For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலுமிச்சை மற்றும் உப்புடன் இந்த பொருளை சேர்த்தால் உங்கள் உடலில் நடக்கும் அதிசயங்கள்

இயற்கையாகவே மருத்துவ குணங்கள் உள்ள பொருட்கள் எலுமிச்சையும், மிளகும்.இந்த இரண்டுடன் உப்பையும் சேர்க்கும்போது அது உங்களின் ஆரோக்கியத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தும். இவை தனித்தனியே சில மருத்துவ குணங்களை

|

நமது இயற்கை வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை. நிறைய செலவு செய்து, பல நாட்கள் சிகிச்சை கொடுத்தும் குணமடையாத பல நோய்களை நமது வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே இயற்கை வைத்தியத்தில் எளிதாக குணப்படுத்தலாம். இயற்கையாகவே மருத்துவ குணங்கள் உள்ள பொருட்கள் எலுமிச்சையும், மிளகும்.

health benefits of salt, pepper and lemon combination

இந்த இரண்டுடன் உப்பையும் சேர்க்கும்போது அது உங்களின் ஆரோக்கியத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தும். இவை தனித்தனியே சில மருத்துவ குணங்களை கொண்டிருந்தாலும் ஒன்றாக இணையும்போது கிடைக்கும் பலன்களே தனிதான். எலுமிச்சை, மிளகு மற்றும் உப்பு இந்த மூன்றையும் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குமட்டல்

குமட்டல்

வயிற்றில் ஏற்படும் சிக்கல்களை குணப்படுத்த ஓர் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் மிளகு போதும். இது இரண்டையும் ஒரு டம்ளர் சுடுநீரில் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து குடித்தால் எப்படிப்பட்ட வயிற்று உபாதைகளும் உடனே சரியாகிவிடும்.

ஆஸ்துமா

ஆஸ்துமா

உங்கள் வீட்டில் யாருக்கேனும் ஆஸ்துமா இருந்தால் இந்த கலவையை எந்நேரமும் வீட்டில் வைத்திருப்பது நல்ல முடிவாகும். கொதிக்கும் நீரில் இரண்டு கிராம்பு, 10 மிளகு மற்றும் சில துளசி தழைகளை போட்டு 15 நிமிடம் கொதிக்க வைக்கவும். இதனை வடிகட்டி தேன் கலந்து குடிக்கவும். இது இரண்டு வாரம் வரை உங்கள் பிரிட்ஜில் கெட்டு போகாமல் இருக்கும். ஆஸ்துமாவிற்கு இதைவிட சிறந்த இயற்கை மருந்து எதுவுமில்லை.

பல் வலி

பல் வலி

அரை ஸ்பூன் கிராம்பு எண்ணெய் மற்றும் அரை ஸ்பூன் மிளகு தூள் இரண்டையும் சேர்த்து வலி இருக்கும் பல்லின் மீது பூசவும். இந்த கலவையில் உள்ள கிராம்பு எண்ணெய் பல் வலியை குறைப்பதுடன் ஈறுகளில் உள்ள வீக்கத்தை குணப்படுத்தும்.

மூக்கில் இரத்தம் வடிதல்

மூக்கில் இரத்தம் வடிதல்

சிறிய பஞ்சை எலுமிச்சை சாறில் மூழ்கி எடுத்து பயன்படுத்துவது மூக்கில் இரத்தம் வடிவதை குறைக்கும். இந்த பஞ்சை மூக்கில் இரத்தம் வரும் இடத்தில் வைத்து இரத்தகசிவு நிற்கும் வரை தலையை சாய்த்து வைத்திருந்தால் போதுமானது.

MOST READ:எமதர்மன் உங்களை நோக்கி வேகமாக வர உங்களின் இந்த செயல்கள்தான் காரணமாம்

சளி மற்றும் காய்ச்சல்

சளி மற்றும் காய்ச்சல்

மெல்லியதாக வெட்டப்பட்ட இரண்டு எலுமிச்சை துண்டுகள் மற்றும் ஒரு ஆரஞ்சு துண்டை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். இதில் சிறிது இஞ்சி, சிறிது மஞ்சள் மற்றும் தேன் சேர்த்துக்கொள்ளவும். உங்களுக்கு எப்போதெல்லாம் உடல்நிலை சரியில்லாமல் போகிறதோ அப்போதெல்லாம் இந்த கலவையில் சிறிது எடுத்து நீருடன் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கவும்.

மூக்கடைப்பு

மூக்கடைப்பு

மூக்கடைப்பை சரிசெய்ய தும்மல் வரவேண்டியது அவசியம். இயற்கையான முறையில் தும்மல் வர இலவங்கப்பட்டை, மிளகு, ஏலக்காய் மற்றும் சீரகம் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக்கொள்ளவும். இதனை நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். மூக்கடைப்பு ஏற்படும்போது இதன் வாசனையை சுவாசித்தால் மூக்கடைப்பு சரியாகும்.

தொண்டை வலி

தொண்டை வலி

மூன்று எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்துக்கொண்டு அதில் மிளகு மற்றும் உப்பு சேர்க்கவும். இதில் ஒரு ஸ்பூன் மற்றும் சூடான நீரை சேர்க்கவும். இந்த கலவையை கொண்டு தினமும் வாய் கொப்பளிக்கவும். இது விரைவில் நிவாரணம் வழங்கும் மேலும் இருமலை கட்டுப்படுத்தும்.

எடை குறைப்பு

எடை குறைப்பு

இது அனைவரும் அறிந்த ஒரு வைத்தியம்தான். எலுமிச்சை சாறில் மிளகு தூள் மற்றும் தேன் சேர்த்து அதில் சூடான நீரை கலந்து தினமும் காலை சாப்பிடுவதற்கு முன் குடித்தால் விரைவில் உங்கள் எடை குறைவதை பார்க்கலாம்.

MOST READ: இன்று முதல் அடுத்த 30 தேதிவரை 12 ராசிக்களுக்கும் என்னென்ன நடக்கும்?... இதோ

வாய்ப்புண்

வாய்ப்புண்

ஹிமாலயன் உப்பு வாய்ப்புண்ணிற்கு சிறந்த மருந்தாகும், இது உங்கள் வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை விரட்ட கூடியது. இந்த உப்பை சூடான நீரில் கலந்து நீங்கள் சாப்பிட்டபின் அந்த நீரில் வாய்கொப்பளிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

health benefits of salt, pepper and lemon combination

Lemon, pepper and salt are the three common ingredients from our kitchen that have been used as medicine since times immemorial.
Story first published: Monday, September 24, 2018, 16:55 [IST]
Desktop Bottom Promotion