Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
முட்டிவலி ஏற்பட காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்
வயது மட்டுமின்றி நாம் தினசரி செய்யும் சில செயல்களும் நமக்கு முட்டிவலியை ஏற்படுத்துகிறது. நீங்கள் செய்யும் சாதாரண செயல்கள் கூட உங்களுக்கு கடுமையான முட்டிவலியை ஏற்படுத்தும்.
முட்டிவலி என்பது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினையாகும். முட்டிவலி வந்தால் அன்றாட வேலைகளை செய்வது கூட மிகவும் சிரமமானதாக மாறிவிடும். முட்டிவலி ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். அதில் மிக முக்கியமான ஒரு காரணம் வயது ஆகும்.

வயது மட்டுமின்றி நாம் தினசரி செய்யும் சில செயல்களும் நமக்கு முட்டிவலியை ஏற்படுத்துகிறது. நீங்கள் செய்யும் சாதாரண செயல்கள் கூட உங்களுக்கு கடுமையான முட்டிவலியை ஏற்படுத்தும். இந்த பதிவில் உங்களுடைய எந்தெந்த செயல்கள் உங்களுக்கு முட்டிவலியை ஏற்படுத்துகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

உடல் எடை அதிகரித்தல்
உங்களுடைய அதிக எடை ஆஸ்டோபோரோசிஸ் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. உங்கள் வயது மற்றும் உடல் அளவிற்கு ஏற்றவாறு உங்கள் உடல் எடையை பரமரிக்க வேண்டியது அவசியம். வயது மற்றும் உடல் அளவை விட அதிக எடை இருக்கும்போது அது உங்கள் முட்டியின் மீது அதிக அழுத்தத்தை உண்டாக்கும். இதனால் முட்டிவலி மற்றும் காயங்களை உண்டாக்கும்.

தவறான காலணிகள்
உங்கள் காலுக்கு பொருத்தமான காலணிகளை அணிய வேண்டியது அவசியம். ஏனெனில் இவை உங்கள் காலுடைய சீரான அமைப்பை மாற்றக்கூடும். பொருத்தமான காலணிகள் அணியும்போது அது உங்கள் காலுடைய அமைப்பு மற்றும் சமநிலையை பாதுகாக்கும். அது தவறும் பட்சத்தில் கால் மூட்டுகளில் வலி ஏற்படும்.

தயாராகுதல்
சரியான முன்னெச்சரிக்கைகள் இல்லாமல் உடற்பயிற்சி செய்ய தொடங்காதீர்கள். முறையான வாரம் அப் இன்றி கை, கால்களை நீட்டுதல், மடக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடும்போது அது கை, கால் மூட்டுகளில் எதிர்பாராத அழுத்தத்தை உண்டாக்கும். இதனால் முறிவுகள் கூட ஏற்படலாம்.

குறைந்த அழுத்தமுள்ள உடற்பயிற்சிகள்
அதிக அழுத்தமுள்ள உடற்பயிற்சிகளை ஜிம்மில் செய்வதை தவிர்க்கவும். எப்பொழுதும் கால்களில் அதிக அழுத்தம் கொடுக்கும் பயிற்சிகளை செய்யவும்.

தூங்கும் முறை
நீங்கள் தூங்கும் முறை கூட சிலசமயம் உங்களுக்கு முட்டிவலியை ஏற்படுத்தலாம். இரவில் தூங்கும்போது கால்களை ஒரே நிலையில் வைத்தபடி தூங்குவது, கால் மேல் கால் போட்டு கொண்டு தூங்குவது போன்றவை கால்களின் மூட்டுகளில் தசைப்பிடிப்பை ஏற்படுத்தும்.

சோம்பேறித்தனம்
உடல் இயக்கங்கள் குறையும்போது ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்படும். உடல் சுறுசுறுப்பு குறையும்போது தசைகள் பலவீனமடையும் மேலும் மூட்டுகளில் பிளவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முடிந்தவரை உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க பழக்குங்கள் அதுவே உங்கள் உடலுக்கு நல்லது.

உணவுகள்
சில உணவுகள் கூட முட்டிவலியை உண்டாக்கும். குறிப்பாக வாயு நிறைந்த உணவுகள் எப்பொழுதும் முட்டிவலியை உண்டாக்கும். கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, சுரைக்காய் போன்ற காய்கறிகள் முட்டிவலியை உண்டாக்க கூடும். சீரான உணவுமுறையை பின்பற்றுவதும் உங்கள் முட்டிவலியை குறைக்கும்.

நோய்கள்
சில ஹார்மோன் குறைபாடுகள் மற்றும் நோய்களும் கூட முட்டிவலியை உண்டாக்கும். பர்ட்டிசிஸ், ஆர்திரிடிஸ், பாடேலோபார்மல் போன்ற நோய்கள் முட்டிவலியை உண்டாக்கும். இதனால் நடக்கும் போதோ, கைகளை ஊன்றும்போதோ வலி ஏற்படும். இதுபோன்ற குறைபாடுகள் லூக்கோமியா போன்றவற்றை உருவாக்கும். இதனால் எலும்புமுறிவு எளிதாக ஏற்படும்.

உடற்பயிற்சிகள்
மிதமான உடற்பயிற்சிகள் உங்கள் தசைகளை வலிமையாக வைத்திருக்க உதவும். தினமும் அளவான நடைப்பயிற்சி, தொடைகளை வலுவாக்கும் பயிற்சி முக்கியமாக பைக் ஓட்டும்போது சீட் மிகவும் தாழ்வாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதேபோல கை தசைகளை வலிமையாக வைத்திருக்க தண்டால் போன்ற உடற்பயிற்சிகளை செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications
