For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாக்டர் கிட்ட போகறதுக்கு முன்னாடி உடலுறவு வைச்சிக்கணுமாம்..! ஏன்னு தெரியுமா..?

|

காய்ச்சலா..? ஜலதோஷமா..? இரும்பாலா..? விக்கலா..? தும்பலா..? இப்படி எதற்கெடுத்தாலும் டாக்டர் கிட்ட போகுற பழக்கம் நம்மில் முக்கால் வாசி பேருக்கு இருக்கு. இது இன்றைய காலகட்டத்துல புதுசா பரவி வருகின்ற ஒரு கலாச்சாரமாகவே மாறி வருது. இதில் சில வகையினர் லேசாக உடல் சூடாக இருந்தாலும் வரிசை கட்டிக்கொண்டு மாத்திரைகளை போடுவார்கள்.

டாக்டர் கிட்ட போக்குறதுக்கு முன்னாடி உடலுறவு வைச்சிக்கணுமா..! ஏன்னு தெரியுமா..?

இது போன்ற பழக்கம் மிக மோசமானது என மருத்துவர்களே கூறுகின்றனர். இப்படி எதுக்கெடுத்தாலும் டாக்டர் கிட்ட போகுற நாம்ம ஒரு சில முக்கியமான விஷயங்கள மறந்துடறோம். இது போன்ற விஷயங்கள் தான் நமக்கு பலவித பாதிப்புகளையும் இடையூறுகளையும் தருதாம். இந்த பதிவுல டாக்டர் கிட்ட போகுறதுக்கு முன்னாடி என்னென்ன செய்யணும், என்னென்ன செய்ய கூடாது என்பதை தெளிவாக பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் இப்படி..?

ஏன் இப்படி..?

பொதுவாக மருத்துவரிடம் செல்லும் போது முன்னேற்பாடுகள் சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். இவை உங்களுக்கு பலவிதங்களில் உதவும். உணவு உட்கொள்ளும் முறை முதல் தண்ணீர் குடிக்கும் முறை வரை இதில் குறிப்பிடத்தக்கது. அப்போது தான் உங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வும் சரியாக கிடைக்குமாம்.

காபிக்கு நோ நோ..!

காபிக்கு நோ நோ..!

நீங்கள் மருத்துவரிடம் செல்லும் போது இதை நிச்சயம் ஞாபகத்தில் வைத்து கொள்ள வேண்டும். உங்களின் மன அழுத்தத்தை பரிசோதனை செய்ய மருத்துவரிடம் செல்லும் போது காபி குடித்தால் அவை தவறான விடையை தந்து விடும். இதற்கு காரணம் காபியில் உள்ள காஃபின் என்கிற மூல பொருள் தான்.

சிவப்பு உணவா..?

சிவப்பு உணவா..?

மருத்துவரிடம் வயிற்று சம்பந்தமான பிச்சினைகளை பற்றி ஆலோசிக்க சென்றால், அதற்கு முன் சிவப்பு அல்லது ஊதா நிற உணவுகளை சாப்பிடாமல் இருப்பதே நல்லது. காரணம், இவை உங்கள் குடலில் சென்று சிவப்பு நிறமாக மாற்றி விடும். ஆதலால், மருத்துவரால் வயிறு சார்ந்த பிரச்சினை என்னவென்று சொல்வதில் குழப்பம் ஏற்படும். எனவே, colonoscopy போன்ற டெஸ்ட்களை எடுக்க செல்லும் முன்னர் சிவப்பு நிற உணவுகளை சாப்பிடாதீர்கள்.

டியோடரண்ட் வேண்டாம்..!

டியோடரண்ட் வேண்டாம்..!

பெண்கள் இந்த குறிப்பிட்ட மாம்மோகிராம் பரிசோதனையின் போது டியோடரண்ட் பயன்படுத்தாமல் செலாவது சிறந்தது. ஏனெனில், இதில் கலந்துள்ள அலுமினியம் தவறான ரிசல்ட்டை இந்த கருவியில் காட்ட கூடும். எனவே, இந்த பரிசோதனையை டாக்டரிடம் எடுக்க செல்லும் போது டியோடரண்ட்டை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.

MOST READ: எகிப்தியர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த ஒன்றை தான் அதிகமாக சாப்பிட்டார்களாம்..!

அதிக தண்ணீரா..?

அதிக தண்ணீரா..?

பலர் மருத்துவரிடம் சென்றால் ஏதாவது நோய் உள்ளது என சொல்வாரோ..!? என்கிற பயத்திலே அதிக தண்ணீரை குடித்து விடுவர். இது நல்ல பழக்கம் தான். அதிகமாக நீர் குடிப்பதால், எடுக்கப்படும் பரிசோதனைக்கான ரிசல்ட் சரியான முறையில் கிடைக்குமாம்.

நகம் வெட்டாதீர்கள்..!

நகம் வெட்டாதீர்கள்..!

தோல் சார்ந்த மருத்துவரை பார்க்க செல்லும் போது நகத்தில் நெயில் பாலிஷ் வைக்காதீர்கள். மேலும், நகத்தையும் வெட்டாதீர்கள். ஏனெனில், தோல் சார்ந்த சார்ந்த நோய் கிருமிகள் நகங்களிலும் இருக்க கூடும். மேலும், முகத்தில் மேக்கப்பை போடும் வழக்கத்தை தோல் மருத்துவரிடம் செல்லும்போது தவிர்த்து விடுங்கள்.

தாம்பத்தியமும் மருத்துவரும்..!

தாம்பத்தியமும் மருத்துவரும்..!

மகப்பேறு மருத்துவர் அல்லது சிறுநீரக மருத்துவரிடம் செல்வதற்கு முன் தம்பதியர் இருவரும் உடலுறவு வைத்து கொள்ள வேண்டும். இது உங்களுக்கு எடுக்க போகும் டெஸ்ட்கள் அனைத்திற்கும் சரியான விடையை தரும். குறிப்பாக விந்தணு பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, ப்ரோஸ்டேட் பரிசோதனை ஆகியவற்றிற்கு இது பெரிதும் உதவுமாம். இது மருத்துவர்களுக்கும் மிக எளிமையாக இருக்க கூடும்.

நீங்களே ஏதாவது செய்யாதீங்க..!

நீங்களே ஏதாவது செய்யாதீங்க..!

பலருக்கு இந்த பழக்கம் உள்ளது. மருத்துவரிடம் செல்வதற்கு முன்னர் நமக்கு தெரிந்த அரைகுறை MBBS தனத்தை இதில் காட்டுவோம். குறிப்பாக கண்ட மாத்திரைகளை கண்ட நேரத்தில் சாப்பிடுவோம். இந்த நிலை உங்கள் உயிருக்கே கூட ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே, முறையாக மருத்துவரிடம் சென்று அவர் தரும் மருந்துகளை எடுத்து கொள்வதே சிறந்தது.

MOST READ: 40s கடந்தும் சிங்கிளாக வாழ்ந்தும் வரும் நடிகர், நடிகைகள்! #List25

இந்த டெஸ்ட் எப்படி..?

இந்த டெஸ்ட் எப்படி..?

கொலஸ்ட்ரால் பிரச்சினைகளை பற்றி மருத்துவரிடம் கேட்க போகும் முன் மது அருந்த கூடாது. இதனால் செய்யப்படும் பரிசோதனை பாழாகும். எனவே, மதுவுக்கு நோ நோ சொல்லுங்கள். மேலும், குளிர் பானங்களையும் இது போன்ற நேரங்களில் குடிப்பதையும் தவிர்த்து விடுங்கள்.

கேள்விகள் 1000..!

கேள்விகள் 1000..!

இது மிக முக்கியமான ஒன்றாகும். மருத்துவரிடம் செல்வதற்கு முன்னர் என்னென்ன கேள்விகள் சந்தேகங்கள் அவரிடம் கேட்க வேண்டும் என்பதை தெளிவாக எழுதி வைத்து கொள்ளலாம். மருத்துவர் முன் சென்றதும் பதட்டம் அடையும் பலருக்கு இந்த அணுகுமுறை உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things to Do And Don't Before a Doctor Appointment

Here we list out some things that you should do and don't before a doctor appointment.
Desktop Bottom Promotion