மழை நீரில் சமைப்பதால், குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரியுமா?

Posted By: Gnana
Subscribe to Boldsky

உலகில் இனி வரும் காலங்களில், மக்கள் பணம் சம்பாதிப்பதை விட, தண்ணீரை சம்பாதிக்கவே, அதிக நேரத்தை செலவிடுவார்கள் என்றும், தண்ணீர் பஞ்சத்தின் காரணமாகவே, உலக நாடுகளுக்கிடையே போர் மூளும் சூழல் உருவாகும் என்று உலக நீர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அந்த நிலையை நோக்கிச்செல்வதை உறுதி செய்வதைப் போல, நம்முடைய கோடைக் காலங்களில் நிலத்தடி நீர் வற்றி, தண்ணீர் பஞ்சம் அதிகரித்துவரும் சூழலில், நிலத்தடி நீருக்கு மாற்றாக, மழைநீரின் மீது, அனைவரின் கவனமும் தற்காலத்தில் திரும்பியிருக்கிறது.

அரசும், மக்களும் கொண்ட விழிப்புணர்வால், வீடுகளில் மழைநீர் தொட்டிகள் அமைத்து, மழைநீரை சேமிப்பதன்மூலம், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க முயன்றுவருகின்றனர்.

இதன் விளைவாக தற்காலங்களில், மழைநீரை தொட்டிகளில் சேமிப்பது மட்டுமன்றி, மழை நீரை சமையல் செய்வதற்கும், பருகுவதற்கும் ஏற்ற ஒன்றாக பயன்படுத்த, எல்லோரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆயினும் குடிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் ஏற்ற ஒன்றா மழை நீர்?, மழை நீரை குடிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று, பார்ப்போம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூய ஓசோன் காற்றும் மழை நீரும்!

தூய ஓசோன் காற்றும் மழை நீரும்!

காற்றில் ஓசோன் அதிகரித்து காணப்படும் நேரமான அதிகாலை மூன்று மணி முதல் நான்கு மணி வரை, அந்தக்காற்றை சுவாசிக்க, நிறைய பேர் ஆர்வமுடன் கடற்கரையோரங்களில் நடைப்பயிற்சிகளை மேற்கொள்வர், அங்கேதான் சுத்தமான காற்றில், முழுமையான ஓசோனை சுவாசிக்க முடியும் என்பார்கள்.

அதுபோல, மழை நீர் என்பது, தூய்மையானது, அது ஆகாயத்தில் உருவாகி வருவதால், மிகவும் சுத்தமான நீர் என்று நிறைய பேர் கருதிக்கொண்டு, மழை நீரைப் பருக ஆர்வம் காட்டி வருகின்றனர். எல்லா மழை நீரையும் நாம் குடிக்கமுடியுமா?

சிலர், இந்த மழை நீர், நம் உடல் வியாதிகளைத் தீர்க்கும் ஆற்றல் மிக்கதென்றும் கருதுகின்றனர். இத்தகைய நம்பிக்கைகள் எல்லாம், உண்மையிலேயே மழை நீரின் தன்மையை சோதித்ததால் எழுந்த ஒன்றா, அல்லது வெறும் நம்பிக்கையா என்பதை, இனி நாம் காண்போம்.

மழை நீர் சுகாதாரமானதா?

மழை நீர் சுகாதாரமானதா?

சுகாதார ஆய்வுகள், சில குறிப்பிட்ட இடங்களில் பெறும் மழைநீரைத் தவிர, மற்ற இடங்களில் கிடைக்கும் மழை நீரை, பாதுகாப்பான குடிநீர் என்றும், அதிகரித்து வரும் உலகின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வல்லவை என்றும் கூறி, மழை நீரை எப்படி பயன்படுத்தினால், நன்மைகளை அடையலாம் என்பதை, விளக்கி இருக்கின்றன.

மழை நீரை நாம், குடிநீராகப் பயன்படுத்த எண்ணினாலும், நாம் நினைப்பதுபோல, மழை நீர், சுத்தமானதும், தூய்மையானதும் அல்ல. காற்றைப்போல, மழை நீரிலும் மாசுக்கள் கலந்தே இருக்கின்றன, ஆயினும் நாம் பருகும் கார்ப்பரேஷன் தண்ணீரைவிட, குறைந்த அளவு மாசுக்களே இருக்கும் என்கின்றன, ஆய்வுகள்.

மழை நீரில் குளோரின், புளோரைடு போன்ற கெமிக்கல்கள் இருப்பதில்லை என்பதினால், அனைவரும் மழை நீரைப் பருக ஆர்வம் காட்டுகின்றனர்.

மழை நீரை அப்படியே பயன்படுத்தலாமா?

மழை நீரை அப்படியே பயன்படுத்தலாமா?

வீடுகளின் கூரைகளில் உள்ள வடிகால் மூலம் வடியும் மழைநீரை சேமித்து சமைக்கப் பயன்படுத்துவதைவிட, நேரடியாக, மழை நீரை சேமிக்கும் கலன்களில் இருந்து எடுத்துப் பயன்படுத்தலாம். கூரைகளில் வழியும் மழைநீரை பயன்படுத்த வேண்டுமெனில், தண்ணீரைக் காய்ச்சி, வடிகட்டிப் பயன்படுத்தவேண்டும், இதன்மூலம் கூரைகளில் உள்ள எச்சங்கள், குப்பை மாசுக்கள் போன்றவற்றின் மூலம் நீரில் ஏற்படும் கிருமிகளை, விலக்க முடியும்.

வளர்ந்த நாடுகளில் உள்ள பொது விநியோக குடிநீரானது, பலதரப்பட்ட பில்டர்களைக் கடந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது, அந்த நாடுகளில் மழை நீரைவிட, சுத்தமானதாக பொது குடிநீர் திகழ்கிறது என்பதும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் வணிக மாநகரான துபாயில், குடிநீரின் தூய்மை அளவு, உலக சுகாதாரக் குறியீட்டின்படி, மிக அதிக அளவு, தர சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகும். இதன் மூலம், அந்த இடங்களில் கிடைக்கும் மழைநீரைவிட, அரசு குடிநீரே, அதிக நன்மைகள் தரும்.

கடலில் பயணிக்கும்போது, மழைநீரைக் குடிக்கலாமா?

கடலில் பயணிக்கும்போது, மழைநீரைக் குடிக்கலாமா?

கடலில் பயணிக்கும் சமயங்களில், கிடைக்கும் மழைநீரை எவ்வளவு வேண்டுமானாலும் பருகலாம். அந்த மழை நீர், நன்மை தருவதாக அமையும். அதேபோல அடர்ந்த காடுகள், பழ மரங்கள் நிறைந்த மலைகள் போன்ற வாகனப் புகைமாசு அதிகமில்லாத இடங்களில் கிடைக்கும் மழைநீரில் உள்ள இயற்கை தாதுக்கள் மற்றும் என்சைம்கள், மனிதர்களுக்கு நன்மையே செய்யும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

காய்ச்சி வடிகட்டி பயன்படுத்த வேண்டும்!

காய்ச்சி வடிகட்டி பயன்படுத்த வேண்டும்!

இதைத்தவிர சில இடங்களில் கிடைக்கும் மழைநீரும் நன்மை தரும் என்றாலும், பொதுவாக மழைநீரை காய்ச்சி வடிகட்டியே, குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

சேகரித்து வைக்கப்பட்ட மழை நீரில், காற்றில் உள்ள தூசுக்கள், பறவைகளின் எச்சங்கள், சிறுபூச்சிகள் மற்றும் ஈ-கோலி வைரஸ் போன்றவை கலந்து இருக்கும், மழைநீர், சற்றே அமிலத்தன்மை மிக்கதாகவும், குறைந்த மினரல்களையும் கொண்டு இருக்கும். எனவே, மழைநீர், அவை இருக்கும் கொள்கலன்களின் உலோகம் மற்றும் கரையாத மினரல்களை அதிகம் ஈர்த்து, அதன்மூலம் மழைநீரில் உலோக மினரல் சேர்க்கை அதிகரித்துவிடும்.

மழைநீரை காய்ச்சும்போது, மேற்கண்ட பாதிப்புகள் தரும் கிருமிகள் மற்றும் மாசுக்கள் நீங்கி விடும்.

வேற்றுமை!

வேற்றுமை!

சாதாரண குடிநீரில் கால்சியம், மக்னீசியம், இரும்பு மற்றும் ப்ளோரைடு கலந்திருக்கும், அதனால் உணவில் அந்த தாதுக்களை குறைவாக எடுத்துக்கொண்டாலும், தண்ணீரைக் குடிப்பதன் மூலம் ஈடுசெய்துவிடலாம். மாறாக மழைநீரில், இந்த தாதுக்கள் இருக்காது, எனவே, உடல் நலத்தில் தாதுக்கள் இழப்பு ஏற்படலாம்.

அணுக்கதிர்வீச்சு அபாயம் உள்ள பகுதிகளில் கிடைக்கும் மழைநீர்.

மழை நீரை அவ்வப்போது சோதிக்க வேண்டியது அவசியமாகும், அதன்மூலம் நீரில் உள்ள அமிலத்தன்மை மற்றும் மாசுக்களின் அளவை நாம் அறிய முடியும். கதிர்வீச்சு அபாயமுள்ள இடங்களில் கிடைக்கும் மழைநீரில், அணுக்கதிர்வீச்சு பாதிக்கும் அபாயம் இருக்கும், அந்த மழைநீரைப் பருகக்கூடாது.

அதிகப் புகைகளை வெளியேற்றும் ஆலைகள், மின்சார நிலையங்கள் மற்றும் காற்று மண்டல பாதிப்புகள் மிக்க நகரங்களில் கிடைக்கும் மழைநீரையும், பருகாமல் இருப்பதே, நலம் தரும்.

அமில மழை!

அமில மழை!

மழை நீர் அமிலத்தன்மை நிறைந்தது, அமிலத்தன்மைகளை குறிக்கும் அளவீடான PH முறையில் அதன் அளவு விகிதம் 5.6 என்ற அளவுகளில் இருக்கும், இது நாம் குடிக்கும் காபியில் உள்ள அமிலத்தன்மையைவிடக் குறைவானது, காபியில் உள்ள பிஹெச் அளவு ஐந்தாகும். ஏழு என்ற அளவு நடுநிலையாகும், அதன் கீழுள்ள அளவுகள் அமிலத்தன்மைகளின் வீரியத்தைக் குறிப்பதாகும்.

ஆயினும் அமிலமழைநீர், ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் முறைகளில் சுத்திகரிக்கப்படும் குடிநீரைவிட தரமானது, மினரல்கள் நிறைந்தது, என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பொருளாதாரப் பலன்கள்!

பொருளாதாரப் பலன்கள்!

மழைநீர் இன்று, பரவலாக மக்களால் அதிகம் உபயோகிக்கப்படுவதற்கு காரணங்கள், பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை விட, அவை சுத்தமானது, செலவும் மிகக் குறைவு, ஒருமுறை செய்யப்படும் கட்டமைப்பு வசதிகள் மட்டுமே! சமையலில் மழைநீரைப் பயன்படுத்தி வந்தால், அதன் அமிலத்தன்மை, உணவுகளை விரைவில் வேக வைத்து, எரிபொருள் சிக்கனத்தை அளித்து, உணவில் ருசியையும் அதிகரிக்கிறது.

எனவே, எந்த அச்சமும் இன்றி, வீடுகளில் மழைநீரைக் காய்ச்சி வடிகட்டி, குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்தலாம். உடலுக்கு நன்மையே, செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is Cooking and Drinking Rain Water Healthy?

Is Cooking and Drinking Rain Water Healthy?
Story first published: Wednesday, February 21, 2018, 10:21 [IST]