உங்க வாய் துர்நாற்றம் உங்களுக்கே சங்கடமா இருக்கா?... இனி அந்த கவலையே வேண்டாம்... இது உங்களுக்குதான்.

Posted By: Kripa Saravanan
Subscribe to Boldsky

வாய் துர்நாற்றம் உள்ள மனிதர்களை நாம் பலமுறை கடந்து வந்திருக்கலாம். அல்லது ஒரு வேளை நீங்களே கூட வாய் துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களை பலரும் ஒதுக்கி இருக்கலாம். இந்த சூழ்நிலை நிச்சயமாக ஒரு வித சங்கடத்தை நிச்சயம் உண்டாக்கும்.

காரணங்கள்

வாய் துர்நாற்றத்தை ஹளிடோசிஸ் என்று சொல்வார்கள். இது ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. நாம் உண்ணும் உணவைப் பொறுத்து வாய் துர்நாற்றம் உண்டாகலாம். அல்லது மருந்து பயன்பாடு , ஈறு பிரச்சனை, புகை பிடித்தல் அல்லது வறண்ட வாய் அல்லது உதடு போன்றவையும் வாய் துர்நாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்.

mouth odur

வீட்டு வைத்தியம்

பற்களின் இடையில் அல்லது நாவின் பின்புறம் உருவாகும் கிருமிகளே பெரும்பாலும் வாய் துர்நாற்றத்திற்கான முக்கிய காரணிகளாகும். வாய் வழி சுகாதாரத்தை பேணுவதே இதனை போக்க சிறந்த வழி. வாய் துர்நாற்றத்தை போக்க சில எளிய வீட்டு வைத்தியம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது . இவற்றை முயற்சித்து வாய் துர்நாற்றத்தை விரட்டி அடிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோம்பு :

சோம்பு :

வாய் துர்நாற்றத்தை போக்கி வாயில் நறுமணம் வீச சோம்பு விதைகள் பெரிய உதவியை செய்கின்றன. சோம்பில் இருக்கும் கிருமியை எதிர்த்து போராடும் தன்மை, வாயில் உள்ள கிருமிகளை அழிக்கிறது. ஒவ்வொரு முறையும் உணவு சாப்பிட்டவுடன் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மெல்லுவதால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும். அல்லது சோம்பு டீயும் பருகலாம். அதனால் தான் ஹோட்டல்களில் சாப்பிட்டு முடித்தவுடன் சோம்பு கொடுக்கிறார்கள்.

வெந்தயம் :

வெந்தயம் :

வாயில் உள்ள துர்நாற்றத்தைப் போக்க வெந்தயம் மிகவும் நல்லது. வெந்தயம் சேர்த்து தயார் செய்த டீயை பருகுவதால் வாய் துர்நாற்றம் உடனடியாக கட்டுப்படும். தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 1 ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து , பின் வடிகட்டி பருகவும். ஒரு நாளைக்கு ஒரு முறை இதனை செய்யலாம்.

கிராம்பு :

கிராம்பு :

வாய் துர்நாற்றத்தைப் போக்கி நறுமணம் பெற கிராம்பை பயன்படுத்தலாம். கிராம்பில் இருக்கும் அன்டி பாக்டீரியல் தன்மை, வாய் துர்நாற்றத்தை முற்றிலும் விரட்டுகிறது. உங்கள் தினசரி உணவிற்கு பிறகு 2 துண்டு கிராம்பு உட்கொள்வதால் வாயில் வீசும் துர்நாற்றம் முற்றிலும் ஒழியும். கிராம்பு போட்டு தயார் செய்யப்பட்ட டீயும் நல்ல பலனை தரும். அதோடு பல் மற்றும் ஈறுகளில் உண்டாகும் வலியும் போய்விடும்.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை பழத்தில் இருக்கும் அமிலத்தன்மை , வாயில் கிருமிகள் வளர்வதை அழிக்கிறது. ஒரு டம்ளர் நீரில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறை கலந்து, அந்த நீரால் வாயை கொப்பளித்து வரலாம். இதனால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும். தினமும் இரவு தூங்கும்முன்னும் காலையில் பல் துலக்கிய பின்னும் இதை செய்யலாம்.

ஆப்பிள் சிடர் வினிகர் :

ஆப்பிள் சிடர் வினிகர் :

ஆப்பிள் சிடர் வினிகர் வாய் துர்நாற்றத்தை போக்க மிகச் சிறந்த வீட்டு வைத்திய பொருளாகும். இதில் இருக்கும் சமச்சீரான pH அளவால் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. தினமும் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து கலந்து கொப்பளித்து வருவதால் விரைவில் வாய் துர்நாற்றம் மறையும்.

பட்டை :

பட்டை :

லவங்க பட்டையில் சின்னமிக் அல்டிஹைடு இருப்பதால் , வாய் துர்நாற்றம் அழிக்கப்படுகிறது. இது வாயில் இருக்கும் கிருமிகளின் எண்ணிக்கையை குறைக்கிறது. ஒரு கிண்ணத்தில் நீரை விட்டு நன்றாக கொதித்ததும் சிறிதளவு லவங்க பட்டை தூளை சேர்க்கவும். இதனுடன் சிறிது பிரிஞ்சி இலை மற்றும் ஏலக்காயைச் சேர்க்கவும். நன்றாக கொதித்தவுடன் அந்த நீரை வடிகட்டி அடிக்கடி வாயை கொப்பளிக்கவும்.

டீ ட்ரீ எண்ணெய் :

டீ ட்ரீ எண்ணெய் :

டீ ட்ரீ எண்ணெயில் இருக்கும் ஆன்டிசெப்டிக் தன்மையால் இது ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. ஒரு கிளாஸ் நீரில் சில துளிகள் டீ ட்ரீ எண்ணெய், புதினா எண்ணெய் மற்றும் எலுமிச்சை எண்ணெய் சேர்த்து கலந்து . அதனை பயன்படுத்தி அடிக்கடி வாய் கொப்பளிக்கலாம்.

சூயிங் கம் :

சூயிங் கம் :

சர்க்கரை அல்லது இனிப்பு சேர்க்கப்படாத சுயிங்கம்மை மெல்லுவதால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும். இதனால் ஆரோக்கியமான உமிழ்நீர் வாயில் சுரக்கும். குறிப்பாக புதினா சேர்த்து தயாரிக்கப்பட்ட சுயிங் கம்மை மெல்லலாம்.

கொத்துமல்லி :

கொத்துமல்லி :

வாய் துர்நாற்றத்தைப் போக்க ஒரு சிறந்த மற்றும் எளிய வீட்டு வைத்தியம் கொத்தமல்லி . கொத்தமல்லி இலையில் இருக்கும் பச்சையம் (க்ளோரோபில்கள்) மிகச் சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு வாய் துர்நாற்றத்தை அகற்றுகிறது. கொத்தமல்லி இலைகளை சிறிதளவு வாயில் போட்டு மெல்லலாம்.

உப்பு நீர் :

உப்பு நீர் :

வாயின் pH அளவை பராமரித்து சுத்தம் செய்ய உப்ப நீரைப் பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த கிருமினாசினியும் கூட. வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து ஒவ்வொரு நாளும் காலையில் கொப்பளிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Home Remedies For Bad Breath

Is bad breath bogging you down? Here are some quick home remedies that will leave you feeling confident in no time.
Story first published: Thursday, March 15, 2018, 7:30 [IST]