அலுவல் சுமையால் மன அழுத்தம் அதிகரிக்கிறதா? எளிதில் வெளிவர என்ன செய்யலாம்?

Posted By: Gnana
Subscribe to Boldsky

சிறிய பாதிப்புகளைக்கூட தாங்கமுடியாமல் பலர், அத்துடன் வாழ்க்கையில் நல்ல விசயங்கள் முடிந்துவிட்டது என்ற அறியாமையில், துவண்டு மனச்சோர்வடைந்து, தாங்கள் பாதிப்பது மட்டுமன்றி, தங்கள் உறவுகளையும் நட்புகளையும், வேதனைக்கு ஆளாக்கிவிடுகிறார்கள்.

அலுவலகத்தில், கடுமையான இலக்கை அடையப்போராடி, விடாமுயற்சியுடன் அந்தப்பணியை முடிக்கும்வேளையில், நிர்வாகத்தின் பாராட்டு, அந்தப்பணிக்கு சற்றும் தொடர்பில்லாத மேலதிகாரிக்கோ அல்லது மற்றவர்க்கோ செல்லும்போது, மனம் நொந்து, இத்தனை கஷ்டப்பட்டு வேலைசெய்தது, அவன் பேரு எடுக்கவா? என்று சுய பச்சாதாபத்தில், உடைந்துபோகிறார்கள்.

சிலர், குடும்பத்திற்காக ஓடாகஉழைத்து, இளைத்துப்போனாலும், பாராட்டும் ஆதரவும் வீட்டிலுள்ள வேறொருவருக்கு செல்லும்போது, நம்காசு மட்டும்வேணும், கொஞ்சுறதுக்கு வேற ஆளா? என்று வேதனைப்பட்டு, யாரிடமும் தம் மனநிலையைப் பகிரமுடியாமல், பரிதவித்து, அன்புக்கும் ஆதரவுக்கும் ஏங்கும் தம்மை, வீட்டினர் கூட புரிந்துகொள்ளவில்லையே, என்று மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். விளைவு? பணிகளில் தொய்வு ஏற்பட்டு, அலுவலகத்தில், நற்பெயரைக்கெடுத்துக்கொள்ளும் நிலையில், மனதளவில் தனிமைப்பட்டு போகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எதனால் ஏற்படுகிறது இந்த மனநிலை? இதை எப்படித்தவிர்ப்பது

எதனால் ஏற்படுகிறது இந்த மனநிலை? இதை எப்படித்தவிர்ப்பது

நாம், பிறந்தவுடன் உடனே பேசிவிட்டோமா? நடந்துவிட்டோமா? அல்லது சிந்திக்கத்தான் ஆரம்பித்துவிட்டோமா? அதனதன்காலம் வரும்போது, அந்தநிலையை அடைந்துதானே, இன்றையநிலையில் இருக்கிறோம்?!

குழந்தைப்பருவத்தில், நாம் நிறைய விளையாட்டுப்பொருட்களுடன் நாட்களைக் கழித்திருப்போம், காலம் செல்லச்செல்ல, அவற்றை மறந்துவிடுவோம், வேறு புதிய பொருட்களில் ஆர்வம்கொள்வோம் தானே!

அதுதானே, வாழ்க்கை! நமது பணியில் நாம் கவனம் செலுத்தினோம், இலக்கை அடைந்தோம், அத்துடன் பணி முடிந்துவிட்டது, பின்னர் அடுத்தகட்டத்துக்கு செல்லவேண்டியதுதானே? பிறகு ஏன் முடிந்த விஷயத்தை நினைத்துக் கொண்டிருக்கிறோம்?

இங்கே, நமக்குக்கிடைத்த விளையாட்டுப்பொருட்கள் போலத்தான், அந்த இலக்கும் என்று எண்ணினால், நாம் அதிலேயே இருக்கமாட்டோம், வேறு இலக்கைநோக்கி பயணிப்போம் அல்லவா?

நாம் ஏற்கெனவே விளையாடிய பொருளை, நாமே வேறு ஒருகுழந்தைக்கு கொடுத்துவிட்டோம் என்று எண்ணினால், நமக்கு மனச்சோர்வு ஏற்படாதே? மாறாக தன்னம்பிக்கையும், பெருமிதமும்தானே ஏற்படும், அந்தநிலை ஏற்பட்டால், மனச்சோர்வு நம்மிடம் இருக்கத் துணியுமா என்ன?

தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?

தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?

நமக்கு முதலில், நம்மேல் நம்பிக்கை இருக்கவேண்டும், அப்படி இல்லாமல், சூழ்நிலைகளின் போக்கில் நாம்செல்ல ஆரம்பித்தால், செயலாற்றல் மங்கிவிடும், இலக்கை அடையமுடியாத நிலை ஏற்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, தன்னம்பிக்கையற்ற நமது செயல்களின்மூலம், மற்றவர்கள் நம்மை குறைத்து மதிப்பிடும் நிலை உண்டாகும். நாம் ஒருவிஷயத்தை மனதில்கொண்டால், அதுவே நம்மை இயக்கி, சூழ்நிலைகளில் சிக்காமல், கொண்ட பாதையில் சென்று, நம் செயலாற்றலை, எல்லோருக்கும் உணர்த்தமுடியும். தன்னம்பிக்கை, ஒருநாளில் வரும்விசயமல்ல, படிப்படியான பயிற்சிகளின் மூலம், செயல்களில், சிந்தனையில், எண்ணங்களில் நேர்மறையை கடைபிடிக்கவேண்டும்.

சிந்தனைகளில் நல்லெண்ணங்கள்!

சிந்தனைகளில் நல்லெண்ணங்கள்!

நாம் அடுத்தவாரம் ஒருபோட்டியில் கலந்துகொண்டு, முதலிடம்பெற விரும்புகிறோம், அதற்காகக்கடுமையாக உழைத்து, பயிற்சிமேற்கொள்கிறோம், இதுவரை சரியாகத்தான் இருக்கிறது, நிச்சயம் சிறப்பிடம்பெறுவோம் என்றே உள்மனம் சொல்லும் சரிதானே?

ஆனால்? நாம் மனதில் அத்துடன், நமக்குப்போட்டியாக இவனும் இருக்கிறானே.. இவன் தோற்கவேண்டும், இல்லாவிட்டால் நமக்கு வாய்ப்பு கிடைக்காது என மற்றவரின் தோல்வியைப்பற்றியே, எப்போதும் சிந்தித்தால் என்னவாகும்?

நேர்மறை சிந்தனையை, இந்த எதிர்மறை பாதித்து, நம்மை தோல்வியடைய வைத்துவிடுவது மட்டுமல்லாமல், யாரை வரக்கூடாது என எண்ணினோமோ அவனே முதலிடம்பெற்று, நம்மை ஆறுதல் கூறித்தேற்றும் நிலையும் ஏற்பட்டுவிடும்.

இது எதனால் ஏற்பட்டது? கொண்ட எண்ணத்தில் உறுதியாக இருந்திருந்தால், நாமும் இந்த வெற்றியை அடைந்திருக்கமுடியுமே, குறுகியமனநிலை, நம்மை நிலைகுலைய வைத்துவிடும். பிறருக்கு கெடுதல் ஏற்படவேண்டும் என்ற தீயஎண்ணமே, நல்லபலன்களை நம்மிடம் இருந்து நிரந்தரமாகப் பிரித்துவிடுகிறது.

நம் இடத்தை நாம் மட்டும்தான் நிரப்பமுடியும், பலரை போட்டியாளர் என்று கருதி, அச்சப்படும்போது, நம்மேல் உள்ள நம்பிக்கையை இழக்கிறோம் என்பதே, உண்மை.

தன்னம்பிக்கையும்.. இள வயது வாழ்க்கையும்!

தன்னம்பிக்கையும்.. இள வயது வாழ்க்கையும்!

ஒருவிதத்தில், தன்னம்பிக்கையை இழக்கவைப்பது, இளவயது வாழ்க்கையும்தான். வீடுகளில் சிறுதவறுக்குகூட, பெற்றோர் கடுமையாகத்திட்டுவது, அடிப்பது, உன்னைவிட சின்னவன் எப்படி இருக்கிறான், நீயும் இருக்கிறாயே தண்டம், எனும் கடும் வார்த்தைகளைக் கொட்டும்போது, அவனுடைய மனநிலையில் அடுத்தவன் மேல் தானாகவே பொறாமை ஏற்பட்டு, அதுவே காலப்போக்கில் வெறுப்பாக மாறி, அந்த மனநிலை, பள்ளி, கல்லூரி முடிந்தும், பணி இடங்களில் வெளிப்பட்டு, தன் மதிப்பை இழக்கவைக்கிறது.

பள்ளிகளில் சில ஆசிரியர்கள், சில மாணவர்களை, மற்ற மாணவர்களுடன் ஒப்பிட்டு நீயும் இருக்கிறாயே, மக்கு எனும்போது, வீட்டில் பெற்றோரிடம் பெற்ற அவமானத்தை, இங்கே ஆசிரியரிடம் பெற்று மீண்டும் சக மாணவர்களிடம் வெறுப்பு ஏற்பட்டு, பணியிடங்களில் அந்த ஆழ்மன வெறுப்பு மீண்டும் ஏற்பட்டு, பணியையே பாதிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்திவிடுகிறது.

கவனம், இந்த மனநிலையை விட்டு விலகுவது, அத்தனை எளிதல்ல!

எப்படி அடைவது நல்ல மனநிலையை?

எப்படி அடைவது நல்ல மனநிலையை?

நாம் திடீரென கோவிலுக்கு செல்ல எண்ணுகிறோம், என்ன செய்வோம்? கோவிலுக்கு செல்லும் மனநிலை இருக்கும்போது, சாமியைத்திட்டுவோமா? மனதில் நம்பிக்கையுடன் சொல்வோம்தானே, வெளியில் எப்படி இருந்தாலும், கோவிலில் இருக்கும்போது, மனதில் அமைதியுடன், ஓரளவு நமது சுபாவம் மாறி நடந்துகொள்வோம்தானே,

அதேபோல, பெரியமனிதர்களைக் காணச்செல்லும்போது, நம்முடைய நிலையில் இருந்து ஒருபடி இறங்கிதானே நடந்துகொள்வோம்? ஞானிகள், மகான்களைக் காணும்போதும் நாம் என்ன செய்வோம்?

ஏன் அப்படி செய்கிறோம்? அவர்களுடைய ஞானத்தை வணங்கும், நம்முடைய மரியாதையை அவர்களுக்கு உணர்த்தத்தானே!

கண்டிப்பான ஆசிரியராக நடந்துகொள்ளுங்கள்!

கண்டிப்பான ஆசிரியராக நடந்துகொள்ளுங்கள்!

அந்த இடங்களில் நாம் மரியாதையை கொடுக்கமுடிகிறது, நம்முடைய வாழ்வில் நற்செயல்களை செய்ய, நல்லநிலையை அடைய, மனதில் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளும்போதும் பெரியோரை வணங்கும் உணர்வுதானே, இருக்கவேண்டும்? அங்கே, எதிர்மறை சிந்தனை வரலாமா?

கடவுளை வணங்கும்போது, இவர் என்ன அத்தனை சக்திவாய்ந்தவரா? அல்லது பெரிய மனிதர்களைக்காணும்போது, இவன் என்ன பெரியஆளா? என்று நாம் எண்ணி இருக்கிறோமா? நம்பிக்கைதானே, அங்கே நம்மை வழிநடத்துகிறது. அதுபோலத்தான், நல்ல எண்ணங்களின்பால் மனதை செலுத்தும்போது, அங்கே குப்பை எண்ணங்களை அனுமதிக்காமல், கண்டிப்பான ஆசிரியரைப்போல, நடந்துகொள்ளுங்கள்.

விடாமுயற்சியுடன் பொறுமையாக, நல்லெண்ணங்கள், நற்சிந்தனை, இலக்குகளில் தீவிரம்கொண்டு செயல்பட்டுவந்தால், நம் சுயமதிப்பீடு உயர்ந்து, நம்மை நிரூபிக்க புதிய சந்தர்ப்பம் தேடிவரும். நம் நேர்மறை எண்ணங்கள், புத்துணர்ச்சி மற்றும் செயல்களில் தெளிவு போன்றவை கண்டு, சகஊழியர்கள் மட்டுமன்றி மேலதிகாரிகளும் நட்புபாராட்டுவார்கள்.

செயல்களில் வேகம்பெற, எண்ணங்களில் ஆற்றலையடைய, வண்ணங்களில் இருக்கிறது, சூட்சுமம்!

மாற்றம்!

மாற்றம்!

நாம் எண்ணங்களில் மாற்றம்கொண்டு, நம்தன்மைகளை மாற்றிக்கொள்ள போராடிக்கொண்டிருக்கிறோம் அல்லவா? அந்தநேரங்களில், நாம் சரியானபாதையில் தான் சென்றுகொண்டிருக்கிறோமோ, நம்மனநிலையில் மாற்றங்கள் சரியான முறையில் ஏற்பட்டுவிட்டதா? என்பதைக்காட்டும் கண்ணாடிதான், வண்ணங்கள்.

நமது எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்தவல்லவை, வண்ணங்கள் என்கின்றனர், உளவியலாளர்கள்.

நாம் பச்சைநிறத்தை அதிகம் உபயோகிக்க ஆரம்பித்தால், நம் மனம் அமைதியாகவும், இலக்கை நோக்கியே பயணிக்கிறோம் என்றும் பொருள். மேலும் புத்துணர்வைத் தூண்டும் அருமையான வண்ணமாகும், பசுமை, பச்சையைப்போலவே, நீல வண்ணமும் மனதிற்கு ஏற்றதே, நீலம்தான், எண்ணங்களின் தன்மையை சரியாக்கி, சிந்தனையை ஒருங்கிணைத்து, செயல்களில் தெளிவை ஏற்படுத்துவதற்கு காரணமாகின்றன.

இலக்கை நோக்கிய விரைவில், சிவப்பு வண்ணம் உறுதுணை புரியும், உத்வேகத்தை அதிகரிக்கும். அதேபோல மஞ்சள் வண்ணமும் மனஉறுதியை, நேர்மறை உணர்வுகளை அதிகரிக்கவல்லது. நற்சிந்தனைகளை, செயலாக்கம் பெறவைக்கிறது.

ஆயினும், பழுப்பு மற்றும் சாம்பல் வண்ணங்கள் நம்மை அதிகம் கவர்ந்தால், நாம் இலக்கைவிட்டு, வேறுதிசையில் பயணிக்கிறோம் என்றுபுரிந்து, தவறைத் திருத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும்.

இத்துடன் நாம் கடைபிடிக்க வேண்டிய மேலும் சில வியங்கள்!

இத்துடன் நாம் கடைபிடிக்க வேண்டிய மேலும் சில வியங்கள்!

பிறரை விமர்சிப்பதையே, வேலையாகக் கொண்டிருக்கும் மனிதர்களிடம் இருந்து விலகவேண்டும். பயனில்லாத பேச்சுகளைக்குறைப்பது, செயலாற்றலை அதிகரிக்கவைக்கும்.

உறவுகள் அல்லது நட்புகளிடம் விசயங்களைப் பகிர்ந்துகொள்வது மனதின் அழுத்தத்தைக்குறைக்கும் ஒருவழி. இங்கே தீர்வு என்பது இரண்டாம்பட்சம்தான், மன அழுத்தம் நம்மைவிட்டு வெளியேற வேண்டும் என்பதே, முக்கியம்.

தனிமையில் இருப்பது, மனதை மீண்டும் பாதிக்கும் என்றாலும், வீண் அரட்டை அடிக்கும் நண்பர்களிடம் இருந்து தனிமையில் இருப்பதும் சிறப்பே. அந்த நேரங்களில் மனதின் எண்ணங்களை கணினியில் எழுதியோ அல்லது பேசி, குரலைப்பதிவு செய்வதன்மூலம், மீண்டும் அவற்றைக்கவனித்துவர, நம்முடைய நிறை குறைகளை உணர்ந்து, நம் இயல்பை விரைவாக, மாற்றியமைக்க ஏதுவாகும்.

நிறைவாக..!

நிறைவாக..!

நம் அனுமதி இல்லாமல், எந்த விசயமும் நம்மை பாதிக்கமுடியாது! நாம் அவற்றை எண்ணுவதைவிட்டு, நம்மில் உறங்கும் நல்லெண்ணங்களைத்தட்டி எழுப்பினால், திருடனைப்போல ஓடியே போகும் மன அழுத்தமெல்லாம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to Kick Out Stress and Get Refreshed Naturally?

How to Kick Out Stress and Get Refreshed Naturally?
Story first published: Monday, February 26, 2018, 18:00 [IST]