For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிராம்பு எண்ணெயின் அற்புத மருத்துவ பலன்கள்

|

கிராம்பு என்பது பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு அற்புத வீட்டு மருந்து பொருளாகும். பழங்காலம் முதலே இது ஆசியாவில் மருந்து பொருளாகவும், சமையல் பொருளாகவும் பயன்பட்டு வருகிறது. 17ஆம் நூற்றாண்டுக்கு பிறகு இதை உலகம் முழுவதும் பயன்படுத்த தொடங்கினார்கள். இது பிரியாணியில் வாசனைக்கு மட்டும் சேர்க்கப்படுவதோடு இதன் எண்ணெய் பல மருத்துவ குணங்களை கொண்டது.

Health benefits of clove oil

இதிலுள்ள பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இதனை மிகச்சிறந்த மருந்து பொருட்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. தற்பொழுதும் இதனை கிராமங்களில் வீட்டு மருந்து பொருளாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். கிராம்பு மற்றும் கிராம்பு எண்ணெயின் அற்புத மருத்துவ பலன்கள் என்னவென்பதை விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பல் ஆரோக்கியம்

பல் ஆரோக்கியம்

பற்களின் ஆரோக்கியத்திற்கு கிராம்பு மிகச்சிறந்த வீட்டு மருந்தாகும். அதனால்தான் அனைத்து பற்பசைகளிலும் கிராம்பு முக்கியமான பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள எதிர் கிருமி பண்பு மற்றும் இதிலுள்ள யூஜெனோல் என்று அழைக்கப்படும் கலவையும் பல் வலிக்கு, ஈறு வலி மற்றும் வாய்ப்புண்ணிற்கு சிறந்த மருந்தாகும். இதில் உள்ள நறுமண பண்புகள் காரணமாக சூடான நீருடன் கிராம்பு எண்ணெயை சிறிது சேர்த்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

வலுவான நோய் எதிர்ப்பு சக்தி

வலுவான நோய் எதிர்ப்பு சக்தி

கிராம்பு எண்ணெய் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில்அற்புத பலன்களை உண்டாக்க கூடியது. கிராம்பு எண்ணெயில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் மாரடைப்பு மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட கூடியது. கிராம்பில் உள்ள மருத்துவ குணம் உங்கள் உடலில் உள்ள இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.

தொற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக்கூடியது

தொற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக்கூடியது

இதில் உள்ள நோயெதிர்ப்பு பண்பின் காரணமாக இது காயங்கள், பாக்டீரியா தொற்று, பூஞ்சை தொற்று பூச்சி கடிகள் போன்றவற்றை விரைவில் குணப்படுத்தக்கூடும். இதனை நேரடியாக பயன்படுத்துவது ஒருவேளை சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். காயம் மிகப்பெரியதாக இருந்தால் இதனை பாதாம் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தலாம். கிராம்பு எண்ணெயால் ஏற்படும் எரிச்சலை இந்த எண்ணெய் சரிசெய்யும்.

தொண்டைப்புண், சளி மற்றும் இருமல்

தொண்டைப்புண், சளி மற்றும் இருமல்

இதில் உள்ள எதிரி அழற்சி பண்பின் காரணமாக இது தொண்டைப்புண், சளி மற்றும் இருமலை எளிதில் குணப்படுத்தக்கூடியது. இது உங்கள் மூக்கு தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்துவதுடன் அனைத்து வகையான சுவாச பிரச்சினைகளையும் சரிசெய்கிறது. மேலும் ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை குணப்படுத்தக்கூடியது.

MOST READ: உணவில் சாதாரண உப்புக்கு பதிலாக இந்துப்பு பயன்படுத்தலாமா? சாப்பிட்டால் என்ன ஆகும்?

தலைவலி

தலைவலி

தொடர்ச்சியான தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? உடனடியாக சமயலறைக்கு சென்று சில துளிகள் கிராம்புடன் உப்பை சேர்த்து தலையில் தடவுங்கள். இதில் உள்ள எதிர் அழற்சி பண்புகள் தலைவலியை குணப்படுத்தும் குளிர்ச்சி பண்புகளை கொண்டுள்ளது. தசை மற்றும் மூட்டு வலிகளுக்கும் இதே முறையில் கிராம்பு எண்ணெயை மருந்தாக பயன்படுத்தலாம்.

சரும ஆரோக்கியம்

சரும ஆரோக்கியம்

கிராம்பு எண்ணெய் சோப்பு, லோஷன்கள் மற்றும் அனைத்து வாசனை திரவியங்களிலும் பயன்படுத்தபடுகிறது ஏன் தெரியுமா? ஏனெனில் இதில் பல அற்புத மருத்துவ குணங்கள் உள்ளது. இதில் யுஜெனால் என்னும் பாக்டீரிய எதிர்ப்பு குணம் காயம், வீக்கம் மற்றும் சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க பயன்படுகிறது. நீங்கள் பயன்படுத்தும் க்ரீம்களுடன் சில துளிகள் கிராம்பு எண்ணெயை கலந்து சருமத்தில் மென்மையாக தடவுங்கள். அதேபோல கிராம்பு எண்ணெயை ஒரு சிறிய பஞ்சில் தேய்த்து சருமத்தில் தடவுங்கள், இது உங்களுக்கு விரைவாக வயதாவதை தடுக்க கூடும்.

செரிமானம்

செரிமானம்

பழங்காலம் முதலே கிராம்பு செரிமானம் மற்றும் வயிறு தொடர்பான பல பிரச்சினைகளை குணமாக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிராம்பு மற்றும் கிராம்பு எண்ணெய் இரண்டிலுமே உள்ள யுஜெனால் வாயு மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்யக்கூடும். மேலும் விக்கல் மற்றும் மலச்சிக்கலையும் குணப்படுத்துகிறது.

அழகிய கூந்தல்

அழகிய கூந்தல்

இந்த எண்ணெய் உங்களுக்கு அழகியா கூந்தலை வழங்கக்கூடும். உங்கள் உச்சந்தலையில் கிராம்பு எண்ணெய் தேய்த்தால் அது முடி உதிர்வை தடுப்பதுடன், முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. மேலும் இது முடியை பளபளப்பாகவும், உறுதியாகவும் மாற்றுகிறது. ஆலிவ் எண்ணெயுடன் சில துளிகள் கிராம்பு எண்ணெய் சேர்த்து தடவுவது சிறந்த கண்டிஷனராக செயல்படக்கூடியது. இதனை செய்து முடித்தவுடன் தலை முடியை ஒரு துண்டால் மூடுங்கள், இருபது நிமிடம் ஊறியவுடன் குளிர்ந்த நீரில் குளியுங்கள்.

MOST READ: சயிண்டிஸ்ட் நித்தியானந்தாவின் ஆரம்பக் கால வாழ்க்கை எப்படி இருந்தது தெரியுமா?

காது வலி

காது வலி

இது காது வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும். சில துளிகள் எள் எண்ணெயுடன் 3 அல்லது 4 துளிகள் கிராம்பு எண்ணெயை சேர்த்து சிறிது சூடுபடுத்தவும். இந்த எண்ணெய் கலவையை உங்கள் காதில் மெதுவாக விடவும். இது உங்கள் காது வலியை விரைவில் குணப்படுத்தி உங்களுக்கு உடனடி நிவாரணத்தை வழங்கும்.

இரத்தத்திலிருந்து நச்சுகளை நீக்குகிறது

இரத்தத்திலிருந்து நச்சுகளை நீக்குகிறது

இது இரத்தத்தை சுத்திகரிப்பதுடன் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. இது இரத்தத்தில் உள்ள நச்சு பொருள்களை நீக்க உதவுகிறது. இந்த வாசனை பொருள் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குவதுடன் இதிலுள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் இரத்த நாளங்களை சீராக செயல்படுத்தி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

கிராம்பு எண்ணெய் இன்சுலினின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. சர்க்கரை நோய் கணைய செல்களை அழித்து நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்க கூடியது. இதனால் இன்சுலின் அளவு பாதிக்கப்பட்டு உடலுக்கு தேவையான இன்சுலின் கிடைக்காமல் போகிறது. தொடர்ச்சியாக கிராம்பு எண்ணெய் எடுத்துக்கொள்ளும் போது இது குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவு சீராக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health benefits of clove oil

Clove oil is one of the richest sources of antioxidants.It is used as an antiseptic and pain reliever especially for toothaches and stomach pain.
Desktop Bottom Promotion