ்சள், சுக்கு மற்றும் பட்டை

மஞ்சள், சுக்கு மற்றும் பட்டை

நுரையீரலை சுத்தம் செய்யும் மற்றொரு சிறப்பான வழி, மஞ்சள், சுக்கு பொடி மற்றும் பட்டை பொடியை தினமும் சாப்பிடுவது தான். இந்த மூன்றையும் சம அளவில் நீரில் கலந்து, காலை மற்றும் மாலையில் குடிக்க வேண்டும். இதனால் நுரையீரலில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, உடல் ஆரோகிகியம் சிறப்பாக இருக்கும்.

பிராணயாமம்

பிராணயாமம்

பாஸ்த்ரிகா மற்றும் கபல்பதி பிராணயாமம் பயிற்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை நுரையீரலை சுத்தம் செய்ய உதவும் பயிற்சிகளாகும். உயர் இரத்த அழுத்த நோயாளிகள் இந்த வகை பயிற்சிகளை மிகவும் மெதுவாக செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

நச்சு நீக்கும் பானம்

நச்சு நீக்கும் பானம்

ஒரு லிட்டர் நீரில் 1 டீஸ்பூன் சோம்பு, சீரகம், மல்லி மற்றும் நற்பதமான இஞ்சியை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, பின் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து அதைக் குடிக்க வேண்டும். இந்த பானம் நுரையீரலுக்கு மட்டும் நல்லதல்ல, ஒட்டுமொத்த சுவாச மண்டலத்திற்கும் நன்மை விளைவிக்கக்கூடியது.

தேன்

தேன்

தேன் அற்புதமான சுவையைக் கொண்டது. இதை தினமும் சாப்பிட்டால் நுரையீரல் சுத்தமாவதுடன், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆன்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் பல்வேறு நன்மைகளும் உடலுக்கு கிடைக்கும்.

முடிவு

முடிவு

மேற்கூறிய ஆயுர்வேத குறிப்புகள் தீங்கு விளைவிக்கும் மாசடைந்த காற்றில் இருந்து நுரையீரலை பாதுகாக்கும். மேலும் ஒவ்வொரு வேளை உணவு உண்ட பின்னரும் சிறிது வெல்லத்தை சாப்பிடுங்கள். இது தொண்டை மற்றும் நுரையீரலை சுத்தம் செய்ய உதவும். அதோடு வெளியே செல்லும் போது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினால், மாசடைந்த காற்றில் இருந்து நுரையீரலைப் பாதுகாக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

7 Ayurvedic Tips To Clean Lungs From Increasing Air Pollution

Here are some ayurvedic tips to clean lungs from increasing air pollution. Read on...
Story first published: Tuesday, November 10, 2020, 12:23 [IST]