ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு நம் முன்னோர்கள் பயன்படுத்திய சில விசித்திரமான வைத்தியங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இன்று அனைவருமே நாம் அன்றாடம் சந்திக்கும் சில பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காண நினைக்கிறோம். தற்போது பலர் தங்களுக்கு ஏதேனும் ஒரு வலி வந்துவிட்டாலோ அல்லது அரிப்பு ஏற்பட்டாலோ, அதற்கான காரணம் என்ன, அதை எப்படி வீட்டிலேயே சரிசெய்வதென்று இணையத்தில் தேடுவார்கள். அந்த அளவில் நெட் இல்லாத ஆளும் இல்லை, வீடும் இல்லை. சொல்லப்போனால், அது நம் வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

Bizarre Home Remedies Our Grandparents Used That Actually Work!

Image Courtesy: dietoflife

இது தவறல்ல. நெட் இருப்பதால் தான், நம்மால் பல விஷயங்களை இணையத்தளங்களில் படித்து தெரிந்து கொள்ள முடிகிறது. அதில் இந்த இணையப் பக்கத்தில் நீங்கள் பார்க்கப் போவது நம் முன்னோர் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு பயன்படுத்திய சில விசித்திரமான வைத்தியங்கள் குறித்து தான். என்ன தான் நம் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகள், க்ரீம்கள், லோசன்கள் என்று இருந்தாலும், அதை வாங்க நிச்சயம் அதிக பணம் தேவைப்படும்.

ஆனால் இயற்கை வைத்தியங்களுக்கு அதிக பணம் தேவைப்படாது. வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களே போதுமானது. பழங்காலத்தில் எல்லாம் மருத்துவமனைகள் அதிகமாக பயன்படுத்தப்படவில்லை. பெரும்பாலும் கை வைத்தியங்களின் மூலமே தீர்வு காண்பார்கள் நம் முன்னோர்கள். இங்கு நம் முன்னோர்கள் அக்காலத்தில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பயன்படுத்தி வந்த சில விசித்திரமான வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமான பிரச்சனைகளுக்கு ஆப்ரிகாட்

செரிமான பிரச்சனைகளுக்கு ஆப்ரிகாட்

உங்களுக்கு வயிறு உப்புசம் அல்லது மலச்சிக்கல் பிரச்சனை உள்ளதா? அப்படியானால் அருகில் உள்ள கடைக்கு சென்று உலர்ந்த ஆப்ரிகாட்டை வாங்குங்கள். இதனை ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்பும் ஒரு கையளவு சாப்பிடுங்கள். இதனால் உலர்ந்த ஆப்ரிகாட்டில் உள்ள அதிகப்படியான டயட்டர் நார்ச்சத்து, அஜீரண பிரச்சனைகளில் இருந்து உடனே விடுவிக்கும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள்.

வாய் துர்நாற்றத்திற்கு வேப்பங்குச்சி

வாய் துர்நாற்றத்திற்கு வேப்பங்குச்சி

உங்கள் தாத்தா அல்லது பாட்டி வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்வதற்கு எப்போதாவது சூயிங் கம் பயன்படுத்தியதை பார்த்திருக்கிறீர்களா? நிச்சயம் இருக்காது. சொல்லப்போனால் அவர்களுக்கு வாய் துர்நாற்ற பிரச்சனையே இருக்காது. இதற்கு காரணம் அவர்கள் தினந்தோளும் தங்களது பற்களை வேப்பங்குச்சியைக் கொண்டு துலக்குவது தான். எனவே உங்களுக்கு வாய் துர்நாற்ற பிரச்சனை இருந்தால், வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்குங்கள்.

சிறுநீரக பாதை தொற்றுகளுக்கு பேக்கிங் சோடா

சிறுநீரக பாதை தொற்றுகளுக்கு பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா ஏராளமான நன்மைகளை வாரி வழங்கும் ஓர் அற்புதமான பொருள். இந்த பேக்கிங் சோடா நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுவிப்பதோடு, சிறுநீரக பாதை தொற்றுக்களையும் தான் சரிசெய்ய உதவும். அதற்கு நீரில் சிறிது பேக்கிங் சோடாவை கலந்து குடியுங்கள். இதனால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, சிறுநீர்ப்பை சுத்தமாக இருக்கும். ஒருவேளை சிறுநீரக பாதை தொற்றுகள் தீவிரமாக இருந்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

சிலந்திக்கடிக்கு உருளைக்கிழங்கு

சிலந்திக்கடிக்கு உருளைக்கிழங்கு

உங்களை சிலந்தி கடித்துவிட்டதா? அச்சம் கொள்ள வேண்டாம். வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா? அந்த ஒன்றே போதும். உருளைக்கிழங்கில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், சிலந்திக் கடியால் ஏற்படும் அரிப்பைப் போக்கும். அதற்கு உருளைக்கிழங்கை துண்டாக்கி, சிலந்தி கடித்த இடத்தில் வைத்து துணியால் கட்டிக் கொள்ளுங்கள் அல்லது உருளைக்கிழங்கை சிலந்தி கடித்த இடத்தில் தேய்த்துவிடுங்கள். இதனால் நல்ல தீர்வு உடனே கிடைக்கும்.

ஹார்மோன் ஏற்றத்தாழ்விற்கு கருணைக்கிழங்கு

ஹார்மோன் ஏற்றத்தாழ்விற்கு கருணைக்கிழங்கு

கருணைக்கிழங்கில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. இவை பெண்கள் அடிக்கடி சந்திக்கும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய உதவும். குறிப்பாக இறுதி மாதவிடாயை நெருங்கும் பெண்கள், கருணைக்கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் மனநிலை மாற்றங்களைத் தடுக்கலாம்.

ஆர்த்ரிடிஸ் பிரச்சனைக்கு உலர் திராட்சை

ஆர்த்ரிடிஸ் பிரச்சனைக்கு உலர் திராட்சை

சொன்னால் நம்பமாட்டீர்க்ள, நம் முன்னோர்கள் ஆர்த்ரிடிஸ் பிரச்சனைக்கு உலர் திராட்சையைப் பயன்படுத்தினார்கள். எனவே உங்களுக்கு ஆர்த்ரிடிஸ் பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், உலர் திராட்சையை சாப்பிடுங்கள். அதுவும் இரவில் படுக்கும் முன் சிறிது உலர் திராட்சையை சிறிது ஜின்னில் ஊற வைத்து, மறுநாள் காலையில் ஜின்னுடன் சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்.

தலைமுடி உதிர்வைத் தடுக்க நெட்டில் இலைகள்

தலைமுடி உதிர்வைத் தடுக்க நெட்டில் இலைகள்

நாம் ஒவ்வொருவரும் வாழ்வின் ஒரு கட்டத்தில் தலைமுடி உதிர்வால் அவஸ்தைப்படுவோம். இந்த பிரச்சனைக்கு பலர் கடைகளில் விற்கப்படும் கண்ட எண்ணெய்கள் மற்றும் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்திருக்காது.

ஆனால் நம் முன்னோர்கள் தலைமுடி உதிர்வைத் தடுக்க நெட்டில் இலைகளைப் பயன்படுத்தினார்கள். இதில் தலைமுடியின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளது. தலைமுடி உதிர்வதைத் தடுக்க 4-5 நெட்டில் இலைகளை ஒரு கப்பில் போட்டு, அதில் கொதிக்கும் நீரை ஊற்றி சிறிது நேரம் நன்கு ஊற வைத்து, பின் அந்நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

முக்கியமாக நெட்டில் இலைகளில் சிலிகா அதிகம் உள்ளது. அதிகளவு சிலிகா தலைமுடிக்கு பாதிப்பை உண்டாக்கும். எனவே அளவாகவே பயன்படுத்துங்கள்.

பயணத்தின் போது வாந்திக்கு ஆலிவ்

பயணத்தின் போது வாந்திக்கு ஆலிவ்

ஆலிவ் பழங்கள் மிகவும் சுவையானது மட்டுமின்றி, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டதும் கூட. ஆலிவ் பழத்தில் உள்ள டேனின்கள், வாயில் அதிகளவு எச்சில் சுரப்பதைத் தடுத்து, வாந்தி வருவது போன்ற உணர்வைத் தடுக்கும். எனவே அடுத்த முறை வெளியே எங்கேனும் செல்வதாக இருந்தால், ஆலிவ் பழங்களை உங்கள் பையில் போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் இந்தியாவில் பெரும்பாலும் ஆலிவ் பழத்திற்கு பதிலாக எலுமிச்சையைப் பயன்படுத்துவார்கள்.

காது வலிக்கு எலுமிச்சை சாறு

காது வலிக்கு எலுமிச்சை சாறு

நம் அனைவருக்குமே எலுமிச்சையின் மருத்துவ குணங்களும், அதனால் கிடைக்கும் நன்மைகளும் தெரியும். ஆனால் எலுமிச்சை காது வலியை சரிசெய்யும் என்பது தெரியுமா? ஆம், நம் முன்னோர்கள் காது வலிக்கும் போது, சிறிது எலுமிச்சை சாற்றினை காதுகளில் விடுவார்கள். அதனால் எலுமிச்சை pH அளவை நடுநிலையாக்கி, விரைவில் வலியில் இருந்து விடுவிக்கும். ஒருவேளை காது வலி தாங்க முடியாத அளவில் இருந்தால், அப்போது இம்மாதிரியான கை வைத்தியங்களை மேற்கொள்ளாமல், சற்றும் தாமதிக்காமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

பூண்டு நாற்றத்தைப் போக்குவதற்கு பார்ஸ்லி

பூண்டு நாற்றத்தைப் போக்குவதற்கு பார்ஸ்லி

பூண்டு சாப்பிட்டால், வாய்வு பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்காது என்று சிலர் பூண்டு அதிகமாக சாப்பிடுவார்கள். பூண்டு சாப்பிட்டால், அது வாயில் இருந்து கடுமையான துர்நாற்றத்தை உண்டாக்கும். ஆனால் இந்த நாற்றத்தை பார்ஸ்லி போக்கும். ஆகவே பூண்டு சாப்பிட்ட பின், சிறிது பார்ஸ்லியை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் பூண்டு நாற்றம் போவதோடு, வாய் நன்கு புத்துணர்ச்சியுடன் துர்நாற்றமின்றி இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bizarre Home Remedies Our Grandparents Used That Actually Work!

Here are some bizarre home remedies our grandparents used that actually work. Read on to know more...
Story first published: Tuesday, March 6, 2018, 18:06 [IST]